Header Ads



ஜனாதிபதி வேட்பாளரை, அறிவிப்பதற்கு தயாராக இருக்கின்றேன் - ரணில்

உடனடியாக கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்து தாருங்கள். அதன் பின்னர் நான் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு தயாராக இருக்கின்றேன். அதற்கான சூழலை ஏற்படுத்தித் தாருங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயக தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான யாப்பு குறித்து நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு வார காலம் கடந்துள்ள நிலையிலும் கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்ய முடியாதுள்ளமை கவலையளிக்கின்றது.

எனவே உடனடியாக கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான சூழலை உருவாக்கிதாருங்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான புதிய கூட்டணியை உருவாக்குவதற்கோ அல்லது ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்கு முன்னர் குறைந்தப்பட்சம் கூட்டணிக்கான யாப்பு தனக்கு கிடைக்கப்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Ranil ready to DIE.
    MR GR MY3 BETTER TO GO HOME.
    YOUNGSTERS WILL RUN THE COUNTRY

    ReplyDelete
  2. முஸ்லிம் கட்சிகள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலைப் போக்கை கடைபிடித்தால் சிறந்ததாக இருக்கும்

    ReplyDelete
  3. இதுவரை காலமும் நாட்டுக்குச் செய்த சேவையும் மக்களுக்கு உதவிய உதவி ஒத்தாசைகளும் நன்றாகப் போதும் எனவும் அரசியல் அரங்கில் தயவுசெய்து நீங்கள் உங்கள் அழகான முகத்தைக் கண்டு கண்டு இப்போது போதும் என ஆகியிருக்கின்றது. தயவுசெய்து இந்த நாட்டுமக்களின் வேண்டுகோளுக்கு செவிசாயுங்கள் பிரதமர் அவர்களே!

    ReplyDelete
  4. Go home respectfully and take rest MP

    ReplyDelete

Powered by Blogger.