Header Ads



ஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லா, போட்டியிடுவாராயின் சாதிக்கப்போவது என்ன..?

எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக இலங்கையின் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ள நிலையில், இலங்கை முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் எப்படிப்பட்ட தாக்கத்தை செலுத்த முடியும், முஸ்லிம் வேட்பாளர் களம் இறங்கினால் அதன் சாதக பாதகங்கள் என்ன எனும் கண்ணோட்டத்தை அளிக்கிறது இந்தக் கட்டுரை.

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பாக சிவில் அமைப்புக்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கலந்துரையாடி வருவதாகவும், இதில் சாதகமான தீர்மானம் எட்டப்படும்போது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயாராக உள்ளதாகவும் பிபிசி தமிழிடம் ஹிஸ்புல்லா கூறினார்.

"ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அந்தத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் செல்லுபடியானவற்றில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற வேண்டும். ஆனால், இரண்டுக்கு மேற்பட்ட முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்போது, எந்தவொரு வேட்பாளராலும் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற முடியாமல் போகும்," என்று அவர் கூறினார்.

"அப்போது முதல் இரண்டு வேட்பாளர்களைத் தவிர்த்து, ஏனைய வேட்பாளர்களின் வாக்குச்சீட்டில் வழங்கப்பட்டுள்ள இரண்டாவது விருப்பு வாக்குகளின் அடிப்படையில்தான் குறித்த தேர்தலின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்" என்று தெரிவித்த ஹிஸ்புல்லா, "எனவேதான் முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும்" என்றும், "முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. அந்த முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிப்போர் இரண்டாவது விருப்பு வாக்காக, எந்த பிரதான வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் முஸ்லிம்கள் தீர்மானிக்க முடியும்" என்றும் பிபிசி தமிழிடம் ஹிஸ்புல்லா விவரித்தார்.

இவ்வாறு முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்போது, பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேச முடியும் என்றும், தமது கோரிக்கைகளுக்கு இணங்கும் பிரதான வேட்பாளருக்கு, முஸ்லிம்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கை அளிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

"ஜனாதிபதி வேட்பாளராக தற்போது கோட்டாபய ராஜபக்ஷ, அனுர குமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவும் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார்.

"இலங்கையில் முஸ்லிம்களின் வாக்குகள் கிட்டத்தட்ட 16 லட்சமாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் 12 லட்சம் முஸ்லிம்கள் வாக்களித்திருந்தனர். அவற்றில் 11 லட்சம் முஸ்லிம் வாக்குகள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்தன. அப்படியிருந்தும், கடந்த நாலரை வருடங்களில் முஸ்லிம் சமூகம் எந்தவொரு நன்மையையும் அவரால் அடையவில்லை. ஜின்தோட்டம் தொடங்கி மினுவாங்கொட வரை முஸ்லிம்களின் சொத்துக்கள் தீப்பற்றி எரிந்தன. வில்பத்து முதல் நுரைச்சோலை வரை முஸ்லிம்களின் காணிப் பிரச்சனைகள் தீவிரமடைந்தன. இவை தொடர்பில் எந்தத் தீர்வுகளும் முஸ்லிம்களுக்குக் கிடைக்கவில்லை," என்று ஹிஸ்புல்லா கூறினார்.

"மைத்திரிபால சிறிசேனவுக்கு லட்சக்கணக்கான முஸ்லிம்கள் வாக்களித்த போதும், அவர் எந்தவொரு இடத்திலும் தனக்கு முஸ்லிம்கள் வாக்களித்ததாக சொன்னதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தனது வெற்றிக்குக் காரணம் என்றே அவர் பல தடவை கூறியுள்ளார்," என்று அவர் குறிப்பிட்டார்.

"எனவே, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முஸ்லிம்கள் நேரடியாக வாக்களிக்கும்போது, அவற்றுக்குப் பெறுமானம் இல்லாமல் போய்விடும். ஆகவேதான், முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் களமிறங்கி அவர் ஊடாக பிரதான வேட்பாளருக்கு இரண்டாவது விருப்பு வாக்கை பெற்றுக் கொடுக்கலாம். இவ்வாறு முஸ்லிம் வேட்பாளர் களமிறங்கும்போது, அவருக்காக முஸ்லிம்களின் 25 வீதமான வாக்குகள் மட்டும் கிடைத்தால் போதுமானது. அதனூடாக ஆகக்குறைந்தது இரண்டரை லட்சம் இரண்டாவது விருப்பு வாக்குகளை பிரதான வேட்பாளருக்கு பெற்றுக் கொடுக்க முடியும்," என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம் வேட்பாளர்களும்

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளைத் தெரிவு செய்வதற்காக இதுவரை ஏழு தேர்தல்கள் நடந்துள்ளன. 1982, 1988, 1994, 1999, 2005, 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அந்தத் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் 1999, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்களில் முஸ்லிம் வேட்பாளர்களும் போட்டியிட்டிருந்தனர்.

அந்த வகையில் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கட்சி சார்பில் அப்துல் ரசூல் என்பவர் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டார்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முகம்மட் காசிம் முகம்மட் இஸ்மாயில், ஐதுருஸ் முகம்மட் இல்லியாஸ் மற்றும் முகம்மட் முஸ்தபா ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.

பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐதுருஸ் முகம்மட் இல்லியாஸ் மற்றும் இப்றாகிம் மிப்லார் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.

- யூ.எல். மப்றூக் -

8 comments:

  1. this man .support for gotapaya rajpaksa,but byparticipating election allmuslim vote may divid, automatically majority of shinkala people gotapaya rjapaksa may coe to power , this man iss fox

    ReplyDelete
  2. Finally he will join with gotha.
    Because he tasted from mr family.
    Mr govt given all facility for hisbullah.

    ReplyDelete
  3. M. L. A. M. Hizbullah = M. K. Shivajilingam

    ReplyDelete
  4. MUSLINGALIN THALAIVAN
    ENRU MUSLIMGALAI EMAATRUPAVANAIVDA
    HISBULLA PARAVAILLAI

    ReplyDelete
  5. எந்த பெரும்பான்மை கட்சி ஜனாதிபதி தேர்தலில் வென்றாலும் முஸ்லிம்களுக்கு நடக்கவிருப்பதை அவரால் தடுக்க முடியாது. அத கடந்த காலங்களில் கண்டோம்.
    தகுதியுள்ள முஸ்லீம் ஒருவர் கேட்டால் முஸ்லிகளின் வாக்கு பலத்தை மக்கள் அருந்துகொள்ளவர். ஹிஸ்புல்லா கேட்டல் அவரின் பலவீனத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஞானசார தனித்து பொதுத்தேர்தனில் தனித்து கேட்டு அவர் பெற்ற வாக்கை மக்கள் அறிவர்.

    ReplyDelete
  6. கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களை சாதாரண தரத்திலுள்ள அரசியல்வாதியாக நாம் கருதலாகாது. 1988ல் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட அவர்கள் சில வருடங்களைத் தவிர ஏனைய காலங்களில் உறுப்பினராக பிரதி அமைச்சராக மாகாணசபை அமைச்சராக மாகாண ஆளுனராகக் கடமையாற்றி நிறைந்த நிர்வாக மற்றும் அரசியல் அனுபவங்களைப் பெற்ற ஒருவராகக் காணப்படுகிறார். அரசியலில் இவர்களது முதல் ஆசான் எமது பெருந்தகை அஷ்ரப் அவர்கள். அன்னாரது வபாத்திற்குப் பின்னர் எத்தனையோ வேறு பல அரசியல் முதிர்வாளர்;களிடம் முறையான அரசியல் பயிற்சினைப் பெற்று பல வெற்றிகளைக் கண்டவர். தலைவர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என்பது ஒரு விடயம். மேற்கூறப்பட்ட பத்தியில் குறிப்பிடப்படும் விடயம் வேறு ஒன்று. உதாரணமாக இவ்வளவு காலமும் நாங்கள் எமக்கு விரும்பிய ஒரு வேட்பாளருக்கு தேர்தலில் வாக்களித்தோம். ஆனால் யாருக்கு வாக்களித்தோம் என்று எவருக்குமே தெரியாது. இதனால் அந்தக் குறிப்பிட்ட வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெற்றால்கூட தனிப்பட்டரீதியில் குறித்த வாக்காளருக்கு சேவை புரிய வேண்டுமென்ற கட்டுப்பாடும் கடப்பபாடும் அவருக்குக் கிடையாது. நடைபெறப்போகும் ஜனாகிபதித் தேர்தலில் (Suppose) பொஜமு யும் ஐதேக வும் போட்டி போடப்போகின்றன என்று வைத்துக் கொள்வோம். . இதில் வெற்றி பெற்ற கட்சிக்கு எத்தனை முஸ்லிம்கள் வாக்களித்தார்கள் என்ற கணக்கு யாருக்கும் தெளிவில்லை. ஆதாரத்துடன் நிரூபிக்கவும் முடியாது. இத்தேர்தலில் பலர் போட்டியிட்டு முந்தி வரும் வேட்பாளர் இருவரும் குறித்த 50% வாக்குகளைப் பெறாவிடின் மூன்றாமவராக ஒரு முஸ்லிம் தெரிவாகி அவருக்குக் கிடைக்கும் தெரிவு விருப்ப வாக்கினை இருவரில் ஒருவருக்கு கொடுத்து அவரை வெற்றி பெறச் செய்வதன்மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு (நேரடியாக பேரம் பேசுவதன்மூலம்) பல சேவைகளைப் பெறக்கூடியதாக இருக்கலாம்?!? இதுவே மேற்கண்ட கட்டுரையாளரின் மற்றும் ஹிஸ்புல்லாஹ் அவர்களினதும் நோக்கமாக (Trend) இருக்கலாம். இதில் காணப்படக்கூடிய இன்னுமொரு சங்கடம் (Contradiction) என்னவென்றால் மிக அதிகமான முஸ்லிம்களின் தெரிவு (Choice) ஒருவராக இருக்கும்போது மூன்றாவதாக வரக்கூடியவர் முஸ்லிம்களின் விருப்பத் தெரிவுக்கு அப்பாற்பட்டவராக இருக்கும் ஒருவருக்குத் தனது பெயருக்குக் கிடைத்த விருப்பு வாக்குகளை அளிக்கும்போது மறைமுகமான பிரளயம் ஒன்று ஏற்படவும் வாய்ப்புண்டு. இவை எல்லாம் சமூக மட்டத்தில் மிகவும் அவதானமாக ஜம்மியாவின் மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் நெறிப்படுத்தலுடன் செயற்படுத்தப்பட வேண்டிய விடயங்கள். எனவே இந்த இடைப்பட்ட காலத்தினுல் இது சம்பந்தமாக தீர ஆலோசித்து சாத்தியமான முடிவுகளை எடுக்க வேண்டியது சமூகத்தின் பணியாகும்.

    ReplyDelete
  7. Its a very Big Trap... Very dangerous Plan...
    It is a plan to destroy/Break all the valuable votes of Muslims.
    In this Election don't even think about Voting for Muslim President.
    Cunning Plan to put Muslim community in Danger...
    Its Another Terror Sahran's attack to pull Muslims in hell.
    " MUSLIMS BE VIGILANT"

    ReplyDelete
  8. And another thing.. We all this time try to VOTE for JVP or SDP problem is over... There is no need for other old terror Parties..
    By Voting to SDP OR JVP say bye to Old Culprits and Terror politician's.

    "VOTE FOR JVP OR SDP"

    ReplyDelete

Powered by Blogger.