Header Ads



முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளை, அபகரிக்கும் கிரான் பிரதேச செயலகம் - தடுத்துநிறுத்த யாரும் இல்லையா..?

கிரான் பிரதேச செயலகத்தினால் தொடர்ந்து காணிகளை முஸ்லீம்களிடமிருந்து பறிமுதல் செய்யும் வேலைத்திட்டத்தினைச்செய்து வருகின்ற சந்தர்ப்பத்தில் எங்களது இழந்த ஐந்து கிராம சேவகர் பிரிவுகளையும் மீண்டும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைக்க வேண்டுமென்ற வேலைத்திட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டி வருமென்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லையென கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.ஜௌபர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிததுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிலுள்ள முஸ்லீம்களின் பூர்வீகக்காணியான ஜப்பார்திடல் பிரதேசத்தில் இன நல்லுறவைச்சீர்குலைக்கும் வகையில் சில விசமிகளால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகளால் அப்பகுதிகளிலுள்ள முஸ்லீம்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஓட்டமாவடி பிரதேச சபையினதும் கிரான் பிரதேச செயலாளர் பிரினதும் கிராமமான ஜப்பார்ரதிடல் பகுதியில் இந்துக்களிகளின் வணக்கஸ்தலம் தாக்கப்படுவது தொடர்பாக முஸ்லீம்களைக் குறி வைத்து சில தமிழ் அரசியல்வாதிகளும் பக்கச்சார்பான சில ஊடகங்களும் கருத்துக்களை வெளியிட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் என்ற வகையில் எனது கருத்துக்களை வெளியிட வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது.

ஓட்டமாவடி பிரதேச செலகம் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை என்பவற்றுடன் இணைந்திருந்த புணானை மேற்கு, வாகனேரி, கள்ளிச்சை, ஊத்துச்சேனை மற்றும் வடமுனை ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகளும் 2001ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால், இன்று வரை அதற்கான பிரதேச சபை ஓட்டமாவடியாகவே இருந்து வருகின்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்திலிருந்து கிரானுக்கு ஐந்து கிராம சேவகர் பிரிவுகளும் பிரிக்கப்பட்டதன் நோக்கம், கிரான் பிரதேச செயலகம் உருவாக்கப்பட்ட போது உருவாக்கப்பட்ட கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு வாகரை பிரதேச செயலகத்திலுள்ள சில பகுதிகளை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குத் தருவதாக வாக்களிக்கப்பட்டு பிரிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு வழங்குவதாகத் தெரிவித்த காணிகளில் எதனையும் வழங்காமல் மறுத்து வருகின்றனர்.

இந்த இரண்டு பிரதேச செயலகங்களையும் உருவாக்கும் வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் தமிழ் அரசியல் தலைவர்களும் திட்டமிட்டு முஸ்லீம்களின் பூர்வீகக் குடியிருப்பு மற்றும் விவசாயக்காணிகளை பிரித்தெடுத்து, முஸ்லீம்களுக்குச் சொந்தமான காணிகளை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டத்தினை தற்போது கிரான் பிரதேச செயலகம் திட்டமிட்டு செய்து வருகின்றது.

கிரான் பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதிலிருந்து இன்று வரை பிரதேச செயலாளர்களாக கடமையாற்றிய அனைத்து பிரதேச செயலாளர்களும் திட்டமிட்டு முஸ்லீம்களின் காணிகளை அபகரித்து வருகின்றார்கள். அவர்களுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த காணி உத்தியோகத்தர்களும், மாவட்ட அரச உயரதிகாரிகளும் இணைந்து முஸ்லீம்களின் காணிகளை அபகரிப்புச்செய்யும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருப்பதை அவதானித்து வருகின்றறோம்.

காவத்தமுனைக் கிராமத்திலிருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்திலிருக்கும் ஜப்பார்திடல் எனும் வாகனேரி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட முஸ்லீம்களுக்ககுச் சொந்தமான பூர்வீகக்காணிகளை அபகரிப்புச்செய்கின்ற வேலைகளை முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த உறுப்பினர்கள், கிரான் பிரதேச செயலகத்தைச்சேர்ந்த காணி உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு உட்பட அனைவரும் பகிரங்கமாக முஸ்லீம்களின் காணிகளை அபகரிப்பதில் செயற்படுவதனைஅவதானிக்க முடிகின்றது.

ஜப்பார்ரதிடல் காணியானது, 1956ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்து முஸ்லீம்கள் வாழ்ந்ளூத பிரதேசமாகும், அம்மக்களிடம் காணி அனுமதிப்பத்திரம், பி.எல்.ஆர் எனும் விவசாயக்காணிக்கான ஆதாரம் என்பன இருந்தும் கூட, பிரதேச செயலகத்தால் அதனை அங்கீகரித்து, அவர்களுக்கான காணிகளை வழங்குவதில் பாராமுகமாக இருந்து வருகின்றனர்.

2003ம் ஆண்டு எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகள் அமைப்பில் பொண்டுகல்சேனை கோட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த ராஜு என்பவரை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதன் நினைவாக எல்.ரீ.ரீ.ஈ.பயங்கரவாதிகளால் அவரது நினைவாக நினைவுத்தூபியொன்றை அமைப்பதற்காக எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தைச்சேர்ந்த ஓவியன், ஒளியன், ஜெயராஜ் ஆகியோர் சேர்ந்து அந்த இடத்தில் நினைவுத்தூபிக்காக ஒரு கல்லை வைத்து, மரணித்தவரின் நினைவுத்தூபியாகப் பயன்படுத்தி வந்தனர்.

யுத்தம் உக்கிரமடைந்த காலத்தில் அப்பகுதிகளை விட்டு முஸ்லீம் மக்கள் தற்காலீகமாக வெளியேறிய போது, நினைவுத்தூபி இருந்த இடத்தினை கோயிலாக மாற்ற வேண்டுமென்ற அடிப்படையில் கோயிலை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தினை முன்னெத்து, அதில் கோயிலையும் உருவாக்கினர்.

அந்த இடத்தில் கோவில் அமைப்பது தொடர்பாக ஆரம்ப வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, அப்பகுதியிலிருந்த தமிழ்ச்சகோதரர்களுக்கும் அப்பகுதில் வாழ்ந்த முஸ்லீம்களுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தகராரின் காரணமாக, நினைவுத்தூபிக்காக வைத்திருந்த கல்லை தூக்கியெறிந்து விட்டு, முஸ்லீம்கள் சாமியைத்தூக்கி எறிந்து விட்டார்கள் என முஸ்லீம்களுக்கெதிராக பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அதன் மூலமாக ஒரு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள முனைந்த போது, அன்றிருந்த இராணுவப்புலனாய்வு மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறைகளைச் சேர்ந்தவர்களின் விசேட அறிக்கையின் பிரகாரம் தமிழ் மக்களே திட்டமிட்டுச்செய்து விட்டு, முஸ்லீம்கள் மீது பழியைப் போடுகின்றனர் என்ற அறிக்கையின் மூலம் முஸ்லீம்களுக்கெதிராகத் திட்டமிடமிடப்பட்ட சதி முறியடிக்கப்பட்டது.

கிரான் பிரதேச செயலாளராக இருந்த தனபாலசுந்தரம், நாகூர் லெப்பை என்பவருக்குச் சொந்தமான பூர்வீகக்காணியில் நாற்பது பேர்ச் காணியை அபகரித்து ஸ்ரீ இத்தியடி விநாயகர் ஆலயத்திற்குக் கொடுத்து, கோயிலையும் பதிவு செய்து கொடுத்தார்.

அந்த இடத்தில் கால காலமாக கோயில் இருக்கவில்லையென்றும், புலிப்பயங்கரவாத அமைப்பைச்சேர்ந்த ஒருவரின் நினைவாக ஒரு கல்லே இருந்ததென்பதனை தமிழ்ச்சகோதரர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அந்தக்காணியை நீண்ட கால குத்தகை அடிப்படையில் விரிவுபடுத்த வேண்டுமென்ற திட்டத்தில் பிரதேச செயலகத்தினால் முஸ்லீம்களின் காணிகளைப் பறிமுதல் செய்யும் நோக்கில் நாற்பது பேச்சாக இருந்த கோவில் காணியை என்பது பேர்ச்சாக மாற்றி, பிரதேச செயலாளர் ராஜ்பாபு தற்போது வழங்கியிருக்கின்றார்.

எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பால் நினைவுத்தூபிக்கு எடுக்கப்பட்ட காணி கோவிலுக்குரிய காணியாக அடையாளப்படுத்தப்பட்டு, அதற்கு குத்தகை அடிப்படையில் காணி வழங்க முடியுமென்றால், அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்களை ஏன் மீள்குடியேற்றம் செய்யாமலும், அங்குள்ள பள்ளிவாயலுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்க முடியாமலும் இன ரீதியான பாகுபாட்டினை அரச அதிகாரிகள் செய்து வருகின்றனர்?

அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு காணி கச்சேரி நடாத்தப்பட்டு பத்து வருடம் கடந்து விட்ட நிலையிலும் ஒரு அங்குலப்பூமிக்கேனும் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுவது பாரிய இன விரோதச்செயலை கிரான் பிரதேச செயலகம் செய்து வருவதை மிகவும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஸ்ரீ இத்தியடி விநாயகர் ஆலயத்திற்கு ஏற்கனவே வழங்கிய நாற்பது பேர்ச் காணிக்கு மேலதிகமாக காணிகள் வழங்கப்படுமாக இருந்தால், எங்களது பூர்வீகக்காணிகளை மீட்பதில் நாங்கள் பின் நிற்கமாட்டோம் என்பதுடன், வீதிக்கு இறங்கிப்போராடுவோம் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என்பதை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என அவ்வூடக அறிக்கையில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.ஜௌபர் மேலும் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. நீங்கள் அனைவரும் பேசி பேசியே தூங்கி கொண்டிருக்காமல் சட்ட நடவடிக்கையில் இறங்குங்கல்,நீதி மன்ரத்தை நாடுங்கள்.

    ReplyDelete
  2. MUSLIMGALIN PIRACHINAIKALUKKU THEERVU
    KIDAITHUVITTAZU ENRU SHOLLI, AMAICHU
    PAZAVIKALAI MEENDUM PETRUKONDA,

    EMAATRUKKAARA ARASHIAL VAAZIHAL, POI MUSLIM THALAIVARHAL, THOONGUKIRAARHALA?

    ReplyDelete
  3. காணி வாங்கிய உருதிகள் உள்ளனவா ?

    ReplyDelete
  4. காணி வாங்கிய உறுதி உனக்கு பார்க்க வேண்டுமா? ஒரு இடத்தை தெரிவு செய்து அறிவி ajan அங்கே நாம் வந்து உறுதியை காட்டுகிரோம் உமக்கு.

    ReplyDelete
  5. @Rizard, ஏனெனில் அனேக காணிகள் காடுகளை வெட்டி பிடித்தது என்கிறார்களே

    ReplyDelete
  6. Ajan do you have birth certificate??? If it is show that first

    ReplyDelete
  7. இல்லை ajan உமது பெண்களை நீங்கள் எமக்கு பணத்துக்காக கூட்டி தந்த போது பிடித்தது.அடேய் ajan நீ ஆம்பலன்னா ஒரு இடத்தை சொல் அங்கே வந்து உறுதியை உனக்கு காட்டுகிரோம்.

    ReplyDelete

Powered by Blogger.