Header Ads



தீர்வொன்றை வழங்கும்வரை அமைச்சுகளை மீண்டும் பொறுப்பேற்கபோவதில்லை என SLMC MP கள் தீர்மானித்துள்ளனர்

தீர்வொன்றை வழங்கும் வரை அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கபோவதில்லை என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் முஸ்ஸிம் பிரஜைகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும்வரை தாம் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க போவதில்லை என, தீர்மானித்துள்ளதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எச்.எம்.ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

4 comments:

  1. முடிவு மிகவும் கனகச்சிதமானது. மொத்தமாக 50க்கும் மேற்பட்ட கூட்டுத்தாபனங்கள் இந்த அமைச்சுக்களின் கீழ் வரும். அதற்கான தலைவர் மற்றும் பணிப்பாளர்களை நியமிப்பதில் மீண்டும் “அடிபுடி” ஏற்படும். அதனால் எப்போதும் அமைச்சர்களாக இல்லாமல் உறுப்பினர்களாக இருப்பதன்மூலம் மக்களுக்கு சேவையாற்றவும் முடியும். தவிர பாராளுமன்றம் கலைவதற்கு இன்னமும் சொற்ப காலமே இருக்கின்றது. கிழக்கு மாகாணத்திற்கு நிச்சயமாக பொறுப்புள்ள அமைச்சு மிகவும் இன்றியமையாதது.

    ReplyDelete
  2. அடுத்த தேர்தல் முடியும் வரை அனைத்து Muslim உறுப்பினர்களும் பதவி ஏற்க வேண்டாம்.

    ReplyDelete
  3. Good decision, appreciated.

    ReplyDelete
  4. அன்புக்குரிய ஹாரிஸ் அவர்களுக்கு, எந்த முடிவு எடுத்தாலும் சாதக பாதகமுள்ள சூழல். நீங்கள் எடுத்த முடிவு முஸ்லிம் மக்களுக்கு வெற்றிகளை பெற்றுத் தரவேண்டுமெனவும் முஸ்லிம் காங்கிரஸ் தமிழர் கூட்டமைப்பு உறவு பலப்படவேண்டுமென்றும் பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete

Powered by Blogger.