Header Ads



சிறிலங்காவுடன் அமெரிக்கா இணைந்து நிற்கும் – ட்ரம்ப் உறுதி

- கி.தவசீலன் -

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் சிறிலங்காவுடன் அமெரிக்கா இணைந்து  நிற்கும் என்றும்,  பயங்கரவாத எதிர்ப்பு, கடல் மற்றும் எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ரொட்னி பெரேரா கடந்த திங்கட்கிழமை அமெரிக்க அதிபரைச் சந்தித்து நியமன ஆவணங்களை கையளித்த போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் வேரூன்றியுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தி, ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார்.

உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து, நிலையான அமைதியை அடைவதற்கான நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதி செய்வதில் சிறிலங்காவின் உறுதிப்பாட்டை அவர் வரவேற்றார் எனவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

3 comments:

  1. நாயே,சனியனே, மூதேவியே, தஜ்ஜாலின் படையே,யஜோஜ் மஜோஜ் சேர்ந்தவனே ... அல்லாஹ்தான் முஸ்லீம் உம்மா வை பாதுகாக்கணும்.தஜ்ஜாலின் பித்னாவில் இருந்து எல்லோரும் அதிக அதிகமா பாதுகாப்பு2 தேடுங்க...

    ReplyDelete
  2. America is trying to guard the sea zone of Sri Lanka. Because it is trying to take oil barrel and band the chaina's mega projects

    ReplyDelete
  3. 21/4/2019 அன்று என்ன நோக்கதிட்காக யாரல் உதவிசெய்யப்பட்டு யாரைவைத்து இந்த பொம்புகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என்று இந்த செய்தியை வாசித்து நன்றாக விளங்கி கொள்ளவும்

    நம் அன்று நாடுகளான சீனா,இந்தியா,பாகிஸ்தான்,ரசியா போன்ற நாடுகள்தான் இந்த இந்துசமுத்திர நாடுகளை பாதுகாக்க நடிவடிக்கையில் ஈடுபடவேண்டும் எங்கோ இருந்து வந்து இந்த நாடுகளின் கடட்படை தொடக்கம் ஏனைய இரகசியங்களை கண்டரிய அந்த நாடுகளுக்கு அருகாமையில் வருவதட்க்காக திட்டம் செய்து அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பொம்கள்தான் என்பதை மிக விரைவில் நம் நாட்டு புலன் விசாரனை மூலம் தெரிந்து கொள்வீர்கள்

    இந்த உலக மகா கொலைகாரISIS அமைப்பின் அடிப்படைதளம் அமெரிக்காவும் இஸ்ரேலும் என்று உலகிஉள்ள அனைத்து மக்களும் விளங்கிகொள்ளும் காலம் மிகநெருங்கிவிட்டது!

    ReplyDelete

Powered by Blogger.