Header Ads



''செப்டம்பர் 04'' ஹிஜாப் தினமும், ஹிஜாபுக்காக போராடி உயிர்நீத்த மர்வா ஷெர்பினியும்


எகிப்தில் பிறந்து ஜேர்மனியில் வசித்து வந்த 32 வயதான மர்வா ஷெர்பினி எனும் ஒரு குழந்தையின் தாய் தான் வயிற்றில் இரண்டாவது குழந்தையை சுமந்திருந்த நிலையில் ஜேரிமனிய நீதி மன்றத்தில் வைத்து ஜேர்மனிய இனவாதியான இளைஞன் ஒருவனினால் 18 தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட சம்பவம் 2009 ஜுலை 01ஆம் திகதி ஜேர்மன் டிரஸ்டன் நகரில் நடைபெற்றது.

இக்கொலைக் காரணம், எப்போதும் ஹிஜாப் அணியும் வழக்கமுடைய மர்வா ஷெர்பினி சிறுவர் பூங்கா ஒன்றில் தனது குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த போது 27 வயதுடைய ஜேர்மனிய இளைஞர் ஒருவர் மர்வாவை மோசமாகத் திட்டி இஸ்லாத்தையும் கேலி செய்தான். இதனால் மனமுடைந்த அவர் குறித்த இளைஞருக்கெதிராக நீதிமன்றில் மான நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்தார். இவ்வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே மர்வா ஷெர்பினி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

தான் ஏற்ற புனிதக் கொள்கையை வாழச் செய்வதற்காகவும் பின்பற்றும் கலாசாரத்தின் அடையாளத்தை பாதுகாப்பதற்காகவும் பெண்கள் மேனி திறந்தலையும் ஜேர்மனியிலே உயிர் நீத்த நவீன ஹிஜாபின் வீரத் தாயே மர்வா ஷெர்பினி ஆவார்.

ஹிஜாபுக்காக உயிர்நீத்த இத்தாயின் ஞாபகர்த்தமாகவும், ஹிஜாபுடைய கலாசாரத்தை அழிக்க நினைப்போருக்கு எதிராகவும் உலக முஸ்லிம் அமைப்புகள் ஆலோசித்து ''செப்டம்பர் 04ஆம் திகதி'' ஆகிய இத்தினத்தை உலக ஹிஜாப் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.


Abu Ariya

5 comments:

  1. WORLD HIJAB DAY IS 1ST OF FEBRUARY?
    World Hijab Day is an annual event founded by Nazma Khan in 2013. The event takes place on February 1st each year in 140 countries worldwide. Its stated purpose is to encourage women of all religions and backgrounds to wear and experience the hijab- SOURCE WIKIPEDIA

    ReplyDelete
  2. ippadiyana thinam than nama napaham wechi irukanum

    ReplyDelete
  3. May Allah Reward our sister for her attachment toward Islam.

    ReplyDelete
  4. காலி முகத்திடலில் அபாயா அணிந்து கைது செய்யப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்ட நான்கு பெண்களும் நஷ்டஈடு கோரி ஒரு வழக்கை போடலாமே.

    ReplyDelete

Powered by Blogger.