Header Ads



மல்கம் ரஞ்சித், ஒரு இனவாதி - அமில தேரர்

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஒரு இனவாதி என தம்பர அமில தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இனவாதம் எங்கிருந்து வந்தாலும் அது இனவாதம்தான். மஹிந்த ராஜபக்சவின், சஹ்ரானின் இனவாதத்தை எதிர்க்கின்றோம் என்றால், அஸ்கிரிய பீடத்தின் இனவாதத்தையும் எதிர்க்க வேண்டும்.

அஸ்கிரிய பீட மகாநாயக்கர் என்ன சொன்னார்? விஞ்ஞானப்பூர்வமான எவ்வித ஆதாரமுமின்றி, வைத்தியர் ஷாபி தொடர்பில் இனவாத அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த நிலைமையை பயன்படுத்தி, உள்ளுக்குள் இருந்த மஹிந்த ராஜபக்ச மீதான அபிமானத்தின் அடிப்படையில் தனது அனுபவம், பௌத்த சிந்தனை அனைத்தையுத் மறந்து, ஒரு பிரதான பீடத்தின் தலைவர், பௌத்தத்திற்கான முன்னிற்கின்ற தலைவர் ஒருவர், தானும் கல்லெறிந்து ஒருவரை கொலை செய்யுமாறும், முஸ்லிம் கடைகளுக்குச் செல்ல வேண்டமெனவும் கூறுகையில் அவருக்கு எதிராக செயற்படாமல் என்ன செய்வது?

அவரது கருத்து பௌத்த சிந்தனைக்கு எதிரானது இல்லையா? இனவாதம் எங்கிருந்து வந்தாலும் அது இனவாதம்தான். மஹிந்த ராஜபக்சவின், சஹ்ரானின் இனவாதத்தை எதிர்க்கின்றோம் என்றால், அஸ்கிரிய பீடத்தின் இனவாதத்தையும் எதிர்க்க வேண்டும்.

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை என்ன செய்தார்? அவருக்கு நோபல் பரிசு வழங்குவது தொடர்பில் கூட பேசினார்கள். அந்தளவிற்கு அவர் பிரபலமானார். கொச்சிக்கடையிலும், கட்டுவாப்பிட்டிய மற்றும் மட்டக்களப்பிலும் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன.

எனினும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கர்தினால் கொச்சிக்கடையிலும், கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திலும் பாதிக்கப்பட்வர்கள் தொடர்பில் அனுதாபங்களைத் தெரிவித்தார்.

அவர் மட்டக்களப்பு சியோன் தேவாலய குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஒரு வார்த்தைகக்கூட பேசவில்லை. ஆகவேதான் அவர் ஒரு இனவாதி என நான் அறிந்துகொண்டேன். அவரை நான் நேரில் சந்தித்ததில்லை சந்தித்தால் நிச்சயமாக நான் இதனை கேட்பேன்.

மட்டக்களப்பில் உயிரிழந்தவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்கள் மதத்தலைவர் ஆகவே அவர்களுக்கு எதிராக காரசாரமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.

எனினும் இரண்டு மூன்று வாரங்களின் பின்னர் அவர் சியோன் தேவாலயத்திற்கு சென்றார். அதனை ஏற்றுக்கொள்கின்றோம். நன்றி தெரிவிக்கின்றோம்.” என கூறியுள்ளார்.

2 comments:

  1. உன்மையாக இருக்கலாம் நீங்கள் சொல்வது.

    ReplyDelete
  2. The only person to be awarded the Nobel Peace Prize in Sri Lanka

    ReplyDelete

Powered by Blogger.