Header Ads



பிரேதப் பரிசோதனைக்காக திறந்த, பள்ளிவாசல் கதவுகள்


மழை வெள்ளத்தால் கேரளா மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்து வருவது ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் நெருக்கடியான தருணங்களில் செய்யப்படும் உதவிகள் மனிதநேயத்திற்கான சிறந்த முன்மாதிரியாகவும் திகழ்வதைக் காணமுடிகிறது.

கடந்த வியாழக்கிழமை காவலப்பராவில் பேரழிவுகரமான நிலச்சரிவு ஏற்பட்டது. சமீப காலத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவு இதுதான் என்று கூறப்படுகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடும் மழை வெள்ளம் காரணமாக கேரளாவின் பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன; நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வது அவ்வளவு எளிதல்ல. மருத்துவமனையின் தொலைவு காரணமாகவும் விரைவில் அதைச் சென்றடைய முடியாத காரணத்தாலும் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே ஒரு மசூதி பிரேதப் பரிசோதனை அறையாக மாற்றப்பட்டுள்ளது.

இதில் பலியானவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல போத்துக்கலில் உள்ள சலாபி ஜுமா மசூதி அதன் கதவுகளைத் திறந்தது. இதில், பிரேதப் பரிசோதனைக்காக மசூதிக்குள் கொண்டுசெல்லப்பட்ட உடல்கள் முஸ்லிம்களின் உடல்கள் மட்டுமல்ல. ஆனால் மசூதியின் பொறுப்பாளர்கள் தொழுகைக் கூடத்தின் ஒரு பகுதியையும், பிரேதப் பரிசோதனைசெய்வதற்கான பிற வசதிகளையும் வழங்கினர்.

1 comment:

  1. இந்த மனசு அந்த காவிகலுக்கு வருமா? எங்கே வரும்,சொந்த மதத்தில் உள்ளவர்கலினையே கோவிலுக்கு வராமல் தடுப்பதும்,கீழ் சாதி சிறுவர்கள் பாடசாலயில் மேல் சாதி சிறுவர்களின் பாத்திரத்தில் தண்ணீர் குடித்தாலே,சிறுவன் எனப் பாராமல் அடித்து நொருக்கும் கேவலம் கொண்டவர்களுக்கு எங்கே வரும் இப்படி ஒரு நல்ல உள்ளம்.

    ReplyDelete

Powered by Blogger.