Header Ads



ஈஸ்டர் தக்குதலுக்கும், ISIS தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை - பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஆரம்பமானது. 

இன்று -24- தெரிவுக்குழு முன்னிலையில் பல உயர் அதிகாரிகள் இன்று சாட்சியம் வழங்க உள்ளனர். 

அதன் அடிப்படையில் இன்று முதலாவதாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன வாக்குமூலம் வழங்கி வருகின்றார். 

இதன் போது கருத்து தெரிவித்த குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், தாக்குதலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் இந்தோனேசியாவில் உள்ள மூன்றாம் தரப்பினருக்கு, ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தலைவருக்கு தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் இன்று சாட்சி வழங்கும் சிலரது விசாரணைகளை ஊடகங்களுக்கு இன்று வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. இப்போது உன்மை வந்து விட்டது.கிழக்கில் isis இருப்பதாக கூவிய இனவாத நாய்கள் வாலை இனி சுருட்டி அடுப்பங்கரையில் தூங்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.