Header Ads



ஹஜ்ஜுல் அக்­பரின் மகனிடம், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் வாக்குமூலம்

நேற்று -09- பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிலிருந்து வந்த ஓர் அழைப்பின் பேரில் வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக காலை பத்தரை மணி அளவில் அங்கு சென்றிருந்தேன். நான் இஸ்தான்பூல் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் கற்கை நெறியை மேற்கொண்டவன் என்ற வகையில் அந்தக் காலப் பிரிவில் சிரியா சென்றேனா? அல்லது கருங்குஞ்சுகளோடு ஏதும் தொடர்புகள் இருந்தனவா? என்ற ரீதியிலேயே விசாரணைகள் அமைந்திருந்தன.

ஆனால் நானோ துருக்கியில் இருக்கும் போது எந்தவிதமான ஆரவாரங்களும் இன்றி எனது தாய் நாட்டின் நலனுக்காகவும், தாய் நாட்டின் பொதுக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துவதற்காகவும், சுற்றுலாத் துறையை விருத்தி செய்வதற்காகவும் என்னாலான முயற்சிகளை செய்து கொண்டிருந்தேன். இஸ்தான்பூல் நகரில் வருடாந்தம் நிகழும் சர்வதேச மாணவர்களின் கலாச்சார நிகழ்வொன்றில் இலங்கையும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆவலில் அப்போது துருக்கியில் இருந்த இலங்கை மாணவர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளில் இறங்கினேன். இலங்கை சார்பாக அன்று நான் ஆரம்பித்து வைத்த இந்த வழக்கத்தை துருக்கியில் உள்ள இலங்கை மாணவர்கள் இன்று வரை தொடராகச் செய்து வருகின்றனர். எந்தவிதமான இன, மத பேதங்களுமின்றி இலங்கைக் கலாச்சாரம் என்பதே எம்மால் இங்கு முன்னுரிமைப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறாக ஒழுங்கு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்வுகளுக்காகக் காட்சிப்பபடுத்தத் தேவையான பொருட்கள் தேவைப்பட்ட போது நான் எனது தந்தையையே தொடர்பு கொண்டேன். எனது தந்தை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பில் அதற்குப் பொருத்தமான சிலரை எனக்கு அறிமுகம் செய்து தந்ததோடு இது நாட்டுக்கான ஒரு வேலை என்பதால் ஜமாஅதே இஸ்லாமி அமைப்பினூடாகவே தேவையான செலவினங்களை ஏற்பாடு செய்ய முடியும் என்றும் கூறினார். தந்தை அறிமுகம் செய்து தந்தவர்களைத் தொடர்பு கொண்ட போது அவர்கள் இதற்கான செலவினங்களை இலங்கை அரசு பொறுப்பெடுப்பதே பொருத்தமென்று கருதி கலாச்சார அமைச்சு மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு அரச அனுசரனையைப் பெற்றுத் தந்தார்கள். பின்னர் Laksala நிறுவனத்தினூடாகத் தேவையான பொருட்கள் மற்றும் ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டு துருக்கிக்கு அனுப்பப்பட்டன.

எங்கோ உள்ள ஒரு நாட்டில் தனது நாட்டை அறிமுகம் செய்வதற்காக எவ்வித ஆரவாரங்களுமின்றித் தூய்மையாக செயற்பட்ட எனது தந்தை இன்று நாட்டுக்கெதிராகத் தீவிரவாதிகளுக்கு உதவியளித்தார் என்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளின் பேரில் எதுவித ஆதாரங்களோ அல்லது சாட்சியங்களோ இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளையைக் கருப்பு என்று நிரூபிக்க முயற்சிக்கும் இந்த முரண்நகையை நினைத்து உள்ளூர சிரித்துக்கொண்டே விசாரணை முடிந்து வெளியேறினேன்.

Rizam Hajjul Akbar 

1 comment:

  1. Jaffnamuslim!! You should educate ur self to respect to his Excellency to use 'usthad ' several times u haven't, bcz he isn't bad than the Firon & u aren't better than the prophet Musa as

    ReplyDelete

Powered by Blogger.