Header Ads



முஸ்லிம்கள் விடயத்தில், தவறான கைதுகள் நடந்துள்ளன - மனித உரிமைகள் ஆணைக்குழு

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதுமான கைதுகளைத் தவிர்க்கப் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கோடிட்டுக் காட்டி, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கு, சில ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர், அதனுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்காக, பொலிஸ் திணைக்களத்தினால் விரைந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைப் பாராட்டியுள்ள ஆணைக்கு, தற்போதைய சூழ்நிலையில், பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் நியாயமானவை என்றாலும், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் கைதுகள், தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

கலாசார ரீதியிலான புரிந்துணர்வின்மை, பொதுமக்கள் வெளியிட்ட சந்தேகத்தின் அடிப்படையிலானவை மற்றும் சட்டத்துக்கு முரணானவை என்ற அடிப்படையிலேயே கைதுகள் இடம்பெற்றுள்ளன என்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.