Header Ads



அபாயாவும் அணியமுடியாதா..? தட்டிக்கேட்டால் 'வாயை மூடுங்கள்' என எச்சரிக்கை - ம.உ.ஆ வில் முறைப்பாடு


பேரா­தனை போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த சிறு­வனை பார்­வை­யிடுவதற்கு முகத்தை மறைக்­காது அபாயா அணிந்து சென்ற பெண்­ணுக்குத் தடை விதித்த அங்கு கட­மை­யி­லி­ருந்த பெரும்­பான்­மை­யின பெண் காவ­லா­ளிக்கு எதி­ராக மனித உரிமை ஆர்­வ­லரால் பேரா­தனை போதனா வைத்­தி­ய­சாலைப் பணிப்­பா­ள­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

குறிப்­பிட்ட பெண்­ணுடன் வைத்­தி­ய­சா­லைக்குச் சென்­றி­ருந்த பெண்ணின் உற­வி­னரும் மனித உரிமை ஆர்­வ­ல­ரு­மான மட­வளை பஸாரைச் சேர்ந்த எம்.ஏ.எம். ஹனீப் இந்த முறைப்­பாட்­டினைச் செய்­துள்ளார். 

முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

எனது உற­வி­ன­ரான பெண், வைத்­தி­ய­சா­லையின் 1 ஆம் இலக்க விடு­திக்குச் சென்­ற­போது கறுப்பு நிற அபாயா (முகத்­திரை அற்ற) அணிந்து செல்ல முடி­யா­தெ­னவும் அபா­யாவைக் களை­யு­மாறும் இந்த உத்­த­ரவு டாக்­டர்­க­ளாலும் தாதி­க­ளாலும் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பெண் காவலாளி தெரி­வித்தார்.

அவ­ச­ர­கால சட்டம் அமுலில் இல்­லை­யெ­னவும் முகத்­திரை அணிந்­தி­ருக்­க­வில்லை எனவும் நான் தெரி­வித்­த­போது அங்­கி­ருந்தோர் முன்­னி­லையில் என்னை ‘வாயை மூடிக் கொண்டு போங்கள்’ என்று கூறினார்.

இவ்­வா­றான பத­வி­க­ளுக்கு படித்த பண்­பா­ன­வர்­களை நிய­மனம் செய்­யுங்கள் பல்­லின மக்கள் வாழும் நாட்டில் இவர்­க­ளா­லேயே பிரச்­சி­னைகள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன.

நோயா­ளர்­களைப் பார்­வை­யிடச் செல்லும் சந்தர்ப்பத்தில் இன, மத பேதங்களை ஏற்படுத்தும் இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vidivelli

3 comments:

  1. Take this to not of so called President who should take care the rights of every citizen in this country.

    ReplyDelete
  2. முஸ்லிம் அமைச்சர்களின் உதவியுடன் கடும் கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனவாதியை பதவி விலக்கப்படும் வரை போராட வேண்டும்.

    ReplyDelete
  3. RAUF HAKEEM KOLUMBU PUKAIYIRAZA
    NILAYATHUKU MUNNALA, SHILA MAASANGALUKKU
    MUNNALA UNNA VIRATHAM IRUNDAANAI
    THAMILARKALUKKAHA..
    MUSLIMGALUKKU KOLIPPAAL KODUKKIRAAN.

    RANILAI KAAPPAATRA NEETHIMANRAM
    ERUKIRAAN.

    ReplyDelete

Powered by Blogger.