Header Ads



ஒரு நாட்டுக்குள் ஒரு, சட்டமே இருக்க வேண்டும் - கோட்டாபய

ஒரு நாட்டுக்குள் ஒரு சட்டமே இருக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது மாநாட்டில் வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சட்டம் தொடர்பான எண்ணக்கருவே ஒரு நாகரிக சமூகத்தின் அடித்தளமாகும் என்று சொன்னால் அது தவறாகாது.

சட்டத்தின் நீதியான ஆட்சிதான் ஜனநாயகத்தின் பொற்காலம் ஆகும். மக்களின் நலனுக்காகவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும் இது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவன அமைப்பை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. ஒரு நாட்டுக்குள் இருவேறு சட்டங்கள் இருக்கக் கூடாது. சட்டம் சகலருக்கும் சமனாக இருக்க வேண்டும். இந்த நாட்டின் பிரஜைகள் எப்போதும் சட்டத்தை மதிப்பவர்களாக மாற வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.   

Dc

8 comments:

  1. அப்போ, முஸ்லிம் சட்டங்கள் ?

    ReplyDelete
  2. Welcome back to Law.YOUR
    FAMILY DESTROYED OUR COUNTRY LAW IN THE PAST.BUDHIST WISE PEOPLE DEFEAT YOU.INSHA ALLAH

    ReplyDelete
  3. after came ,problem will start for minority people ,cunning thief

    ReplyDelete
  4. அப்போ தேரர்களுக்கு வேறு சட்டமோ... முதலில் காடைத்தனம் புரியும் தேரர்களுக்கு சொல்லுங்கள்

    ReplyDelete
  5. ஒரு நாட்டுக்குள் ஒரு சட்டம் என்றால் ஏனடா ஜனாதிபதிக்கு மட்டும் சட்டத்தில் விதிவிலக்கு ?

    நாட்டுக்கு ஒரு சட்டம் என்றால் ஏனடா பொளத்த மதத்திற்கு இங்கே முன்னுரிமை.

    நாட்டுக்கு ஒரு சட்டம் என்றால் ஏன் சிறுவர்களுக்கு வித்தியாசமான சட்டம் ?

    நாட்டுக்கு ஒரு சட்டம் பொதுவிதிகளுக்கத்தான் என்பதகூட விளங்காததுகள்தான் ஜனாதிபதி ஆகப்போவுதாம்!!!!!!

    ReplyDelete
  6. Not only Muslim law Mr.Ajan. What about Thesavalamai(personal law for Jaffna Tamils) and Kandian law (personal law for people in Kandy).

    ReplyDelete
  7. Ajan! Athu theisa valamai sattamthane???

    ReplyDelete
  8. இந்தப்பொய்மூட்டைக்கு தான் என்னசொல்வது என்பது நிச்சியமாகத் தெரியாது. ஆனால் பொய்மூட்டைக்குப் பின்னால் திட்டம் போட்டுக்கொடுக்கும் ஒரு காபிர் கூட்டம் மிகவும் நுணுக்கமாகத் திட்டத்தைத் தீட்டிக்கொடுக்கின்றது. எனவே இது போன்ற பொய் மூட்டையின் பேச்சினை மிகக் கவனமாக ஆராய்ந்து முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.