Header Ads



ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில், கட்சி பிளவுபடாது தடுத்த கரு - பகிரங்கமாக பாராட்டினார் ரணில்

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிகளின் முழுமையான ஆதரவை பெற்றதை போலவே தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் ஏனைய கட்சிகளினதும் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் கூடிய ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் சகல உறுப்பினர்களும் கூடி ஆராய்ந்தனர். 

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க:-  

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரத்திதலைவர் சஜித் பிரேமதாசவை தெரிவுசெய்து எமது கூட்டணியின் சார்பில் களமிறக்க தீரமானம் எடுத்துள்ளோம். இனிமேல் எம்மில் எந்த பேதங்களும் முரண்பாடுகளும் கருத்து மோதல்களும் இல்லாது நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வேண்டியதே எமது நோக்கமாக இருக்க வேண்டும். 

இதில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியாக கைகோர்த்துள்ள சகல கட்சிகளிண்டதும் ஒத்துழைப்புகளை நாம் பெற்றுக்கொள்வதை போலவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சிகளினதும் ஆதரவையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதே அவசியமானதாகவும். 

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அவர்களை எமக்கு ஆதரவாக  செயற்பட  வைக்கும் நடவடிக்கைகள்  முன்னெடுக்க முயற்சிகளை நாம் கையாள்வோம். 

அதேபோல் வடக்கு கிழக்கில் உள்ள ஏனைய கட்சிகளுடனும் பேசுவதை போலவே மலையக கட்சிகள் சிங்களக் கட்சிகள் முஸ்லிம் கட்சிகள் என அனைவரின் ஆதரவையும் பெற்று கூட்டணியை வெற்றிபெற செய்வோம். 

மேலும் சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கும் நன்றிகளை கூற விரும்புகின்றேன். கட்சியை பிளவுபடாது முன்னெடுக்க முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியவர் அவரே. ஆகவே அவருக்கும் நன்றிகளை கூறுகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. பல சிறிய கட்சிகளின் தலைவர்கள் இப்போது சஜித்துடன் சேர்ந்த இறுமாப்பில் மடத்தனமாக ரணிலை விமர்சிக்கவோ, குறைகூறவோ முற்படாதீர்கள். ரணில் தன்னுடைய கையில் ரிமூட் கொன்ரோலை வைத்திருக்கின்றார். மற்ற கட்சிகளைக் கையில் போட்டுக்கொண்டது போல் டீ.என்.ஏ ஐ இலகுவாகப்படே முடியாது. அதன் மூக்கணாங் கயிறும் துரும்பும் ரணில் கையில் இருக்கின்றது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.