Header Ads



கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின், இருப்பு 38 சதவீதமாக குறைந்தது - வியாழேந்திரன்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பை பாதுகாக்க விரைவில் ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்ற அரசியல் கூட்டணி உருவாக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆதரவு கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. விரைவில் இக்கூட்டணியை அங்குரார்ப்பணம் செய்துவைத்து எமது பிரச்சினைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுகள் நடத்தவுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு கேள்விக் குறியாகியுள்ளது. 58 சதவீதமாக இருந்த தமிழர்கள் இன்று 38 சதவீதமாக குறைந்துள்ளனர். இன்னும் சிறிது காலத்தில் தமிழர்கள் பெரும்பான்மை நிலையிலிருந்து தள்ளப்படும் அபாயமுள்ளது. இது இனவாத போக்கல்ல. தமிழர்களின் இருப்பை தக்க வைப்பதற்கான அரசியல் நகர்வு.

பொருளாதாரம், கலாசாரம், நிலம், அரசியல் என அனைத்திலும் தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டியுள்ளது. உண்மையை கூற வேண்டுமென்றால், வைத்தியசாலை அவசர மருத்துவ பராமரிப்பு பிரிவில் உள்ளவர்கள் போன்றுதான் இன்று கிழக்கில் தமிழர்கள் உள்ளனர்.

6 comments:

  1. கவலை வேண்டாம். உங்கள் கூட்டாளி அத்துரலிய சாமி 38 ஐ 28 ஆக்க வல்லவர்.

    ReplyDelete
  2. வியாளேந்திரன் சதவீதம் என்றால் என்ன ?

    ReplyDelete
  3. குடியும் கும்மாளமுமாக இருந்தால் எப்படி பிள்ளை பெற்றுக்கொள்ள வக்கிருக்கும்?கிழக்கில் மட்டுமல்ல தமிழ் இனவாதம் இந்த நாட்டைவிட்டு முழுமையாக ஒருநாள் அழிந்து போகும்

    ReplyDelete
  4. வெயாழேந்திரன் மாமா பொல்லாத மாமாதான். இப்ப இருக்கிற MP மாரையும் தன்ன மாதிரி அடுத்த தேர்தலில் செல்லாக்காசாக்கத்தான் இப்பிடி திட்டம் போடுறாரு. ஆக்கிப் போடுவார். அது சரி. புதிய கட்சிக்கு யாருங்க தலைவர் (ஒரு அசரீரி: டேய் என்னடா பேயன் மாதிரி பேசுரா. இவ்வளவு கஷ்டப்பட்டு கட்சி அமைக்கிறாரு Thurs மாமா பிறகு ஒன்னையாடா தலைவராப் போடுவாரு. கழுதை)

    ReplyDelete
  5. ஒரு கவலையும் வேண்டாம் சனத்தொகைய கட்ட லேசான வழி .... ஆளுக்கு 10 பிள்ளய பெத்து போடு.முடிந்தால் 1 ஆவது நீ செய்து பார் பிறகு அடுத்தவன் செய்யலண்டா பேசு ... உனக்கே துப்பு இல்ல அடுத்தவனுக்கு advice ...

    ReplyDelete

Powered by Blogger.