Header Ads



நான் யாருக்கும் பயப்பட மாட்டேன், யாரென உங்களுக்கு காட்டுகின்றேன் - சார்ள்சிடம் சீறிப்பாய்ந்த றிசாத்

நான் யார் என்பதை உங்களுக்கு காட்டுகின்றேன், நேற்று வந்த அரசியல்வாதி நீங்கள், நான் யாருக்கும் பயப்பட மாட்டேன், என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை நோக்கி கடுமையான வார்த்தைகளால் தாக்கியுள்ளார்.

மன்னாரில் இன்றையதினம் -26- கமநல திணைக்களத்தின் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின்போது அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இன்றையதினம் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் பி. ஹரிசன் கலந்து கொள்ளவுள்ளார் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

எனினும், இந்த நிகழ்வின்போது மேடையில் அறிவிப்பு செய்து கொண்டிருந்தவர் ஒன்றுக்கு பல தடவைகள் பிரதம அதிதி அமைச்சர் ரிசாட் பதியுதீன் என விளித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், அமைச்சர் ஹரிசனிடம் நீங்கள் பிரதம அதிதி என்பதால்த்தான் நான் இந்த நிகழ்விற்கு வருகை தந்தேன் என கூறியுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ரிசாட் பதியுதீன், “நீங்கள் என்னைப் பற்றி எப்போதும் தவறாக பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். நாடாளுமன்றத்திலும் என்னைப் பற்றி தவறானவற்றை கூறிவருகின்றீர்கள்.

பழைய அரசியல்வாதிகள் எல்லாம் அமைதியாக இருக்கும் போது நேற்று வந்த நீங்கள் எப்படி என்னைப் பற்றி பேச முடியும். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன், இனிமேல் நான் யார் என்பதை உங்களுக்கு காட்டுகின்றேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெறும் போது அமைச்சர் பி. ஹரிசன், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பலர் இருந்ததுடன், சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வாய்திறக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

4 comments:

  1. ரிசாட் சிங்கம்.ஒரு போதும் பெட்டைகலுக்கு பயப்படாது.இனி தமிழ் வைத்தியரிடம் யாரும் போக வேண்டாம் ஆயுதத்தால் சுட்டு விடுவான்கல்.

    ReplyDelete
  2. சார்ஸ் நிர்மலநாதன் ஒரு இழிவான கிருஸ்தவ தமிழ் பயங்கரவாதி இவன் கண்ணத்தில் ரிஸாட் ஒரு அரை விட்டிருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. அப்போ ஏன் பௌத்த துறவிகளுக்கு மட்டும் பீச்சல் பயம்

    ReplyDelete
  4. Ajan அதான் 35 வருடங்களாக உங்களுக்கு தந்த ஆப்பு.

    ReplyDelete

Powered by Blogger.