Header Ads



ஆட்ட முடிவைக் கண்டு அதிர்ச்சியில் உள்ளேன், வீரர்களை நாயகர்களைப் போல வரவேற்போம் - நியூசிலாந்து பிரதமர்

ஞாயிறன்று நடந்த 2019 உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடயேயான பரப்பரப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டென் கூறியுள்ளார்.

தங்கள் நாட்டின் அணியைக் குறித்து பெருமிதம் கொள்வதாக அவர் ஆர்.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

சமூக வலைதளத்தில் நியூசிலாந்து அணி போட்டியில் தோற்றாலும் மக்கள் மனதை வென்றுள்ளதாக நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்து இந்த போட்டியில் பவுண்டரி கணக்கின் அடிப்படையில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது.

அனைத்து நியூசிலாந்து ரசிகர்களைப்போல, நானும் ஆட்டத்தின் முடிவைக் கண்டு அதிர்ச்சியில்தான் உள்ளேன் என நியூசிலாந்தின் வானொலி ஒன்றில் தெரிவித்திருந்தார் அர்டென்.

ஆனால் முடிவுகளை விட்டுவிட்டுப் பார்க்கும்போது, நியூசிலாந்து அணி ஆடிய அற்புதமான கிரிக்கெட்டிற்காக நியூசிலாந்து மக்களைப்போல நானும் பெருமை கொள்கிறேன் என அவர் கூறினார்.

இன்ஸ்டாகிராமில் அர்டென் இங்கிலாந்து அணிக்கு பாராட்டுகளை தெரிவித்த்துடன், சூப்பர் ஒவர் ஓர் ஆண்டு நீடித்ததைப் போல உணர்ந்தோம் எனப் பதிவு செய்திருந்தார்.

இந்த தொடரிலும், இந்தப் போட்டியிலும் நியூசிலாந்து சிறப்பாக விளையாடியது என பிரிட்டன் அரசி கூறியதாக ட்விட்டரில் ராயல் ஃபேமிலி பக்கத்தில் பதிவாகியிருந்தது.

இது நியூசிலாந்து அணிக்கு இறுதிப் போட்டியில் கிடைக்கும் இரண்டாவது தோல்வி ஆகும். 2015ல் ஆஸ்திரேலியாவுடன் இறுதிப்போட்டியில் மோதித் தோற்றது நியூசிலாந்து.

தோல்வியடைந்தாலும் நிறைய பேர் அந்த அணி சிறந்த விளையாட்டு உணர்வை வெளிபடுத்தியதாக கூறியுள்ளார்கள்.

குழந்தைகள் விளையாட்டு மீது ஆர்வம் கொள்ளவேண்டாம் என்று நகைச்சுவையாக கருத்து பதிவிட்டிருந்தார் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம்.

நியூசிலாந்து ரசிகர்கள் விரும்பியதை எங்களால் கொடுக்க முடியவில்லை என பதிவிட்டும் மன்னிப்பு கேட்டிருந்தார் அவர்.

ராஸ் டெய்லர் தன்னுடைய சிரிக்கும் மகளுடனும் அழுகும் மகனுடனும் இருக்கும் படத்தை பதிவிட்டு "ஆட்டத்திற்குப்பின் கலவையான உணர்வுகள்" என பதிவிட்டிருந்தார்.

"வீரர்கள் அனைவருக்கும் மரியாதைமிக்க வரவேற்பு கிடைக்கும்" என அர்டென் உள்ளூர் பத்திரைக்கயாளர்களிடம் கூறியுள்ளார்.

2 comments:

  1. Both Eng & NZ are World Champions

    ReplyDelete
  2. For me both England and NZ are same.Stil I supported NZ for the high regards I have with NZ pime minister Jacinda Ardern (Jacinda Kate Laurell Ardern).She is really a great lady.

    ReplyDelete

Powered by Blogger.