July 31, 2019

சஹ்ரான் குர்ஆனை பின்பற்றினார் என்றால், வீரவன்ச பௌத்தத்தை பின்பற்றியா பயங்கரவாதத்தில் ஈடுபட்டார்..?

சஹ்ரான் பயங்கரவாதம் புரிய அல்குர்ஆன் காரணமாக இருந்தது எனக் கூறுகின்றார். அப்படியெனில் விமல் வீரவங்க பௌத்த தம்மபதவின் அடிப்படையிலா பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பயங்கரவாதி சஹ்ரான் திரிபீடகத்தையோ, பைபிலையோ பின்பற்றியவர் அல்லர் எனவும், அல்குர் ஆனின் படி வஹாப் வாதத்தை பின்பற்றி நடந்தவர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று -31- அவசரகாலச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்து பேசிய அவர்,

வஹாப் வாதம் என்றால் என்னவென்று முதலில் தெளிவுபடுத்துமாறு இந்த வஹாப் வாதிகளைப் பற்றிக் கதைகூறும் நபர்களிடம் கேட்கின்றோம்.

சஹ்ரான் பயங்கரவாதம் புரிய அல்குர்ஆன் காரணமாக இருந்தது எனக் கூறுவதாயின், 1988 ஆம் 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்த நாட்டில் விமல் வீரவங்ச பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டது பௌத்த தம்மபதவின் அடிப்படையிலா என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார்.

8 கருத்துரைகள்:

Very Good Br Mujeeb.

இந்த நாய்கள் நாக்கப் புடிங்கிட்டு சாகிறமாதிரி இப்படி நாலு கேழ்வி கேளுங்க.............

போர்றா கோலை
🌷

சாதாரண ஒரு நபர் கூறினானாலும் பரவாயில்லை,ஆனால் அவரே ஒரு முன்னாள் தீவிரவாதி.அவர் எவ்வாறு இப்படி வெட்கம் இல்லாமல் பேசுவது

வஹாபிசம் வஹாபிசம் என்று மிக முக்கியமாக இன்று இலங்கையில் “அதிமேதாவி”கள் எனப் பெயர் வாங்கியுள்ள ஞானசாரர் அத்துரலிய ரத்ன தேரர் போன்றோர் கூவிக்கொண்டு திரிகின்றனர். அத்தோடு விமல் போன்ற காணாமல்போய்க் கண்டுபிடிக்கப்பட்ட பிரபல இனவாதிகளும் இந்தத் தேரர்களைப் பின்பற்றிக் கொண்டு திரிகின்றனர். இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு இந்த வஹாபிசத்தில் எந்த நம்பிக்கையும் இல்லை. வஹாபிசம் என்றால் என்ன என்றுகூடத் தெரியாத முஸ்லிம்களே இலங்கையில் வாழ்கின்றனர். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் குர்ஆனும் ஹதீஸ{ம்தான். இன்றைய முஸ்லிம்கள் தற்காலத்தில் பௌத்த கோட்பாடுகளைப்பற்றி அறிய உண்மையிலேயே பெரிதும் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர். பௌத்தம் என்றால் என்ன? பௌத்தத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது? பஞ்சசீலக் கொள்கைகள் என்றால் என்ன? பௌத்தத்தில் மானிட வாழ்வுபற்றி என்ன விளக்கம் கொடுக்கபட்டுள்ளது? என்பதுபற்றி எல்லாம் அறிய இலங்கை மக்கள் சகலரும் ஆவலாக இருக்கின்றனர். உலகில் 10 நாடுகளில் பௌத்த மக்கள் பெரும்பான்மையினராக வாழுகின்றனர். சீனா தாய்லாந்து ஜப்பான் மியன்மார் இலங்கை வியற்னாம் கம்போடியா தென் கொரியா என்பன பிரசித்தி வாய்ந்த பௌத்த நாடுகளாகும். இந்தியா (9 Million) மலேசியா (5 Million) ஆகியவைகளில் அதிகம் பௌத்தர்கள் வாழ்கின்றனர். இந்நாடுகளில் இலங்கையையும் மியன்மாரையும் தவிர்ந்த ஏனைய நாடுகளில் பிற மதத்தினர்களுக்கு இடைஞ்சல் ஏதுமின்றி அந்நாட்டு அரசியல் பொருளாதார சமூகம்சார் நடவடிக்கைகள் மிகவும் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. இதனால் அங்குள்ள மக்களுல் சராசரிக்கு மேற்பட்டோர் சுமுகமான முறையில் தம் வாழ்க்கையை நடாத்திச் செல்கின்றனர். அங்கு பௌத்தம் சிறப்பான முறையில் பௌத்த துறவிகளின் கண்காணிப்பின்கீழ் சிறப்பாகப் பேணப்பட்டு வருகின்றது. மக்கள் கோயில்களுக்குச் சென்று தம் மதக்கடமைகளை சிறப்பான முறைகளில் மேற் கொள்கின்றனர். மேற்கூறப்பட்ட பத்து நாடுகளில் எட்டுநாடுகளில் மத இன கலவரங்கள் எதுவும் இடம்பெற்றதாக வரலாறு இல்லை. கூட்டுப் பொருளாதாரம் அங்கு மேம்படுத்தப்படுகின்றது. ஆனால் இலங்கையின் நிலைமை அவ்வாறானதல்ல. அரசியல் கட்சிகளுக்கிடையே காணப்படும் அழுக்காறு மதத்தை அரசியலுக்குள் நுழையவைத்து வேடிக்கை பார்க்கின்றது. சராசரிக்கு மேற்பட்ட மக்கள் இன்னமும் காட்டுமிராண்டிகளது வாழ்க்கையையே வாழ்கின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் மதங்கள் எதனைப் போதிக்கின்றன என்பது துறவிகளுக்கும் மக்களுக்கும் சரிவர தெளிவாக ஊட்டப்படவில்லை என்பதேயாகும். மத விழுமியங்களை அழகான முறையில் மக்களுக்கு ஊட்டி அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய துறவிகள் இன்று அரசியல் என்னும் சாக்கடையினுள் தாங்கள் வீழ்ந்தது மாத்திரமன்றி தங்களுக்குத் துணையாக மற்றவர்களையும் இழுக்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர்கள் மற்றும் பல புத்திஜீவிகளும் இதற்கு விதிவிலக்கல்லர். மங்கள சமரவீர ராஜித சேனாநாயக்க போன்ற ஒருசிலர் விதிவிலக்காக இருந்தாலும் இலங்கையின் தன்மானத்தைக் காக்க எல்லோரும் இணைந்தே இனவாதம் மதவாதம் மொழிவாதம் போன்றவற்றைக் களைந்து கொடுக்கப்பட வேண்டியவரகளுக்குக் கொடுத்து எடுக்கப்பட வேண்டியவர்களிடமிருந்து எடுத்து பகிர்வினை Distribution i சீராக்காவிட்டால் நாட்டின் எதிர்கால நிலைமை கேட்பார் அற்றதாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பொதுவாக பௌத்தர்களுக்கு மாத்திரமல்ல சகல மாணவர்களுக்கும் பௌத்தத்தின் கொள்கைகள் பஞ்ஞசீலக் கருத்துக்கள் என்பன முறையாக பௌத்தமல்லாதோர்களுக்கு விருப்புப் பாடமாக ஊட்டப்படல் வேண்டும்.

சஹ்ரான் இஸ்லாத்தை கற்று தேர்ந்த ஒரு மௌலவி . ஆனால் வீரவன்சவிற்கு பவுத்த சமயத்தை பற்றி எவ்வளவு தெரியுமோ தெரியாது

Kumar சஹ்ரானுக்கு நீர் moulavi பட்டம் கொடுத்தாயா? சஹ்ரான் என்பவன் moulavi பட்டம் பெறும் முன்னரே அவனின் Islam மார்க்கத்துக்கு விரோதமான கருத்துக்களினால் இடை நடுவில் அரபு கலாசாலையில் இருந்து விரட்டப்பட்டவன்.mr.kumar அப்போ புலி பயங்கரவாதி பிரபாகரனும் மனித ரத்தம் குடித்த மிருகம் அவனுக்கு போய் எப்படி நீங்கள் “ சா வீரர்” sorry 😐 “மயிர் வீரர்” தினம் எடுப்பது

சஹ்ரானுக்கு நான் மௌலவி பட்டம் கொடுக்கவில்லை. காத்தான்குடியை சேர்ந்தவர்கள் சஹரனை குறிப்பிடும்பொழுது சஹ்ரான் மௌலவி என்றே குறிப்பிடுகிறார்கள். அது மட்டுமல்லாது காத்தன்குடியிலுள்ள அரபு கலாசாலையில் படிப்பை இடை நிறுத்தினாலும் குருநாகல் பிரதேசத்திலுள்ள ஒரு அரபு கல்லூரியில் மௌலவி படிப்பை நிறைவு செய்ததாக கூறுகிறார்கள்.சஹ்ரானது NTJ க்கு சொந்தமாக ஏராளமான பள்ளிவாசல்கள் இலங்கையில் உண்டு.

Post a Comment