July 26, 2019

உலமா சபைக்­குள்­ளே இன்­னொரு பிரிவு, உரு­வா­கக்­கூ­டிய நிலைமை உள்­ள­து - பாராளுமன்ற தெரிவுக்குழு முன் பொதுபல சேனா சாட்சியம்

ஈஸ்டர் தாக்­கு­தலை நடத்த சஹ்­ரா­னுக்கு வெடி­பொ­ருட்­களை நான் வழங்­கி­ய­தாக சர்­வ­தேச தகவல் ஒன்று எமது புல­னாய்வு அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. சஹ்­ரா­னுடன் எம்மை தொடர்­பு­ப­டுத்தி சிங்­கள மக்கள் மத்­தியில் எம்மை அவ­ம­திக்­கவே இவ்­வா­றான சூழ்ச்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பொது­பல சேனாவின் நிறை­வேற்று அதி­காரி டிலந்த விதா­னகே பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் கூறினார்.

முன்னாள் , இந்நாள் ஜனா­தி­ப­தி­க­ளுக்கும் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கும் ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்பு இலங்­கைக்குள் முன்­னெ­டுக்கும் நகர்­வுகள் குறித்து அள­வுக்கு அதி­க­மான கார­ணி­களை தாம் முன்­வைத்தும் அவர்­களால் அதனை தடுக்க முடி­ய­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஈஸ்டர் தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று வாக்­கு­மூலம் வழங்­கிய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

பொது­பல சேனா என்ற அமைப்பு பெளத்த சிங்­கள மக்­களை பாது­காக்கும் நோக்­கத்தில் உரு­வாக்­கப்­பட்­டது. 2012 ஆம் ஆண்டு இந்த அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. இந்த நாட்டில் சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­க­ளைத்தான் எல்­லோரும் அதி­க­மாக பேசு­கின்­றனர். சிங்­கள பெளத்த மக்­க­ளுக்­கான பிரச்­சி­னைகள் குறித்து எவரும் பேச­வில்லை. இந்த நாட்டில் சிங்­க­ள­வர்கள் பெரும்­பான்­மை­யாக இருந்­தாலும் உலக கிறிஸ்­தவ ஆக்­கி­ரப்பு, உலக கொமி­யூனிஸ்ட் புரட்­சிகள், உலக தமிழ் ஆக்­கி­ர­மிப்பு, உலக முஸ்லிம் ஆக்­கி­ர­மிப்­புகள் கார­ண­மாக சிங்­கள பெளத்த இனம் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதனால் தான் சிங்­கள பெளத்­தர்­க­ளுக்­காக நாம் உரு­வாக்­கினோம். மேலும் இந்த ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்த ரிஸ்வி முப்தி என்ற நபர் பொது­பல சேனா அமைப்பை பொய்­யான கார­ணி­களை கொண்டு விமர்­சித்­துள்ளார். இப்­போது சஹ்ரான் என்ற ஒரு நபர் குறித்து மட்­டுமே பேசப்­பட்டு வரு­கின்­றது. ஆனால் இந்த மாதிரி பலர் உள்­ளனர். அதேபோல் அளுத்­கம சம்­ப­வத்தை கொண்டு எம்மைத் தவ­றாக விமர்­சிக்­கின்­றனர். நான் சில வெடி­பொ­ருட்­களை கடத்­தி­ய­தாக சர்­வ­தேச புல­னாய்வுத் தகவல் ஒன்று இலங்கை அர­சாங்­கத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி :- நீங்கள் இறு­தி­யாக கூறிய காரணி குறித்து ஆதா­ரங்கள் உள்­ளனவா?

பதில்:- இது குறித்த கார­ணிகள் உண்மை. ஆனால் ஆத­ரங்கள் இல்லை. கார­ணி­களை ஊட­கங்கள் இல்­லாமல் கூறு­கின்றேன்.

கேள்வி :- வேறு என்ன கூற­வேண்டும் ?

பதில்:- ரிஸ்வி முப்தி கூறும்­போதும் எம்மால் தான் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கல­வ­ரங்கள் உரு­வா­கின்­றது என்று கூறி­யுள்ளார்.இலங்­கையில் முஸ்லிம் அழுத்­தங்கள் குறித்து 2001ஆம் ஆண்டில் அப்­போ­தைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க காலத்தில் இருந்த அர­சாங்­கமே வலி­யு­றுத்­தி­யுள்­ளது. ஆணைக்­குழு அமைத்து அவர்­களின் அறிக்­கையில் தெளி­வாக கூறி­யுள்­ளனர். அப்­போதே ஜனா­தி­ப­திக்கு இந்த நிலை­மைகள் தெரிந்­துள்­ளது. ஆனால் அதன் பின்னர் எவரும் இது குறித்து கவனம் செலுத்­த­வில்லை. இரண்­டா­யி­ரமாம் ஆண்­டு­களில் இருந்தே முஸ்லிம் இளை­ஞர்கள் அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்­ளனர் என்­பது உறு­தி­யா­கின்­றது. அது­மட்டும் அல்ல இலங்­கையில் முன்னர் முஸ்­லிம்கள் பிரி­வி­னை­வாத கொள்­கையில் இருக்­க­வில்லை. ஆனால் என்று சவூதி கொள்கை இங்கு வந்­ததோ அன்றில் இருந்து பிரி­வினைக் கொள்கை பல­ம­டைந்­தது. ஹலால், முகத்தை மறைப்­பது என்ற நிறைய விட­யங்கள் வந்­தது. இது வியா­பா­ர­மாக மாறி­யது. ஏ.சி.ஜே.யு (உலமா சபை) வஹாப் வாதங்­களை இங்கு பரப்பி வரு­கின்­றனர்.

கேள்வி :- ஏ.சி.ஜே.யு வஹாப் வாதி­களா?

பதில் :- ஆம். அவர்­கள்தான் வஹாப் வாதத்தை பரப்­பி­வ­ரு­கின்­றனர்

கேள்வி :- ஆனால் அதுதான் முஸ்­லிம்­களின் பிர­தான அமைப்­பாக உள்­ளது?

பதில் :- ஆம். எனக்கு தெரியும்.

கேள்வி :- அவர்­க­ளையா நீங்கள் வஹாபி என கூறு­கின்­றீர்கள் ?

பதில் :- ஆம். அவர்கள் தான் இந்த ஹலால், முகத்தை மூடும் கொள்கை என்ற அனைத்­தையும் உரு­வாக்கி ஏனை­ய­வர்­களின் வியா­பா­ரங்­களை கெடுக்­கின்­றனர்.

கேள்வி :-எனது கேள்வி அது­வல்ல, அவர்கள் தானே பிர­தான பள்­ளி­வா­சல்­களை நிரு­வ­கிக்­கின்­றனர் ?

பதில் :- ஆம் அவர்கள் தான். இப்­போது உலமா சபைக்­குள்­ளேயே இன்­னொரு பிரிவு உரு­வா­கக்­கூ­டிய நிலைமை உள்­ள­தாக தெரிய வரு­கின்­றது.

கேள்வி :- ஹலால் அதி­கா­ரத்தை அவர்கள் எவ்­வாறு பெற்­றார்கள் என்று எதுவும் தெரி­யுமா ?

பதில் :- இதனை அவர்கள் கட்­டா­ய­மாக உரு­வாக்­கிக்­கொண்­டார்கள். எங்கும் அங்­கீ­கா­ரமும் பெற­வில்லை. அவர்­களின் வியா­பா­ர­மாக மாற்­றிக்­கொண்­டுள்­ளனர். ஹலால் சான்­றிதழ் இருந்தால் தான் வியா­பா­ரங்­களை செய்ய முடியும் என கூறி வரு­கின்­றனர். இதனை கணக்கு போட்­டுப்­பார்த்தால் பாரிய அளவு நிதி இதில் புழங்­கு­கின்­றது. இது முஸ்லிம் இல்­லாத அனை­வ­ரதும் வியா­பா­ரங்­க­ளுக்குள் நுழைந்து புற்­றுநோய் போன்று பர­வி­விட்­டது. இன்று உல­மா­சபை நேர­டி­யாக இதனை செய்­யா­த­போதும் கூட இன்­னொரு நிறு­வ­ன­மாக இது உரு­வாகி அதே வேலையை செய்து வரு­கின்­றனர். அலவி மௌலானா ஒரு சர்­வ­தேச சஞ்­சி­கைக்கு வஹா­பிசம் குறித்து கூறி­யுள்ளார். இலங்­கையில் வஹா­பிசம் பர­வு­கின்­றது என்று அவர் கூறி­யுள்ளார். அசாத் சாலியின் சகோ­தரர் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு வஹா­பிசம் குறித்து கூறி­யுள்ளார். இது நீண்ட கால­மாக பரவி வரு­கின்ற ஒன்­றாகும். உலமா சபை இந்த ஆணைக்­கு­ழுவை ஏமாற்றும் நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளது. அளுத்­த­கம சம்­பவம் தான் பயங்­க­ர­வா­தத்­திற்கு காரணம் அதற்கு நாம் தான் காரணம், என்று கூறு பிரச்­சி­னை­களை திசை திருப்ப முயற்­சிக்­கின்­றனர்.

நாம் ஆரம்­பத்தில் இருந்தே முஸ்லிம் அச்­சு­றுத்தல் குறித்து ஆட்­சி­யா­ளர்­களை வலி­யு­றுத்­தினோம். முன்னாள் ஜனா­தி­பதி , இப்­போ­தைய ஜனா­தி­பதி ஆகிய இரு­வ­ருக்கும் நாம் கடி­தங்கள் மூல­மாக பல கார­ணி­களை கூறினோம். தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்கும் ஐ.எஸ் பயங்­க­ர­வாத நகர்­வுகள் குறித்து தெரி­யப்­ப­டுத்­தினோம். பிர­த­ம­ருக்கும் நாம் தெரி­வித்தோம். இந்த அச்­சு­றுத்தல் குறித்து பாது­காப்பு தரப்பை அறி­வு­றுத்த வேண்டும் என்ற கோரிக்­கையை நாம் வலி­யு­றுத்­தினோம். பொலிஸ்மா அதி­ப­ருக்கும் நாம் பல கடி­தங்­களை அனுப்­பினோம். பொலிஸ்மா அதி­பரின் பெயர் தெரி­ய­வில்லை.

கேள்வி :- எந்த காலத்தில் அனுப்­பி­னீர்கள்?

பதில்:- 2017 ஆம் ஆண்டு

குழு:- இலங்­கக்கோன் தான் அப்­போது இருந்தார்

டிலந்த:- எனக்கு பெயர் தெரி­யாது. ஆனால் கடி­தங்­களை அனுப்­பினேன். எவ்­வாறு இருந்­தாலும் நாம் பல தட­வைகள் அறி­வித்­துள்ளோம். அது மட்டும் அல்ல எமக்கு ஐ.எஸ் அச்­சு­றுத்தல் வந்­தது. நாம் 2015ஆம் ஆண்டு பொது­ஜன பெர­முன (bodhu jana peramuna ) என்று செயற்­பட்டோம். இப்­போ­துள்ள பொது­ஜன பெர­முன அல்ல.

குழு :- ஒரு எழுத்து தானே வித்­தி­யாசம்

டிலந்த:- ஆனால் வேலைத்­திட்டம் வேறு. அது மட்­டு­மல்ல. இந்து ஆலயம் ஒன்­றுக்கும் ஐ.எஸ் காரர்கள் இங்கு தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். இது குறித்து அமைச்சர் மனோ கணே­ச­னுக்கு நாம் தெரி­வித்தோம். மேலும் அளுத்­கம சம்­ப­வத்தின் போது பொது­பல சேனா தான் விமர்­சிக்­கப்­பட்­டது. ஞான­சார தேரரின் அமெ­ரிக்க விசா நிறுத்­தப்­பட்­டது. ஆனால் இந்த உல­மாக்கள் செய்யும் செயற்­பா­டுகள் குறித்து ஆராய யாரும் இல்லை. பணம் கொட்­டு­கின்­றது. அளுத்­க­மவில் நாம் கூட்­டங்­களை நடத்த தீர்­மா­னிக்­க­வில்லை. அழைப்பின் பேரில் சென்று அங்கு பூஜை ஒன்றில் கலந்­து­கொண்டோம். அதன் பின்னர் அங்கு சென்று ஞான­சார தேரர் சற்று கடி­ன­மாக பேசினார். ஆனால் நாம் கல­வ­ரத்தை உரு­வாக்­க­வில்லை. முஸ்லிம் நபர்கள் தான் குழப்­பினர். கற்­களை கொண்டு எம்­மீது தாக்­குதல் நடத்­தினர்.

கேள்வி :- ஞான­சார தேரரின் கருத்­துக்கள் மோச­மாக இருந்­தது தானே? அதனால் தான் குழப்பம் வந்­தது.

பதில்:- அவ­ரது கருத்­தினால் அவ்­வாறு கல­வரம் வர­வில்லை. இது திட்­ட­மிட்ட தாக்­குதல்.

கேள்வி :- இறுக்­க­மான கதை என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களே?

பதில் :-அழுத்­த­மாக பேசு­வது வேறு, வெறுப்பு பேச்சு வேறு. பேசி­யது என்­னவோ கடு­மை­யா­ன­தாக இருக்­கலாம். ஆனால் பேசிய விட­யங்கள் உண்­மை­யா­னது. “அப சரணை ” என்று கூறினார். ஆனால் ஒன்றும் நடக்­க­வில்லை தானே.

கேள்வி :- கடு­மை­யாக பேசி­விட்டு மனதில் ஒன்றும் இல்லை என கூற முடி­யாதே ?

பதில்:- நானும் ஏற்­றுக்­கொள்­கின்றேன். உரத்துப் பேசி அர்த்தம் இல்லை. ஆனால் நாம் காலா­கா­ல­மாக இது குறித்து பேசி எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை என்றால் வேதனை ஒன்று ஏற்­படும் தானே. இது நியா­ய­மான கோபம் தானே. நாம் எவ்­வ­ளவோ கூறியும் யாரும் கருத்தில் கொள்­ள­வில்லை என்றால் என்ன செய்­வது. இப்­போது அவ­சர அவ­ச­ர­மாக மத்­ரசா சட்­டத்தை கொண்­டு­வர முயற்சி எடுக்­கின்­றார்கள்

குழு :- நீங்கள் தவ­றாக கூறு­கின்­றீர்கள், நீங்கள் மத்­ரசா குறித்து கூறும் கார­ணி­களை தான் நாமும் கூறி நட­வ­டிக்கை எடுக்க முயற்­சிக்­கின்றோம்.

டிலந்த:- சஹ்­ரானின் குண்டு வெடித்த பின்னர் தானே இது எல்லாம் நடக்­கின்­றது.

குழு:- இப்­போ­தா­வது இடம்­பெ­று­கின்­றதே

டிலந்த:- ஆம். அதனை வர­வேற்­கின்றோம். இன்று உல­கத்தில் சிங்­கள பௌத்­தர்கள் சிறு­பான்­மை­யாக உள்­ளனர்.

சரத் பொன்­சேகா :- ஆம் உல­கத்தில் சிங்­களம் சிறு­பான்மை இனம் தானே. அதில் என்ன மாற்றுக் கருத்து உள்­ளது.

டிலந்த:- ஆம், ஆனால் இங்கும் நான் அவ்­வாறு இருக்க முடி­யாதே. கள்­ளத்­தோணி போன்று நாம் மாறி­விட்டோம் என்­பதே வருத்­த­மாக உள்­ளது.

பதில் :- அளுத்­கம சம்­ப­வத்­துக்கு முன்னர் இவர்கள் அடிப்­ப­டை­வாத கொள்­கையில் இருந்­துள்­ளனர். நேற்று மஹிந்த ராஜபக் ஷவை சந்­தித்து பேசும் போதும் கூட நாம் இந்த கார­ணி­களை கூறினோம். மேலும் ஏப்ரல் 21ஆம் திகதி தாக்­கு­த­லுக்கு வெடி­பொ­ருட்­களை நான் வழங்­கினேன் என வெளி­நாட்டில் இருந்து எனக்கு ஒரு தகவல் வந்­தது. பொது­பல சேனா சஹ்­ரா­னுக்கு வெடி­பொருள் கொடுக்­கின்­றது என கூறி எம்மை நாச­மாக்கும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. சிங்­கள மக்கள் மத்­தியில் தவ­றான கருத்­துக்­களை கொண்டு சேர்க்க இவ்­வா­றான திட்டம் ஏதும் வகுக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்றே நினை­கின்றேன்.
கேள்வி :- இது குறித்த ஆதாரங்கள் உள்ளனவா ?

பதில் :- நீங்கள் புலனாய்வு துறையிடம் கேளுங்கள். அவர்கள் மறுக்க மாட்டார்கள்.

கேள்வி :- உங்களிடம் ஆதாரம் இருந்தால் எங்களிடம் தாருங்கள். நாம் கவனம் செலுத்துவோம்

பதில்:- நான் ஏற்பாடு செய்கின்றேன்.

கேள்வி :-நீங்கள் வெடிபொருள் வியாபாரம் ஏதும் செய்கின்றீர்களா ?

பதில் :-இல்லை. நான் அவ்வாறு எந்த வேலையிலும் ஈடுபடவில்லை

கேள்வி :- நீங்கள் சர்வதேச பிரஜை தானே. அதனால் தான் கேட்டேன்

பதில்:- இல்லை. நான் அவ்வாறு அல்ல.

கேள்வி :- பொதுபல சேனா எதிர்காலத்தில் தூய்மையான பெளத்த கொள்கையை கொண்டு செல்லுமா ?

பதில்:- நிச்சயமாக. நீங்களும் இணைந்துகொள்ளுங்கள். நாம் எப்போதுமே பள்ளிகளை தாக்கவோ அல்லது இரத்தக்கறை படியவோ இல்லை. ஞானசார தேரர் பல நல்ல காரியங்களை செய்துள்ளார்.

ஆனால் அவை எல்லாம் வெளியில் வரவில்லை. துரதிஷ்டவசமாக எமக்கு எங்கு என்றாலும் கெட்ட பெயர் வருகின்றது. vidivelli 

1 கருத்துரைகள்:

இனி சிங்களவர்கலும் நிதி,பிச்சை தரமாட்டார்கல்.ஏனெனில் அவர்களுக்கும் தெரிந்து விட்டது உங்களின் சுய ரூபம்.எங்கலோடு தினமும் 1000 க் கணக்கான சிங்களவர்கள் பழகுகிறார்கள் அவர்களின் கருத்துப்படி வெகு விரைவில் உங்களின் ஆட்கலுக்கு உதை,அடி விழும் போல் தெரிகிறது.

Post a Comment