Header Ads



சில பாம்புகள் ஜனாதிபதியின் மடியில் அமர்ந்து, நாய் குட்டிகளை போல் செயற்பட முயற்சிகின்றன

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சிலர் அழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க நடவடிக்கை எடுத்து வருவோரில் ஒரு சிலர், ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் போது ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக செயற்பட்டு, சஜித் பிரேமதாசவை கட்சியின் தலைவராக்க முயற்சித்தனர்.

சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக்கும் வேலைத்திட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து செய்ய முயற்சித்து வருகின்றனர்.

சில பாம்புகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் புகுந்து கொண்டு, ஜனாதிபதியின் மடியில் அமர்ந்து நாய் குட்டிகளை போல் செயற்பட முயற்சித்து வருகின்றன.

இவர்கள் செய்யும் சேதத்தை மருத்துவரிடம் சென்றும் குணப்படுத்த முடியாது போகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அணியில் இருக்கும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிறுத்தும் தலைவருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவையே மறைமுகமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது, அந்த கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் என கட்சிக்குள் நடந்த பிரச்சினையில் முக்கிய பங்கு வகித்தார்.

அந்த முயற்சி கைக்கூடாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, விட்டு அன்றைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார்.

இதனையடுத்து நடைபெற்ற வடமேல் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு முதலமைச்சராக பதவிக்கு வந்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரித்து பிரச்சாரங்களில் ஈடுபட்ட தயாசிறி, ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற பின், அவருடன் இணைந்து கொண்டதுடன் கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி தேசிய அரசாங்கத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

1 comment:

  1. ​வெ ளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்குப் பொறுப்பான அமைச்சராகஇருந்தபோது கோடிக்கணக்கான மக்கள் பணத்தைச்சூறையாடிவிட்டு ஏப்பம்விடும் புடையன்பாம்பு தான் இவர்.

    ReplyDelete

Powered by Blogger.