Header Ads



விஞ்ஞான வெளியீடுகளுக்கான ஜனாதிபதி விருது விழா


தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இடம்பெறும் விஞ்ஞான வெளியீடுகளுக்கான ஜனாதிபதி விருது விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று -26-முற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.

201 7ஆம் ஆண்டு மருத்துவ, விவசாய மற்றும் பொறியியல் துறைகளில் உயர் தரம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட 240 க்கும் மேற்பட்ட கலாநிதிகள் மற்றும் பேராசிரியர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். 

தேசிய ஆராய்ச்சி சபையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இவ்விருது விழா இம்முறையும் 12 ஆவது தடவையாக இடம்பெற்றது. 

விஞ்ஞான தொழிநுட்ப, ஆராய்ச்சி மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க, தேசிய ஆராய்ச்சி சபையின் தலைவர் பேராசிரியர் ஜனக டி சில்வா, தேசிய ஆராய்ச்சி சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி மனிஷா ராஜபக்ஷ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  


2 comments:

  1. ஜெப்னா முஸ்லிமும் புறக்கணிப்புச் செய்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. படத்தில் காட்டப்படும் பரிசு அல்லது சான்றிதழ் பெறும் நபரின் பெயரை ஏன் வெளியிடவில்லை?

    ReplyDelete
  2. Yes bro, Mohammed I too want to ask same question. Now My doubt about the credibility of JM is really high. It is not like JM but is it JT. most of the words used is Tami Used here for example, Mashudi, Emen and so so. Also most news reported by Tamil reporters appear here, is it they copied it or directly they involved?

    News article must be complete and not half baked news. Who is this lady, for what she was awarded and what is her position are hidden for what?

    ReplyDelete

Powered by Blogger.