Header Ads



போரா சமூகத்தின் மாநாடு, கட்டுநாயக்காவின் பயணிகள் திண்டாட்டம், போக்குவரத்தும் நெருக்கடி

கொழும்பில் நடைபெற்று வரும் போரா மாநாடு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் மக்கள் கடுமையான நெரிசலுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற பயணிகள் கடந்த சில நாட்களாக பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். போரா மாநாட்டிற்கு உரிய முகாமைத்துவம் இன்மையே இந்த நிலைமைக்கு காரணமாகியுள்ளது.

பம்பலப்பிட்டியை கேந்திரமாக கொண்டு நடத்தப்படும் போரா நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவான மக்கள் வருகைத்தந்துள்ளனர். 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ளனர்.

மாநாட்டுக்கு வந்தவர்களுக்காக விமான நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்ட கவுன்டர்கள் எதுவும் செயற்படவில்லை. இதனால் வெளிநாட்டவர்கள் மாத்திரமின்றி இலங்கையர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பயணப்பையை விடுவித்துக்கொள்ளும் நடவடிக்கையின் போது விமான பயணிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

போரா மாநாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 7000 - 8000 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வருகைதருகின்றனர். அத்துடன் அவர்களை அழைத்து செல்ல வரும் வாகனங்களினால் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று பாடசாலை ஆரம்பிக்கப்பட்டமையினால் பாரிய போக்குவரத்து நெரிசல் ஒன்று ஏற்பட்டுள்ளது. பம்பலப்பிட்டியில் முன்னெடுக்கப்பட்ட போரா மாநாடே அதற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3 comments:

  1. நாட்டின் வளர்ச்சி,உல்லாச பயனத்துரை வளர்ச்சி மற்றும்,வெளி நாடுகளுக்கு இது செய்தி Sri Lanka safe country.எனவே நாட்டுக்கு மிக நல்ல விடயமும் பொருளாதார வளர்ச்சியும்

    ReplyDelete
  2. This congestion and inconvenience aedom happens all over the world.Though the Government could have foreseen this and should have done some arrangements.

    ReplyDelete
  3. When the season like Christmas, vesak & new year also there were traffic jam..other side the govt of SL has collected million of RS. from them. Therefore this not the BORA CONVENTION problem & the only facilitatation matter.

    ReplyDelete

Powered by Blogger.