Header Ads



11 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை

நாட்டில் நிலவும் மழை­யு­ட­னான சீரற்ற கால­நிலை எதிர்­வரும் சில தினங்­க­ளுக்கு தொடரும் என்று இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

அதற்­க­மைய மேல், சப்­ர­க­முவ, மத்­திய மாகா­ணங்­க­ளிலும் வடமேல் மாகா­ணத்­திலும். காலி மற்றும் மாத்­தறை ஆகிய மாவட்­டங்­க­ளிலும் 100 முதல் 150 மில்லி மீற்­றர்­வரை மழை வீழ்ச்சி பதி­வாகும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­போன்று ஊவா, கிழக்கு மற்றும் மத்­திய மாகா­ணங்­க­ளிலும் வவு­னியா , முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­க­ளிலும் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதி­வாகும் என்­ப­தோடு, பிற்­பகல் 2 மணிக்கு பின்னர் இடி­யு­ட­னான மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது.

குரு­ணாகல், மாத்­தளை, கம்­பஹா, கேகாலை, கண்டி, நுவ­ரெ­லியா, கொழும்பு, களுத்­துறை, இரத்­தி­ன­புரி, காலி மற்றும் மாத்­தறை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு அதிக மழைக்­கான சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு இடி­யு­ட­னான மழை பெய்­கின்ற சந்­தர்ப்­பங்­களில் காற்றின் வேக­மா­னது மணித்­தி­யா­ல­யத்­திற்கு 70 - 80 கிலோ மீற்றர் வரை காணப்­படும். இதன் போது கடல் சற்று கொந்தழிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.