Header Ads



UNP தலைமையிலான புதிய கூட்டணி தயார் - ஜனாதிபதி வேட்பாளரை செயற்குழு தெரிவுசெய்யும்

புதிய கூட்டணிக்கான யாப்புக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் நேற்று அனுமதி வழங்கியுள்ளனர்.

புதிய கூட்டணியின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி அறிவிக்க வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு செய்யும் செயலாளர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளருக்கு கூட்டணி கட்சித் தலைவர்களின் அனுமதியும் கிடைக்க வேண்டும் என யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையில் நேற்றிரவு அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்தையில் இந்த இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல,

“ கூட்டணியை அமைக்க அனைவரும் இணங்கினர். பேச்சுவார்தையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, மனோ கணேசன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன உட்பட ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.

புதிய கூட்டணியின் செயலாளர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்க இதன் போது தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் ஜனாதிபதி வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவே தெரிவு செய்யும்.

ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு செய்யும் வேட்பாளரே கூட்டணியின் வேட்பாளர் என கூட்டணியின் புதிய யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டணியின் வேலைத்திட்டம் மற்றும் கொள்கை சம்பந்தமான அடுத்த 10 நாட்களுக்குள் கலந்துரையாடி உடனபடிக்கையில் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

2 comments:

  1. Others, particularly Muslim parties must demand limit the hand (influence) of Champika racist in United parties decision making.

    ReplyDelete
  2. Thise Who ever come.
    Allah only will protect us.only our faith 100%in this matter

    ReplyDelete

Powered by Blogger.