Header Ads



நிந்தவூரில் மரணமடைந்த இரட்டை, குழந்தைகளின் படங்கள் வெளியாகியது


நிந்தவூரில் இன்று காலை இரட்டைக் குழந்தைகளை வெட்டிக் கொன்ற தாயார் ஏற்கனவே ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவமொன்று தொடர்பில் கடும் மனவிரக்தியில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த மனவிரக்தியினால் பாதிக்கப்பட்டிருந்த தாயார் தொடர்பில் கணவர் மிகவும் கவனத்துடன் இருந்தபோதும், அவர் சற்று அயர்ந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இரண்டு பிள்ளைகளையும் கொன்றது தானே என்றும் ஒருவித மனவிரக்தியில் என்ன நடந்தது என்றே தனக்கு தெரியவில்லை என்றும் அந்த தாயார் தெரிவித்திருப்பதாக இது தொடர்பில் விசாரிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

இன்று கொல்லப்பட்ட இருவரும் பெண்பிள்ளைகள்.ஏற்கனவே ஆண் குழந்தை ஒன்று இறந்த துயரத்தில் இந்த தாயார் பாதிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

( இரட்டைப் பெண்குழந்தைகளின் இணைக்கப்பட்டுள்ள படம் அவர்களது தந்தையாரின் முகநூலில் எடுக்கப்பட்டது ) TN

5 comments:

  1. இந்த தாய் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தும் அதுபற்றி குடும்பமோ அல்லது சமூகமோ அக்கறையின்றி இருந்த தன் விளைவு தான் இந்த படுபாவக்கொலை. இதற்கு முழு சமூகமும் பொறுப்பேற்கவேண்டியிருக்கின்றது. இதுபோன்ற நிலைமைகள் சமூகத்தில் காணப்பட்டால் குறிப்பாக நெருங்கிய குடும்பம், சமூக ஆர்வலர்கள், குறிப்பாக பள்ளிவாயல் நிர்வாகிகள் இந்த விடயங்களை மனிதாபிமானநோக்கில் அணுகி அவற்றுக்குமேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை உடனடியாகமேற்கொண்டு இதுபோன்ற படுபாவங்கள் சமூகத்தில் நடைபெறாது உடனடியாகத் தடைசெய்ய சமூக ஆர்வலர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள் அவசரமாக முன்வரவேண்டும். அல்லாஹ் மிகவும் விரும்பக்கூடிய அமல்கள், அவனுடைய அடியார்களின் உடனடித் தேவைகளைக் கவனிப்பாகும் என நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

    ReplyDelete
  2. 100 percent correct professional translation services.

    ReplyDelete
  3. yes.. mental health is one of the most ignorant area among us.

    ReplyDelete
  4. Well said Professional translation service.

    ReplyDelete
  5. May be the reason is DOWRY. Since we notice dowry is most popular in Eastern province

    ReplyDelete

Powered by Blogger.