Header Ads



உயர்நீதிமன்றம் வழங்கவுள்ள அறிவிப்பானது, அரசியலில் முக்கியமானதாக அமையப் போகின்றது


நீண்ட காலமாக செயலிழந்து போயுள்ள மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்த முடியுமா என்பதற்கான சட்ட வியாக்கியானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் கோரியிருந்தார். 

இந்த விடயம் தொடர்பில் நேற்றும் நாளையும் பரசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதற்கான அறிவிப்பை உயர் நீதிமன்றம் நாளை மறுதினம்  வெள்ளிக்கிழமை  அறிவிக்கவுள்ளது. 

இந்த அறிவிப்பானது மாகாண சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை ஒரே கால எல்லைக்குள் நடத்துவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலை சிறு கால எல்லைக்கு ஒத்திவைப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்பட்டதாகவே அமையவுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர்  மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுகின்றார். இதற்கு தடையாக உள்ள தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். எல்லை நிர்ணய விவகாரத்தை மையப்படுத்தி புதிய தேர்தல் முறைமை பாராளுமன்றத்தில் இழுபறி நிலையில் உள்ளது. 

 நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பானது இரு தேர்தலுக்குமான முக்கிய விடயமாகவே அமையப் போகிறது. அதே போன்று எந்தவொரு காரணத்தின் அடிப்படையிலும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைத்து விடக் கூடாது என்ற கடும் நிலைப்பாட்டில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் அவர்களது கூட்டணி கட்சிகளும்  மாகாணசபைத் தேர்தல் ஊடாக தற்போது நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்று குறிப்பிடுகின்றனர். 

ஆனால் ஜனாதபதி மைத்திரிபால சிறிசேனவின் இலக்கானது மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்திவிட வேண்டும் என்பதாகும். எனவே நாளைமறுதினம் உயர்நீதிமன்றம் வழங்கவுள்ள அறிவிப்பானது தேசிய அரசியலில் முக்கியமானதாகவே அமையப் போகின்றது.

(லியோ நிரோஷ தர்ஷன்)

No comments

Powered by Blogger.