Header Ads



அனுரகுமாரவும் ஜனாதிபதியாகலாம்....!

- Samsudeen Naleem -

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்த ஊகங்களை வெளிப்படுத்தும் சிலர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள் கோட்டாபே அவர்களை வெற்றிபெறச் செய்யும் என்கிற கருத்தினை முன்வைக்கின்றனர்.

உண்மையிலேயே கோடாபே ஜனாதிபதியானால் அது சிறுபான்யினருக்கு பாதகமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லைதான்.

அதேபோன்று சஜித் பிரேமதாச அவர்களின் சிறுபான்மையினர் குறித்த நிலைப்பாடும், சம்பிக்க ரணவக்க எந்த வேட்பாளரை சார்ந்து செல்கிறார் என்பதும் அவதானிக்கப்படவேண்டிய மிக முக்கியமான விடயங்களாகும்.

ஏனெனில் கடந்த இரண்டு ஜனாதிபதிகளை தேர்வுசெய்ததில் நாம் கவனத்தில்கொள்ளாத விடயங்கள் குறித்த ஆழ்ந்த அறிவு தேவைப்படுகிறது.

நாம் சூடுகண்ட பூனைகள்.

ஆனால் பேரினவாதக் கட்சிகளைப் பொறுத்தவரை ஏனைய பெரிய கட்சிகளைவிடவும் ஜேவிபி ஓரளவேனும் சிறுபான்மை இனத்தவருக்கு பாதகமற்ற கட்சி என்பதில் பலருக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேபோன்று ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளராகிய அனுர குமார திசாநாயக்க மீதும் நம்பிக்கையுண்டு.

ஆனாலும் அனுரவால் வெல்லமுடியாது 

என்கிற ஆரூடம் பலரை பின்னடையச் செய்கிறது.

தற்போதுள்ள ஜனாதிபதியையும், பாராளுமன்றத்தையும் தேர்வுசெய்த நல்லாட்சியின் தோல்வியும், தொடர்ந்தேர்ச்சையாக இடம்பெற்ற சிறுபான்மையினர் மீதான அடக்குமுறையும், நாட்டின் இஷ்திரத்தன்மையின்மையும், பொருளாதார பாதிப்புகளும் இன்னும் பல காரணிகளும் ஜேவிபி மீதான ஆதரவை அதிகரித்திருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாது.

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் கடந்த தேர்தல்களைப் போலன்றி பலமுனைப் போட்டியாக அமையுமென்றே நம்பப்படுகிறது.

எனவே சிங்கள பெரும்பான்மைவாக்குகள் மூன்று அல்லது நான்காகப் பிரிகின்றபோது . தமிழர், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனவாக்குகள் 25% மும்

ஜேவிபிக்கு அளிக்கப்படுமாக இருந்தால் அனுர குமார திஸாநாயக்கவும் ஜனாதிபதியாகலாம்.

2 comments:

  1. தமிழ் பேசும் சமூகமாய் ஒன்றினைவோம்...
    Namazu sonthe pirechchinaihalai nam theerthu kolvom.. thamil pesum makkelin sakthiyei perinevazihalukku kaatuvom....

    ReplyDelete
  2. தமிழ் பேசும் சமூகமாய் ஒன்றினைவோம்...
    Namazu sonthe pirechchinaihalai nam theerthu kolvom.. thamil pesum makkelin sakthiyei perinevazihalukku kaatuvom....

    ReplyDelete

Powered by Blogger.