Header Ads



முஸ்லிம்கள் எதிர்நோக்கும், முக்கிய கோட்பாட்டு சிக்கல்.

- வ.ஐ.ச.ஜெயபாலன் -

இது முஸ்லிம்களுக்கு நெருக்கடியான காலம். முஸ்லிம்களின் நெருக்கடிகளில் கால்பகுதி தற்காலிகமான சலசலப்புகள். இன்னொரு கால் பகுதி முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்தது. மிகுதி முஸ்லிம் தேசிய நிலைபாட்டை அசாத்தியமாக்குவதில் ஊர்வாதத்த்தின் வெற்றிகள் எனலாம். . 
.
சலசப்புகளை புறக்கணிப்பதும் சலசலப்பின் பின்னே நகர்த்தபடுகிற பாதகமான அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி செயல்படுவதும் முக்கியமானதாகும். ஆனால் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் வரலாற்று சிக்கல் 
தேசிய நலன்களை பிந்தள்ளி முழு இனத்தையே தோற்கடிக்கும் வகையில் ஊர்வாதம் பலபட்டு முன்நிலைப்படுவதாகும். முஸ்லிம்களின் உண்மையான சிக்கல் முஸ்லிம்களால் தேசிய நலன்களுக்கு ஊர் நலன்களை கீழ்படுத்தி செயல்பட முடியவில்லை என்பதாகும். உண்மையில் இது ஒரு அவல நிலையாகும். கல்முனைக்குடி சாய்ந்த மருதுது பிரதேச சபை பிரச்சினை கையாளபடும் விதம் இதற்க்கு நல்ல உதாரணமாகும்.
.
அடிப்படை பிரச்சினைகளை தேசிய பிரச்சினைகளை ஏனைய இனங்களோடு ஒப்பிடும்போது முஸ்லிம்களுக்கு முக்கியமான ஒரு தடை உள்ளது. முஸ்லிம்களின் தேசிய பிரச்சினைகளுக்கு ஊர்மட்ட மாவட்ட மட்ட பிரச்சினைகளை கீழ்படுத்தும் அரசியல் பொறிமுறை முஸ்லிம்கள் மத்தியில் செயல்பட வில்லை. இது ஒரு இனத்தின் ஆபத்தான கையறு நிலை சிக்கலாகும். ஊர்வாதம் சந்தர்ப வாதமாகும். தேசிய நலன்கள் அடிப்படையான சிந்தனை செயல்பாடு பொறிமுறையை உருவாக்காமல் முஸ்லிம்களுக்கு எதிர்காலமில்லை. 
,
தமிழர்களின் தேசிய சர்வதேசிய அரசியலின் பலமே தமிழ் தேசிய நலன்களுக்கு முன் சகல ஊர் மட்ட பிரச்சினைகள் பிரமுகர்களும் கீழ்படுத்தப் பட்டிருப்பதுதான். முஸ்லிம்கள் இனியாவது இளைஞர்களாவது ஊர்களை தாண்டி தேசிய நிலைபாட்டை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும். வேறு மார்க்கமில்லை.

6 comments:

  1. எம்மிடம் ஊர் பிரச்சினை இல்லை,சாய்ந்தமருது விடயம் என்பது ஒரு வீட்டுக்குள் சில வேளைகளில் அண்ணன் தம்பி பிரச்சினை போல்,இனி அவ்வாறு நடக்காது.இதை போய் நீங்கள் தூக்கி பிடித்து கூட்டி கொடுக்கும் வேலை செய்ய வேண்டாம்.உங்களுக்குல் இருக்கும் எத்தனயோ சாதிக் கேவலங்கல்,யாழ்ப்பானத்தான்,மட்டக்கலப்பான் போல ஒதுக்கி வைக்கும் கேவலங்கல் எம்மிடம் இல்லை.

    ReplyDelete
  2. அது என்ன முஸ்லிம்களுக்கு மட்டும் அறிவுரை கூற எல்லோரு வாரங்க? இலங்கை தமிழன் எல்லாம் சொக்க தங்கமா?

    ReplyDelete
  3. எங்களுக்குள் பிரச்சினையிருந்தால் அதனை தொடரவிடாது மூன்றாம் தரப்பினர் மூலமாவது தீர்த்துக்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனமானசெயல்படாகும், மாறாக பிரச்சினையில்லையென்றுசொல்லித்தப்பிப்பது மடமையாகும், திரு ஜெயபாலன் ஒரு நடுநிலைப்போக்குடைய எழுத்தாளர் அவர்களது கருத்து எமக்கு ஒருசிந்தனைக்குரியதாக எடுக்கப்படவேண்டும்என்பதில் எதிர்க்கருத்திருக்கமுடியாது, இவ்வாறான கருத்துக்களை ஒதுக்கிவிட்டு செல்லும்போதுதான் தலை கால் தெரியாத சமூகமாக பள்ளிவாயல்களிலும் வெசாக்கூடிகளைக்கட்டி நல்லுறவுக்கு முயற்ச்சிக்கின்றோம், எது எமது மார்க்கம், எது எமது கலாச்சாரம், எது எமது அரசியல் தேவை, எது எமது அரசியல் தலைமை, எதனை நாங்கள் செய்யக்கூடாது என்றுதெரியாது நல்லகருத்துக்களை பின்தள்ளிச்செல்வது மனவேதயளிக்கின்றது, மாற்று சமூகக்கட்டமைப்பில் தவறிருந்தால் அது அச்சமூகத்திட்குத்தான் பாதிப்பு, எமது சமூகக்கட்டமைப்பில் தவறிருந்தால் யாரும் அதனை சுட்டிக்காட்டலாம் அதில் தவறில்லை, திருந்தவேண்டியது எமது பொறுப்பு அப்போதுதான் எமது சமூகம் முழுமையாகும்

    ReplyDelete
  4. றிசாட் அவர்களே இதே குற்றச் சாட்டுக்களை மரியாதையாக எழுத உங்களுக்கு யாருமே கற்றுத்தரவில்லையா? இது முஸ்லிம்கள் பேசும் பேச்சல்லவே? நீங்கள் யார்? கற்றவர் விவாதம் என்பது பொய்சொல்லுவதும் இழிவுபடுத்துவதுமல்ல. விவாதங்கள் மனசுகளை வெல்லும் ஆயுதமல்லவா?

    ReplyDelete
  5. நன்றி Sriilankan, உங்களைப்போன்ற முஸ்லிம்களின் ஆதரவுதான் என் வழிகாட்டியாக உள்ளது. எந்த இனமும் காந்தியின் குரங்குப் பொம்மைபோல கண்களையும் காதுகளையும் வாயையும் மூடிக்கொண்டு தன் மீழ்ச்சியின் வழிகளைக் கண்டடையமுடியாது.

    ReplyDelete
  6. நாகரீகமற்றவர்களின் பதிவுகளைப்பார்த்து இந்த மீடியா வெறுத்துப் போய் விட்டது ஜெயபாலன் ஐயா, Srilankan போன்றோர்களின் பதிவுகளைப்பார்க்கும் போது மன ஆறுதல் கிடைக்கிறது. மனஇறுக்கத்தில் கிடந்து மனச்சோர்வு அடைந்தவர்களின் கருத்தாடல்களை பதிவதன் மூலம் இந்த மீடியாவும் தரங்குறைந்ததாக FB தரத்துக்குச்சென்றுவிட்டது.

    ReplyDelete

Powered by Blogger.