Header Ads



பிரதமராக, கட்சி தலைவராக ரணில் தொடரலாம் - நான் போட்டியிட்டாலே, கோட்டாவை வெல்லமுடியும் - சஜித்

- Mano Ganesan - 

பிரதமராகவும், யூஎன்பி கட்சி தலைவராகவும் ரணில் தொடரலாம். தான் ஜனாதிபதியாக போட்டியிட்டாலேயே, நமது அணி கோட்டாவை வெல்ல முடியும். ஆகவேதான் நான் போட்டியிட விரும்புகிறேன் என்று சஜித் என்னிடம் சொன்னார்.

யூஎன்பி தலைவர்தான், கூட்டணி தலைவராகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஐதேகவும், கூட்டணியும் சமச்சீராக பயணிக்கும். அன்றில், கூட்டணி பெயரளவில்தான் இருக்கும். கூட்டணிகாரர்கள் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு, பின் கழற்றி விடப்படுவார்கள். 

அதை இனி அனுமதிக்க முடியாது. ஜனாதிபதி தேர்தல், கூட்டணியின் பெயர்-சின்னத்திலேயே நடைபெற வேண்டும். முதலில் இவை பற்றி நாம் பொது உடன்பாட்டுக்கு வர வேண்டும். இவை நான் சஜித்துக்கு சொன்னது.

சிங்கள பெளத்த, தமிழ்-முஸ்லிம், புது சூழலில் கத்தோலிக்க, சிவில் சமூக, கிராமிய, நகரிய தொழிலாளர், தோட்ட தொழிலாளர், மத்திய கிழக்கு பணியாளர், வர்த்தக சமூக, தொழில் வல்லுனர், புதிய தலைமுறை, பெண்கள் இப்படி பல சமூக அடுக்குகள் உள்ளன. 

அனைவரையும் அதிகம் கவர என்ன செய்வோம் என்பதை தீர்மானிப்போம். 

நீங்களோ, ரணிலோ எவராக இருந்தாலும், அவர் குழு தலைவரே (team leader) தவிர, இனி இங்கே தனி தானை தலைவர் இல்லை என்று முதலில் உடன்படுவோம். தேர்தல் விஞ்ஞாபனத்தை, வழமைபோல் "பண்டிதர்"களிடம் முற்றாக ஒப்படைக்காமல் மக்கள் பிரதிநிதிகளாகிய நாமே கூட்டாக உருவாக்குவோம். இவை நான் சொல்ல போவது.

1 comment:

Powered by Blogger.