Header Ads



நாட்டில் முஸ்லிம் - சிங்கள மோதலை ஏற்படுத்த முயற்சி - நாரம்பனாவே ஆனந்த தேரர்

இலங்கையில் மீண்டும் இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்த சில தரப்புகள் செயற்பட்டு வருவதாக அஸ்கிரிய பீடத்தின் நாரம்பனாவே ஆனந்த தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் அஸ்கிரிய மாநாயக்க தேரர் வெளியிட்ட கருத்திற்கு பிழையான அர்த்தகம் கொடுப்பதற்கு அரச சார்பற்ற அமைப்பு ஒன்று முயற்சிப்பதாக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பொறுப்பு கூறும் தரப்பிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாநாயக்க தேரர் கூறிய ஒரு வார்த்தையை வைத்து கொண்டு முஸ்லிம் மதத்தை அவர் அவமதித்தார் என ஒரு தரப்பு குற்றம் சுமத்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் பணம் பெறும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று அஸ்கிரிக மாநாயக்க தேரர் மீது பழி போட முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் நாட்டில் முஸ்லிம் - சிங்கள மக்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்த இந்த தரப்பினர் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அரச சார்பற்ற நிறுவனம் தொடர்பில் ஆராய்ந்து அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அஸ்கிரிய மாநாயக்க தேரர் சார்பில் தெரிவித்து கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.