Header Ads



மத்ரஸாக்கள் குறித்து, நேரில் சந்தித்து விளக்கமளிப்பு

இலங்­கையில் சுமார் 3000 அரபு மத்­ர­ஸாக்கள் இயங்கி வரு­கின்­றன. அவற்றில் அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­படுகிறது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன பகி­ரங்­க­மாக முன்­வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டுகள் தவ­றா­னவை. மத்­ர­ஸாக்­களில் மாண­வர்கள் நல்­வ­ழிப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள் என்­பதை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை அவரை நேரில் சந்­தித்து தெளி­வு­களை வழங்­கி­யது. 

நேற்றுக் காலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் உதவிச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் தலை­மை­யி­லான உலமா சபையின் பிர­தி­நி­திகள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல ஜய­வர்­த­னவின் இல்­லத்­துக்கு சென்று அரபு மத்­ர­ஸாக்கள் தொடர்­பான விளக்­கங்­களை வழங்­கி­னார்கள்.

இலங்­கையில் 3000 அரபு மத்­ர­ஸாக்கள் இயங்­க­வில்லை எனவும் 315 அரபு மத்­ர­ஸாக்­களே இயங்கி வரு­வ­தா­கவும் உலமா சபை­யினால் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­த­ன­வுக்கு விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.

அரபு மத்­ர­ஸாக்­களில் எத்­தனை பிரி­வுகள் இயங்கி வரு­கின்­றன என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­த­னவின் கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கையில் அரபுக் கல்­லூ­ரிகள், அஹ­தியா பாட­சா­லைகள், மக்தப் பாட­சா­லைகள், ஹிப்ளு மத்­ர­ஸாக்கள் உள்­ள­டங்­கு­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

மத்ரஸாக்கள் தொடர்பாக தான் கொண்டிருந்த தவறான கருத்துகளுக்கு தெளிவுகள் பெற்றுக் கொண்டதாக அவர் உலமா சபை பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

ஏ.ஆர்.ஏ. பரீல்

6 comments:

  1. அப்போ எவ்வாறு எந்த வித ஆதாரமும் இல்லாமல் 3000 எனச் சொன்னார்.

    ReplyDelete
  2. இவன் ஆருவஆ ப்பா turtle ninja character மாரி இருக்கான்

    ReplyDelete
  3. Good Handle, this type of solving method should be keep it up by the ACJU.

    ReplyDelete
  4. Tomorrow WEERAWANSA might say some other lies about
    Mosques and Gammanpila will accuse of something else ,
    are you all going to their houses to prove your
    innocence ? You have nothing else better to do ? They
    know they are lying . It is you who don't know what
    they are up to . The more you try to be innocent the
    more they will play hell with you ! Just ignore them
    or reply to them in public if they lie in public !

    ReplyDelete
  5. Please clear the doubts of the politicians. They are also a part of the human.

    ReplyDelete
  6. வீண் பலி சமத்துபவர்கள் அடிப்படை வாதம் என்றால் என்ன என்பதை கூறுவார்களா?

    ReplyDelete

Powered by Blogger.