July 06, 2019

முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அரசாங்கத்தை, அமைக்க சிங்கள மக்களுக்கு அழைப்பு

கண்டியில் இடம்பெறவுள்ள பொதுபலசேனாவின் மாநாட்டின் நோக்கத்தை "றொய்ட்டர்" சர்வதேச செய்தி சேவை நிறுவனம் மிகத்தெளிவாக கூறியுள்ளது.

"அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெல்வது யார்" என்பதே இந்த மாநாட்டின் நோக்கம் என்பதை தெளிவாக கூறுகின்றது. இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள செய்தியின் முதல் பந்தியே இங்கு தரப்பட்டுள்ளது.

👉🏿 முஸ்லிம்களுக்கு தனியான கலாசாரம் இருக்கக்கூடாது
👉🏿 மத்ரசாக்கள் நாட்டில் தனித்தியங்க கூடாது
👉🏿 முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் இருக்கக்கூடாது
👉🏿 அரபு மொழி பயன்படுத்தக்கூடாது
👉🏿 பதியப்படாத பள்ளிவாயல்கள் மூடப்பட வேண்டும்

போன்ற இன்னும் சில விடயங்களை முன்வைத்து மேற்கொள்ளப்படும் இம்மாநாடு - ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வர - முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தினூடாக - சிங்கள சமூகத்தை ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

கடந்த வருடம் சதியின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பை செய்து - பதவிக்கதிரைகளில் உட்கார எத்தனித்து தோல்வியுற்று - மக்கள் மத்தியில் "நேண்டியாகி" ஆகி - அடுத்த தேர்தலிலாவது ஆட்சி மாற்றத்தைக்கொண்டு வர வேறு பேசுபொருள் இல்லாமல் துடித்துக்கொண்டிருந்த சக்திகளுக்கு - ஈஸ்டர் குண்டு வெடிப்பு "சும்மா இருந்த வாய்க்கு அவலும் வாழைப்பழமும்" கொடுப்பது போலமைந்தது.

அதனால், இன்று முஸ்லிம் வெறுப்பு இனவாதம்தான் ஆட்சி மாற்றத்திற்கான கருப்பொருளாக (Theme) முன்கொண்டு செல்லப்படுகிறது. அதிகாரத்திற்கு வருவதற்கு கொள்கைகளை முன்வைக்க "சரக்கில்லாதவர்கள்" இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர். இதனால், யார் கூடுதலான இனவாதம் பேசுவது என்ற ஒரு பந்தயமே நடக்கிறது.

அந்த பந்தயத்தின் ஒரு கட்டம்தான் பொதுபலசேனாவின் கண்டி மாநாடு. ரத்ன தேரர் தன்னை முந்திக்கொண்டு உண்ணாவிரதத்தினூடாக போட்டுக்கொண்ட "மார்க்ஸ்" - ஞானசார தேரரை பொறாமையில் ஆழ்த்தியது.

அதனால், ரத்ன தேரரை விட தான் அதிகம் மார்க்ஸ் பெற்றுக்கொள்ள - ஞானசார அதே இடத்தில் (கண்டியில்) நடாத்தும் உச்ச கட்ட பந்தயமே கண்டி மாநாடாகும்.

மறுபுறம், விமல் வீரவன்சவின் நுகேகொட ஆர்ப்பாட்ட ஊர்வலம் - தனித்து நின்று போட்டி போடுவதை விட - ஒன்றாக இணைந்து கிடைப்பதை பிரித்துக்கொள்ள - உதயகமன்வில்லவையும் இணைத்துக் கொண்ட "கபடியாக" அமைந்துள்ளது.

ஆக, முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அரசாங்கத்தை அமைக்க - சிங்கள மக்களுக்கு அழைப்பு விடுப்பதே - இந்த மொத்தமான விடயங்கள் அரங்கேற்றப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இவர்கள் முஸ்லிம்கள் எங்களுக்கு தேவையில்லை. முஸ்லிம் வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை என்ற தீர்க்கமான கட்டத்திற்கு வந்துவுட்டதாகவே கணிக்கப்படுகிறது.
இவ்வாறான, மனநிலையின் உள்ளுணர்வு "கோட்டாயிஷம்" என்பதை நாம் அறிவோம். கோட்டாதான் மகிந்தவிடம் சிங்கள வாக்குகளினூடாக மாத்திரம் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற கருப்பொருளை முன்வைத்தனர். அவரின் மனநிலையையே இன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை பரப்புகின்ற பிரதிபலிக்கின்றனர்.

இந்த கோட்டாயிஷம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் எதிரானதல்ல. ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கு எதிரானது. "சிங்களவர் மட்டும்" என்ற கடும்போக்கு "தனி இன மேலாதிக்கவாதம்" சார்ந்தது. இதனை சிறுபான்மையினர் எல்லோரும் இணைந்து மொத்தமாகவே முகங்கொடுக்க வேண்டி இருக்கிறது. இந்த கோட்டாயிஷத்திற்கு எதிராக நிமிர்ந்து நிற்க வேண்டி இருக்கிறது.

AL Thavam

6 கருத்துரைகள்:

உலக அழிவின் அடையாளங்கள்,
சும்மா நாம எதுக்கும் டென்ஷன் ஆக தேவையில்ல,
இஷ்திஹ்பார் செய்து நாம அல்லஹ்கிட்ட பாவமன்னிப்பை தேடுவோம்.

Iwarhalai ponra mananilay ulla makklai intha therthalil kaanalaam...intha kadumpokku waatham naattai aliwikke kondu aellum enpathay em.sahothara ina makkal puronthu kolla wendum...oru samoohattahi nasukki athil kulir kaaya ninaikkum.entha inamum awarhalin mudiway kandathillay....athu irunthi waray oru poraattame....

மேலேயுள்ள துறவிகளையும் இன்னும் பல துவேஷக்கார துறவிகளையும் பௌத்த மக்களே கணக்கு எடுக்கிறதில்லை அவைகளை பற்றி நாங்களும் பெரிசாக அலட்டிக்கொள்ள தேவையில்லை.உலகில் எங்கு சரி முஸ்லிம்களோடு பிரச்சினைகள் செய்து யாரும் வெற்றி அடைந்தார்கள் என்று வரலாறு இருக்கின்றனவா!!

இந்த 5 கோரிக்கைகளும் மிக குறைந்தபடச நியாயமானவை தானே.

அஜன் அண்ணா, இந்த ஐந்து விடயங்களிலுள்ள முஸ்லிம் என்ற வார்த்தைக்குப் பதிலா தமிழர்/இந்து என்ற பதத்தைச் சேர்த்து படிச்சுப் பாருங்க அண்ணே. முஸ்லிமுக்கு அடுத்தபடியா தமிழர்/இந்துதான் அண்ணே. அரபு இஸ்லாமிய 56 நாடுகளும் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள். அது என்ன என்பது விரைவில் தெரியவரும்.

Post a Comment