September 14, 2019

ஹக்கீமுடைய பெரும்தன்மை கலந்த, நல்ல மனசு - பசீருக்கும் திருமணத்திற்கு அழைப்பு (படம்)


மு.கா. தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமுடைய, இளைய மகளின் திருமணம், கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இதில் மு.கா. முன்னாள் தவிசாளர், பசீர் சேகுதாவுத்தும் பங்கேற்றார்.

ஹக்கீமை அவமானப்படுத்தி, முகநூலில் அச்சுறுத்தல் விடுத்து, கேவலமான விமர்சனங்களை முன்வைத்து கடந்த காலங்களில்  நாகரீகமற்ற, தனிப்பட்ட தாக்குதல்களை பசீர் தொடுத்திருந்தார்.

மு.கா. தலைவர் ஹக்கீமுடைய தனிப்பட்ட பலவீனங்களையும், குறைகளையும் அம்பலப்படுத்துவதாக பசீர் அடிக்கடி கடைந்த காலங்களில் அறிவிப்பும் செய்திருந்தார்.

இந்நிலையிலேயே ஹக்கீம், தனது மகளுடைய திருமணத்திற்கு பசீருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த அழைப்புக்கமைய பசீரும், திருமணத்தில் பங்கேற்றுள்ளார்.

5 கருத்துரைகள்:

கடந்த காலங்கள் எப்படியோ,ஆனால் இப்போது எமது சமூகத்துக்கு தேவை ஒற்றுமை.

Neither permanent friends nor permanent enemies in politics only permanent interest.

ஏதோ பசீரும் முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்குப் பணியாற்றியுள்ளார். எப்படிப் பணியாற்றினார் என்பது இனி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகும். ஹக்கீம் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டதன்மூலம் பஷீர் தனது பழைய நண்பர்களையும் உள்ளுர் வெளிநாட்டு அரசியல் மற்றும் சமூகதாரிகளையும் ஒன்றுசேர சந்தித்து அளவளாவ சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. முஸ்லிம் காங்கிரசில் உள்ள அனைவரும் கட்சியின் பெயரிலேயே பிரபல்யத்துடன் இருக்கின்றனர். கட்சி இல்லாவிட்டால் இவர்களும் இல்லை. Jaffna Muslim இன் தலைப்பிலுள்ள 3, 4ம் பந்திகள் தேவையற்றனவாகும்.

இது ஒரு தேவையற்ற செய்தி, இது முகநூல் அல்ல.

Hakeem’s son-in-law, the groom was wearing a North Indian style suit and the prominent invitees were South Indian politicians. Does it mean Hakeem is an Indian origin?

Post a Comment