Header Ads



கோத்தபாயவின் பக்கம், சாயப் போகிறாரா பொன்சேக்கா...?

நாட்டின் தற்போதைய பிரச்சினையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் நன்றாக உணர்ந்தே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கோத்தபாய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு பிரச்சினையை சரியாக புரிந்துக்கொண்டதால், கோத்தபாய ராஜபக்சவுக்கு அவர்கள் தரப்பில் கேள்வி அதிகரித்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

மொட்டுக் கட்சியின் தரப்பினர் நினைக்கும் விதத்தில் அதற்கு தகுதியான வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச. நாட்டில் தற்போது பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை நிலவி வருகிறது. இதனை புரிந்துக்கொண்டதால், கோத்தபாயவை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்தது.

ஐக்கிய தேசியக் கட்சி இந்த நிலைமையை புரிந்துக்கொள்ளவில்லை என்றால், மக்களின் ஆசியை பெற முடியாது. நாட்டின் பாதுகாப்புக்கே மக்கள் முன்னுரிமை வழங்கியுள்ளனர். தூரநோக்கம் கொண்டவர்கள் அதனை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. No, He hopes to be named as a P.Candidate...?

    ReplyDelete
  2. He is getting worried that he would be put behind bars again if Gota wins.

    ReplyDelete

Powered by Blogger.