August 01, 2019

கல்முனைப் பிரச்சினைக்கு தீர்வா, அல்லது கிழக்குக்கு சிங்கள முதல் அமைச்சரா..?

- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
கல்முனை அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஏற்கனவே காலம் கடந்துவிட்டது. கல்முனை வடக்கு கல்முனை தெற்க்கு (கல்முனைக்குடி) சாய்ந்தமருது பிரதேச மக்கள் அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஒற்றுமையாகத் தீர்மானமெடுக்கவேண்டும்.   
ஒற்றுமைப்படாவிட்டால் ஏதாவது 2 பிரதேசங்கள் இணங்கிப்போகவும் அடுத்தது மிக மோசமாக தனிமைப்படவும் நேரும்.  
.
மதிப்புக்குரிய தலைவர்கள் சம்பந்தரும் ஹக்கீமும்  ஏனைய முஸ்லிம் தலைவர்களும் அவசரமாகப் பேசினால் மட்டுமே பொது முடிவை எட்ட முடியும். அல்லது அரசு முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல்தான் நிலவுகிறது. 
.
தோழர் ஹக்கீமை பொறுத்து கல்முனை மட்டுமல்ல அவர் சுமக்கும் பிரச்சினை. கிழக்கு முஸ்லிம்களை சிங்களவர் தமிழரிடமிருந்துமட்டுமல்ல தெற்க்கு முஸ்லிம்களிடமிருந்தும் தனிமைபடாமல் காப்பாற்றும் கயிற்றில் நடக்கும் பணியை இன்றய சூழலில் அவரைத் தவிர இன்னொருவரால் நிறைவேற்ற முடியாது. அதேபோல அதிக அங்கத்துவம் இருந்தும் முதலமைச்சர் பதவியை விட்டுத்தரும் மனம் சம்பந்தரை தவிர வேறு யாருக்குமில்லை.  சமந்தர் ஐயாவும் தோழர் ஹக்கீமும் ஏற்கனவே ஒத்துக்கொண்டபடி எல்லை நிர்ணயத்தை பேசி முடித்து பிரச்சினையை தீர்க்க வேண்டும். 
.
ஒற்றுமையாக இணங்கிப் போகாமல் அரசு தீர்வைக் கொண்டுவந்தால்  அம்பாறையிலும் திருகோணமலையிலும் சிங்கள அரசாங்க அதிபர் இருப்பதுபோல கிழக்கு மாகாணத்தில் பிழவுபட்ட தமிழர் முஸ்லிம்கள் ஆதரவுடன்  சிங்கள முதல் அமைச்சர் பதவி ஏற்க்கும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்பதை அடித்து சொல்ல முடியும். 

6 கருத்துரைகள்:

Poet Jayabalan

We agrèe with you 100% and we too are worried as you worried. Hon Sampanthan is a great leader and he think wisely and most of Tamilian including you are with him. However very few people including Mr Vigneswaran throw brickbats while sitting inside a glass dome. And also they are not bothered to see their daughters widows but they like to see their in-laws no more which I am sure that you will never endorse.

Therefore why don't we work for four councils as it was as both the communities were living peacefully without any ribs. If this matter is not concluded in a manner acceptable by both communities then the defeat of both communities is not that far.

ஜயா சிங்கள முதலமச்சர் வருவது மேல் என்பதை அண்மைய குண்டு வெடிப்பின் பின்னர் தமிழ் தரப்பு நடந்து கொண்ட விதமும்,சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் தரப்பு கூட்டிக் கொடுத்து மாமா வேலை பன்னும் போதே முடிவெடுத்து விட்டோம்.சிங்களவருடன் வாழ முடியும் தமிழருடன் வாழ முடியாது ஜயா.தமிழ் நாட்டு தமிழனை போல் அல்ல Sri Lanka வில் இருக்கும் தமிழன்,Sri Lanka வில் இருக்கும் தமிழ் மிக கேவலமான இரத்த காட்டேரிகள்.

சீனி முகமது சித்திக்கின் கருத்துடன் ஒத்து வருகிறேன். சம்பந்தர் செல்வநாயகத்தின் செல்வாக்குள்ளவர் என்பதால்தான் சென்றமுறை முதல் கிழக்கிற்க்கு முஸ்லிம் முதல் அமைச்சர் கிடைத்தார். இப்ப உள்ள சூழலில் சம்பந்தர் ஐயாவும் தோழர் ரவூப் ஹக்கீம் அவர்களும் பேசி முடிவெடுக்கும் தீர்மானத்தை அமூலாக்குவது மட்டுமே கிழக்கை பாதுகாக்கும். கிழக்கிற்க்கு முஸ்லிம் ஆதரவுடன் சிங்கள முதலைமைச்சர் வருவது நல்லது என்கிற றிசாட் அவர்களது கனவு நனவாகுவதுபற்றி எனக்கு ஆட்சேபமில்லை. தீ சுடும் என்பதை தென்னிலங்கை முஸ்லிம்களின் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள விரும்பாதபோது நேரடியாகத்தானே கற்றுக்கொள்ள வேண்டும். றிசாட் அவர்களே உங்கள் கனவுகள் வெல்லட்டும். ஆனால் என்ன போர்காலம் தவிர்த்து நூற்றாண்டுகளாக - இன்றுவரை சிங்கள ஆதிக்கம் இல்லாத வடகிழக்கில் மட்டும்தான் தமிழர் மட்டுமன்றி முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருக்க முடிகிறது என்பதை ஈஸ்ஸ்ட்டர் பின் நிகழ்வுகளும் நிரூபித்துள்ளது. சிங்களவர் எப்பவும் முஸ்லிம்களின் நிலத்தில் கைவைத்தால்தான் எதிர்ப்பிருக்காது என நினைக்கிறவர்கள். உங்கள் கனவு நிறைவேறினால் கிழக்கு மாகாணம் அம்பாறையாகிவிடும். சரிதானா றிசாட் அவர்களே.

ஜெயபாலன் அவர்களே சிங்களவர்களால் நாம் இழந்ததை விட புலிகளால் இழந்தது அதிகம்.தென்னிலங்கையில் உள்ள Muslim கலும் புலிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் மாத்தறை மாவட்டத்தின் போர்வை எனும் ஊரில் உள்ள பள்ளிவாசலுக்கு இறுதி யுத்த காலத்தில் கொடூர புலிகள் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தினார்கள்.அதுமட்டுமல்லாமல் வட,கிழக்கு வெளியே புலிகள் புலிகள் நடத்திய எத்தனையோ குண்டுத்தாக்குதல்கலில் சிங்களவருடன் சேர்த்து Muslim கலும் கொல்லப்பட்டிருக்கிரார்கல்.ஆக சிங்களவர்கலால் நாம் இழந்ததை விட பல்லாயிரம் மடங்கு உங்களால் இழந்திருக்கிரோம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.(ஜெயபாலன் அவர்களே Muslim கலாகிய எங்களுக்குள் உங்களைப் போல பல சாதிகளும்,சம்பரதாயங்கலும் இல்லை.எனவே Sri Lanka வில் உள்ள Muslim கள் அனைவரும் ஒன்னுதான்.நீங்கல் தென்னிலங்கை Muslim கள் என இனி விளிப்பதை நிறுத்திக் கொள்வது உங்களுக்கு மரியாதை)

Rizard, அந்த காலத்தில புலிகள் கிழக்கில் ஜிகாத் பயங்கரவாதிகளை மட்டும் தான் கொன்றார்கள் என்கிறார்களே

Ajan ஒழிந்து கொண்டு இருந்த நீர் எப்போது வந்தீர்.அப்போ முல்லிவாய்க்காலில் கொல்லப்பட்ட,இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைவரும் புலிப் பயங்கரவாதிகள் என மஹிந்த அரசும் சொல்கிரதே

Post a Comment