Header Ads



இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசாங்கம் தவறியுள்ளது - SLMDI UK தூதுவரிடம் இடித்துரைப்பு


Slmdi uk அமைப்பினருக்கும் பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் Manisha Gunasekera  அவர்களுக்குமான சந்திப்பு இடெம்பெற்றது. இலங்கைக்கானபிரித்தானிய உயர்ஸ்தானிகர் அவர்களின் அழைப்பின் பெயரில் இடெம்பெற்ற இந்த சந்திப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளின் போது இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களை பாதுகாக்க தவறியுள்ளது என்பதை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்  Manisha Gunasekera  அவர்களிடம் SLMDI UK சுட்டிக்காட்டியது. இச்சந்திப்பு 08.08.2019 காலை 11 மணியளவில் ஆரம்பான இந்த சந்திப்பு இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடெம்பெற்றது.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் போது இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியுள்ளது என்பதை கடந்த காலசம்பவங்கள் தெளிவாக காட்டியுள்ளது. இந்த நிலைமை தொடருமாக இருந்தால் SLMDI UK அமைப்பானது சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டி வரும் என்பதை மேட்படி சந்திப்பில் இலங்கை உயர்ஸ்தானிகர் மூலமா இலங்கை அரசாங்கத்திட்கு கூறியுள்ளது. இந்த சந்திப்பின் போது ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் சவால்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றினையும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மூலமாக இலங்கை அரசாங்கத்தின் கவனத்திட்கு கொண்டு சென்றது.  

இந்த சந்திப்பில் SLMDI UK அமைப்பின் தலைவர் Nazeer saudeen அவர்கள் உட்பட அதன் முக்கிய உறுப்பினர்களும் பங்குபற்றினர். 

Sri Lankan Muslim Diaspora Initiative UK
SLMDI UK

1 comment:

  1. Well done.. Go ahead with it and do more and more to protect our Muslim community . Be proactive not reactive as and when problems occur. that is different between us and Jewish community. They are planning 50 years ahead of us.Now, we react as and when we have calamities....

    ReplyDelete

Powered by Blogger.