Header Ads



முஸ்லிம் சமூகத்தை, முட்டாளாக்கியவர்களின் கதை

ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க் கூலிக்காக குழாய்க்கிணறு வெட்டப்போனவன் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பிடிக்கப்பட்டு 3 மாதமாக சிறையில் இருக்கிறான். பருவ வயது அடைந்து தானாக விரும்பி முகத்தை மூடிய ஆயிரக்கணக்கான பெண்கள் அழுத கண்ணீரோடு வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கிறார்கள் இன்னும்.குற்றமிழைக்காத நூற்றுக் கணக்கான அப்பாவிகள் இன்னும் சிறையில் வாடுகிறார்கள். 

முஸ்லிம் தனியார் சட்டம்,முஸ்லிம் பெண்களின் ஆடை,மத்ரஸா கல்வி,முஸ்லிம்களின் வியாபாரம் என்று அனைத்தும் குறிவைக்கப்படுகின்றன. 

முஸ்லிம் சட்டத்தரணிகள், முஸ்லிம் சமுக செயற்பாட்டாளர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.

முஸ்லிம் சமுகத்தின் தலைக்கு மேல் ஒரு நிரந்தரமான கத்தி கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கிறது. 
ஒரு சமுகமே அநாதையாய்க் கிடக்கிறது.

இதில் எந்தப் பிரச்சினையை தீர்க்கப்படவில்லை என்பதற்காக இவர்கள் பதவி துறந்தார்கள்?
எந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்ட மகிழ்ச்சியில் பதவி ஏற்றார்கள்?

இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதற்காகவும், முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதற்காகவும் பதவி துறந்தார்கள் என்றுதானே நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம்?

என்ன செய்தாலும் கடைசியாகப் பதவியை விட்டுவிட்டார்கள்தானே என்று வாய் நிறையப்பாராட்டினோம் அப்படித்தானே.

இங்கே எங்கே தவறு நடக்கிறது? அரசியல்வாதிகள் பதவி ஏற்றதிலா? அல்லது எமது அரசியல் பற்றிய புரிதலிலா?

இந்த ராஜனாமா விவகாரத்தை நாம் புரிந்ததில் மிகவும் தவறு இருக்கிறது.

ஜனாநாயக அரசியலில் ஒரு நிகழ்வைப் புரிந்து கொள்ள வேண்டுமாக இருந்தால் அந்த நிகழ்வு சார்ந்த அனைத்து நிகழ்வுகளையும் ஒன்றாகக் கோர்த்துப் பார்க்க வேண்டும். ஒரு அரசியல் நிகழ்வுக்கு தனியே ஒரு வியாக்கியானம் கொடுக்கக் கூடாது. அரசியல்வாதி ஒரு நிகழ்வுக்கு வெளிப்படையாகச் சொல்லும் காரணத்தை நம்பவே கூடாது. அந்தக் காரணத்தைப் பிரித்து மேய்ந்து அதற்குள் இருக்கும் உண்மையான காரணத்தை புரிந்து கொள்ள முனைய வேண்டும். ஒரு அரசியல்வாதியின் மேடைப்பேச்சு, பேட்டி என்பவற்றில் அவன் சொல்லும் விடயங்களை ஒரு போதுமே நம்பக் கூடாது.

சரி.இப்போது ராஜநாமா விவகாரத்தை சரியான வழியில் புரிய முனைவோம்.

ராஜநாமாவோடு ஒன்றாகச் சேர்த்துப்பார்க்க மறந்த நிகழ்வுகள்: 

01.றிஷாடுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை
02.ஏன் அந்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை விவாதத்திற்கு வரவில்லை
03.ரத்ன தேரரின் உண்ணா விரதம்
04.ஏன் ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் ராஜநாமா செய்தார்கள்
05.ஏன் ராஜநாமாச் செய்தவர்கள் எதிர்க்கட்சியில் உட்காரவில்லை.
06.ராஜநாமாச் செய்தபோது வைத்த கோரிக்கைகளின் பட்டியல் என்ன?

இவை அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால் எமக்கு ராஜநாமாவின் உண்மையான காரணம் புரியும்.

றிஷாடுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்தால் அது வாக்களிப்புக்குச் செல்லும்.ரிஷாடுக்கு எதிராக வாக்களிப்பதில் ஐ.தே.கட்சிக்குள்ளேயே பல குழப்பங்கள் இருந்தன.பலர் ரிஷாடுக்கு எதிராக வாக்களிக்கவே இருந்தார்கள்.அதனால் வாக்களிப்பை நடக்காமல் செய்ய வேண்டும்.
இது முதலாவது,

இரண்டாவது ரத்ன தேரரின் உண்ணாவிரதம் சிங்கள சமுகத்தை உசுப்பேற்றிவிட்டது.ரிஷாட் பதவியை இழக்காவிட்டால் பல சிங்கள வாக்குகளை ஐக்கிய தேசியக்கட்சி இழக்கும். சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த ரிஷாடின் பதிவியைப் பறிக்க வேண்டும்.

மூன்றாவது ரிஷாடின் பதவியை ரத்ன தேரருக்காக பறித்தால் அல்லது ராஜநாமா செய்ய வைத்தால் இந்த அரசாங்கத்தின் மீது ஏற்கனவே முஸ்லிம்கள் கொண்டிருந்த அபிப்பிராயமும் அழிந்து விடும். 
ஒரு இனவாதியின் உண்ணாவிரதத்திற்குப் பயந்து ஒரு முஸ்லிம் அமைச்சரை ராஜநாமாச் செய்ய வைத்த அரசாங்கம் என்ற பழியால் முஸ்லிம் வாக்குகளை ஐக்கிய தேசியக்கட்சி இழக்கும்.
அது ஆபத்தானது.

ஆகவே அன்று ரணிலுக்கு முன்னிருந்த சவால்கள்,  
01.சிங்கள மக்களையும் திருப்திப்படுத்த வேண்டும்
02.முஸ்லிம்களின் வாக்குகளையும் இழக்கக் கூடாது
03.நம்பிக்கையில்லாம் பிரேரணையை வாக்களிப்புக்கு கொண்டுவரக்கூடாது.

ரிஷாடைத் தனியாக ராஜநாமாச் செய்யச் சொன்னால்தானே பிரச்சினை.
இதோ அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் ராஜநாமாச் செய்யுங்கள்.ஐ.தே.கட்சி உட்பட.

அவ்வாறு செய்தால்,

01.சிங்கள மக்களும் திருப்தி அடைவார்கள். உண்ணாவிரதம் கைவிடப்படும்.
02.முஸ்லிம் வாக்களுகள் இழக்கப்படாது.மாறாக பதவியைத் துறந்தமைக்காக முஸ்லிம் அரசியல்வாதிகளின் நன்மதிப்பு முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிகரிக்கும்.
03.ரிஷாடுக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்புக்கு வராது.

ஒரு கல்லில் பல மாங்காய்.தலைவலியும் முடிந்தது.முஸ்லிம் வாக்கும் கிடைத்தது.
ஆகவே அனைவரும் ராஜநாமாச் செய்வார்கள்.அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகக் காட்டுவார்கள்.ஆனால் ஒரு போதும் எதிர்க்கட்சியில் உட்காரமாட்டார்கள். உட்கார்ந்தால் அரசாங்கம் ஆட்டம் கண்டுவிடும்.

சரி அப்படியென்றால் ரிஷாட் ராஜநாமாச் செய்தால் ரவூப் ஹக்கீமுக்கு நல்ல விடயம்தானே ஏன், ரவூப் ஹக்கீம் ரிஷாடைக் காப்பாற்ற முனைந்தார்?
ரிஷாடுக்கு எய்யப்பட்ட அம்பை இப்போது தடுக்காவிட்டால் அடுத்தது அந்த அம்பு தன்னைப் பதம் பார்க்கும் என்பதை அவர் நன்கறிவார். ரிஷாடைக் காப்பாற்றுவதன் மூலம் ரவூப் ஹக்கீம் தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டார். அவ்வளவுதான்.

ஆகவே 

ராஜநாமாச் செய்த போது சொன்ன காரணம்- முஸ்லிம் சமுகத்தின் நன் மைக்காக

ராஜநாமாச் செய்ததன் உண்மை நோக்கம் -ரிஷாட்டையும் ரணிலின் அரசாங்கத்தையும் காப்பாற்றி இழக்கவிருந்த முஸ்லிம் வாக்குகளைக் மீளப்பெற்று முஸ்லிம் அரசியல்வாதிகளை செயல் வீரரகளாகக் காட்டுவது.

பதவிகளை மீளப்பெற்றமைக்கான காரணம் - மேற் சொன்ன நோக்கம் நிறைவேறிவிட்டது.மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வது.

முட்டாளாக்கியது - முழு முஸ்லிம் சமுகத்தை.

படு முட்டாளாகியது -பதவி துறந்தவுடன் மாஷா அல்லாஹ்,தன்மானத் தலைவர்கள் என்று போஸ்ட் போட்டவர்கள்.

அடிமுட்டாள்கள் - இன்னும் இவர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள்.

Raazi Muhammadh Jabir 

9 comments:

  1. சும்மாகொர விட வேணாம் Raazi Muhammadh Jabir: உங்களுக்கு முஸ்லிம் சமூகத்தின்மீதுள்ள அன்பிற்கு நாங்கள் அடிமயாகின்றோம். எங்களுக்கும் கொஞ்சம் time வேனுங். ஒரு குறைஞ்ஞது ஒரு இரு நூறு வருசங்களாவது தேவை. அதுக்குள்ள முஸ்லிம்களின்ட பிரச்சினையை ஓரளவுக்காவது தீர்த்து வைக்கின்றோம்.

    ReplyDelete
  2. THE Muslims of COMMON SENSE knew all along that this
    was a DRAMA but the actors in the play , staged it
    for the gallery ! The act was mainly to SAVE THE
    GOVERNMENT FROM THE HUMILIATION OF surrendering to
    RATHANA THERO . Ranil can govern only through
    juggling from time to time with the support of
    traditional U N P vote base that was built by past
    leaders . Muslims can not rely on any major parties
    for their safety or livelihood because both parties
    have an increasing number of racist MPs ! Muslims
    must understand that their vote power has been
    challenged by muscle power of growing racism and no
    meaningful steps have been taken by any of past
    governments of nearly twenty five years ! Not all
    Muslims are dumb , blind and deaf . In my view , it
    is Muslim's vote power that is targeted , in other
    words Muslims are being forced to change their
    vote pattern !

    ReplyDelete
  3. செய்யவும் மாட்டான். செய்ய விடவும் மாட்டான். குறை கூறி..
    மற்ற்றவர் மலம் உன்டு பழகிய கூட்டம்..

    ReplyDelete
  4. well said this political dogs always travelling on muslim head

    ReplyDelete
  5. செய்யவும் மாட்டான். செய்ய விடவும் மாட்டான். குறை கூறி..
    மற்ற்றவர் மலம் உன்டு பழகிய கூட்டம்..

    ReplyDelete
  6. Raazi Muhammadh Jaabir அந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் முஸ்லிம் தலைவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தே முடிவெடுத்தார்கள் அதனை விட வேறு என்ன செய்வது. அவர்கள் மீது எந்த்த் தவறும் இல்லாத போது அமைச்சுக்களை பொறுப்பேற்பதில் என்ன தவறு இருக்கிறது. பதவி ஏற்காவிட்டால் நீங்கள் சொல்வதெல்லாம் உடனெடியாக நடந்து விடுமா? சும்மா எல்லாத்தையும் விமர்சிக்கிறத விட்டுட்டு positive ஆ யோசிங்க

    ReplyDelete
  7. ராஜினாமா தீர்மானம் எடுக்கப்பட்ட
    அந்த சந்தர்ப்பதத்தில் அது மிகவும்
    பெறுமதியானது.அதற்கு பின் என்ன
    காரணம் கற்பிக்கப்பட்டாலும் அவைளெல்லாம்
    அர்த்தமற்வையாகும்.

    ReplyDelete
  8. களத்தில் நின்றுபோராடுபவர்களுக்குத்தான் தெரியும் அவர்கள் எவ்வளவு சவால்களை எதிர்நொக்குகிறார்கலென்று; சும்மா எடுத்ததுக்கெல்லாம் குறைகூறி கட்டுரை எழுதுபவர்களுக்குத் என்னதான் தெரியும்?

    ReplyDelete

Powered by Blogger.