Header Ads



மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக, போராடப் போகிறாராம் ரதன தேரர்

மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகம் சட்டத்துக்கு புறம்பாக ஆரம்பிக்கப்பட்டதற்கான தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ள போதிலும், அந்த நிறுவனம் மீது அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என ராஜகிரியவில் அமைந்துள்ள சதாம் செவன பௌத்த மத்திய நிலையத்தில் இன்று -15- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகத்தை அரசுடைமையாக்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் மாபெரும் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அதுரலிய ரத்ன தேரர் இந்த பேரணிக்கு தமிழ், சிங்கள மக்களை மட்டக்களப்பு கிரான் சந்தியில் அணி திரளுமாறு அழைப்பதாகவும் இந்த பேரணியில் புதிய ‘நாட்டை பாதுகாக்கும் அமைப்பை’ மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. ஒவ்வொரு மனிதனுக்கும் போராடும் சுதந்திரம் உள்ளது.அதற்காக புத்த பெருமானின் காவி உடையை பயன்படுத்தி அதற்குள் ஒழிந்து கொண்டு,வன்முறையை தூண்டுவது எவ்வளவு கேவலமானது.முதலில் அஹிம்சையை போதித்த போதித்த புத்த பெருமானின் உடையை துறந்து விட்டு வரவேண்டும் நீங்கள் அரசியல் மற்றும் பொது வாழ்வுக்கு.அனைத்து சிங்கள மக்களுக்கும் இப்போது புரிந்து விட்டது நீங்கள் யாரென.

    ReplyDelete

Powered by Blogger.