Header Ads



என்னை ஒர் சிறந்த முஸ்லிம், தலைவராக்கியது ஆனந்தாக் கல்லூரிதான் - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

- அஸ்ரப் ஏ சமத் -

நான் ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்கும்  போது  அதிபராக கடமையற்றிய ராஜபக்ச அவர்கள்  மற்றும் ஆசிரியர்கள் பௌத்த, தமிழ,; முஸ்லீம் என்ற வேறுபாடுகளின்றி  என்னை ஒர் சிறந்த முஸ்லிம் தலைவராக்கினார்கள். இந்த ஆனந்தாக் கல்லூரியின் பூமியின் விடுதியில் தங்கியிருந்து எனக்கு பேச்சுப்போட்டி;க்கு பயிற்சியளிதத ஆசிரியர்கள் மற்றும் சிங்களமொழி ஆங்கிலமொழி மேலதிக் வகுப்புக்களை தந்த ஆசிரியர்களை எனக்கு ஒருபோதும் மறக்கமுடியவில்லை.  எனக்கு எவ்வித கட்டணமும் அறவிடாமல் மேலதிகமாக மொழிகளைக் கற்றுத் தந்தார்கள். என முன்னாள் அமைச்சரும் இலங்கை ஊடக நிறுவனத்தின் தலைவருமான சட்டத்தரணி இம்தியாஸ் பாக்கீர் மாக்ககார் உரையாற்றினார்.

ஆனாந்தாக் கல்லூரியில் நேற்று முன்தினம் 19ஆம் திகதி நடைபெற்ற ஆனந்தியன் கழகங்களுக்கிடையே திறமைகளை செலுத்திய ஆசிரியர்கள் மாணவர்களுக்கு  பரிசலிப்பு விழாவில் பிரதம அதிதியாக இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

ஆனாந்தாக் கல்லூரியின் அதிபர் எஸ்.எம் கீர்த்தி ரத்தன தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.  
இக் கல்லூரியில் நான் மணவனாக கற்கும் காலத்திலேயே  சிங்கள  பேச்சு, விவதாப்  போட்டிகளில் பங்குபற்றி   தங்கப் பதக்கம் பெற்றேன். என்னுடன் சக மாணவர்களாக சட்டத்தரணி சரத் கோங்காங்கே, காலம் னெ;ற ஓசி அபேசேகர ஆகியோர்களும் முறையே உயர், சிரேஸ்ட கனிஸ்ட பிரிவில்  3 தங்கப் பதங்கங்களையும் பெற்றோம். அப் பதங்கங்களை  அதிபர் கல்லூரியின் விளம்பரப் பலகையில்  வைத்து பல நாட்கள் காட்சிப்படுத்தி எங்களை கௌரவப்படுத்தினார் .  நான் பாலி பாசையினையும்  கற்று தேறிய விதம் மற்றும் கொக்கி விளையாட்டு தலைவனாகவும் இருந்து சம்பியன், டேபிள் டெனிஸ் சம்பியன், விளையாட்டு சிங்கள சஞ்சிகை ஆசிரியராக வருவதற்கும் அன்று என்னை உருவாக்கிய பௌத்த ஆசிரியர்கள் அதிபர் ராஜபக்ச போனN;றார்களை இன்றும் நான் நினைத்துக் கொள்வேன்.   

நான் ஒரு போதும் அவர்களை மறப்பதில்லை. 1972ஆம் ஆண்டு கலாநிதி என்.எம். பேரேரா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பரிசலிப்பு வைபவத்தின்போது நான் மாணவத் தலைவனாக ஆற்றிய உரைக்கு எனக்கு அன்று அதிபர் பாராட்டி எழுதித் தந்த ஆட்டோ கிராப் வசனம் இன்றும் என்னிடம் உள்ளது.   அவர்கள் மனதில் ஒருபோதும் நான் ஒரு முஸ்லிம் என்ற வேறுபாடுகள் இருக்கவில்லை. இக் கல்லூரி ஆயிரக்கணக்கான சிங்களத்  தலைவர்களை உருவாக்கிய  கல்லூரியாகும் அதில்  என்னையும் ஒரு குடும்பம் போல் கட்டிக் காத்து உறுவாக்கிய வரலாறுகளை நான் ஒருபோதும் மறப்பதற்கு இல்லை. என்னை ஒர் அரசியல்வாதியாக இல்லாமல்  ஒரு சிறந்த ஆனந்தியன் என்ற தோரணையில் இந்தக் கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் சிரேஸ்ட மாணவர்கள் இன்றைய நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அழைத்து கௌரவதித்தினையிட்டு    நான் ஆனந்தியன் என்ற வகையில்  நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். ஆனந்தியன்கள் ஒருபோதும் மத, இன குலபேதமின்றி சிறந்த தலைமைகளையே  அன்று உருவாக்கினார்கள். ஆனந்தியன் ஒருபோதும் குனிந்து நிற்கும் மாணவ சமுகம் அல்ல தலை நிமிர்ந்து நிற்கும் நாளைய தலைவர்களாகும்.

இரண்டாம் மகா யுத்தத்தின்போது ஜேர்மாண் சம்பவம் நினைவுக்கு வருகின்றது. இரண்டாம் மகா யுத்தத்தின்போது யப்பான் நினைவுக்கு வருகின்றது. அது மட்டுமல்ல சிங்கப்பூர் நாட்டினை பிரதமராக பாரமெடுத்த லீக்குவாங் யு ஞாபகம் வருகின்றது. அதே போன்றுதான் இலங்கையும் முகம் கொடுத்த பிரச்சினைகளும் எனக்கு ஞாபாகம் வருகின்றது. 

இந்த இளம் சிறார்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. நாம் பல்வேறு பிரிவுகளாகவும் கூட்டங்களாகவும் சென்று பல குழிகளில்   வீழ்ந்து நிற்கின்றோம். நமது நாட்டில் கடந்த 1950 ஆண்டு காலத்தில் தமிழர் பிரச்சினைகள் ஏற்பட்டது. 1960களில் கத்தோலிக்கர் பிரச்சினை ஏற்பட்டது. 1970களில் நாம் வகுப்பு வாத பிரச்சினைகளில் முகம் கொடுத்தோம். 1980 களில் மீண்டும் தமிழர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தோம். 1990களில் கிறிஸ்த்தவர்களின் தேவலாயங்கள் மீது பிரச்சினை ஏற்பட்டது. 2000ஆம் ஆண்டில் இஸ்லாமியர்கள் பிரச்சினைகளுக்கு  முகம் கொடுத்துள்ளோம் இவ்வாறு இனரீதியாக பிரிந்து பிரச்சினைகளை வளர்த்துக் கொண்டால் நமது நாடு எவ்வாறு முன்னேறிச் செல்ல முடியும் ?  இந்த ஆனாந்தாக் கல்லூரி உருவாக்கியவர்கள் இந்த நாட்டினை நேசிப்பவர்களையே உருவாக்கினார்கள். நமது எதிர்காலத்தின் சுபீட்சத்தினை ஏற்படுத்த வேண்டுமாணால் இந்த நாட்டின் வர்க்க இனரீதியாக சிந்திக்காது ஒர் இனத்தினை இன்னுமொறு இனம் குரோதமாக பார்க்காமல் தூர தரிசனத்துடன் நமது புத்தி கூர்மையுடன் சிந்திக்க வேண்டும். 

ஜேர்மனியில்  ஹிட்லர் இருந்து கொண்டு முழு உலக நாடுகளுடனும் கோப்படுத்தி யுத்ததினை ஏற்படுத்தினார்.  அதன் பிறகு ஜேர்மனி உள்விவகாரப் பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டது. அதன் பிறகு உலக நாடுகளுடன் நட்பை ஏற்படுத்தி பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டது. உலக நாடுகளில் அபிவிருத்தி அடைந்த நாடாக ஜேர்மணி விளங்குகின்றது. இறுதியாக அண்மைய இடதுசாரி நாடுகளுடன் பேர்லின் சுவர் பிரச்சினை ஏற்பட்டது. இறுதியில் அவ்விடயத்திலும் சமதானத்தினை ஏற்படுத்திக் கொண்டனர். 

இரண்டாம் மகா யுத்தத்தில் யப்பான் உலக நாடுகளுடன் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டது. இதனால் போர் மூண்டது. தற்பொழுது யப்பான் உள்விவகாரங்களில் ஒரு தீர்வை ஏற்படுத்தியது. அயல் நாடுகளின் நற்புறவையும் ஏற்படுத்திக் கொண்டது.  அத்துடன் யுத்தம் என்ற வசனத்திற்கே தடை விதித்தது. அந் நாட்டின் பாதுகாப்புச் செலவினங்களை குறைந்த அந்த நிதியை அபிவிருத்திக்கு பயன்படுத்தியது. இன்று உலகில் யப்பான் மற்றும் ஜேர்மனும் சிறந்த அபிவிருத்தி கண்ட நாடாக திகழ்கின்றது. 1960ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரின் பிரதமர் லீங்குவாங் யு  அந்த நாட்டினை பாரம் எடுக்கும்போது சீன இனத்தவர்கள் மலாயர்களுக்கும் பிரச்சினைகளும் படுகொலைகளும் இடம் பெற்றன.  அன்று லீங்குவங் யு அன்று அவர் சொல்லியிருந்த வார்த்தைகள் இன்றும் நினைவில் உள்ளது. இலங்கையைப் போன்று சிங்கப்பூரை மாற்றிக் காட்டுவேன் எனக் கூறினார். தற்பொழுது சிங்கப்பூர் எவ்வாறு முன்னேறி உள்ளது. நமது நாடு எங்கே சென்றுள்ளது? நமது நாட்டு இளைஞர்கள் தொழில் தேடி சிங்கப்பூர் செல்கின்றார்கள். 

நமது முதியோர்கள் கொழும்பில் சில பிரதேசங்களில் முடுக்கு வீடுகளில் வாழ்ந்தால் “கொரியா” என்று சொல்வார்கள். கொரியாவில் இவ்வாறுதான் அனறு மக்கள் முடுக்குகளில்; வாழ்ந்தார்க்ள். ஆனால் இன்று கொரியா எந்த நிலைக்கு முன்னேறி உள்ளது. எமது நாட்டு ஆயிரக் கணக்கான இளைஞர்கள் கொரியாவுக்கு தொழில் தேடிச் செல்கின்றார்கள். அதே போன்று தான் சிங்கப்பூர் கூட கூலியாட்கள் தொழில் செய்யும் நாடாக இருந்தது. இலங்கையில் இனக்குரோதங்கள் இருக்கும்போது நாம் ஒரு போதும் நமது நாட்டை முன்னேற்ற முடியாது. சிங்கப்பூர் பிரதமர் அன்று சிங்கப்பூரில் வாழ்ந்த இந்தியர்கள், இஸ்லாமியர்கள் சீன இனத்தவர்களை பிரச்சினையாக எடுக்காமல் இந்தியர்களது வியாபாரத்திற்கு அனுமதி அளித்து இஸ்லாமியர்களது வியாபாரத்திற்கும் அங்கு அனுமதி அளித்து அந்தந்த நாடுகளிடையேயும் நட்புரவையும் ஏற்படுத்தினார். தற்பொழுது உலகில் அதி கூடிய தனி நபர் வருமாணம் பெறும் 10 நாடுகளில் சிங்கப்பூரும் உள்ளது. அண்மைய நாடான மலேசியாவுடனும் நட்புரவை எற்படுத்தியது.  ஆனால் நமது நாடு கடந்த 5 தசாப்தங்காளாக நமது நாட்டுக்குள் நடக்கும் பிரச்சினைகள் தீர்த்துக் கொள்ளாமல் பிரிந்து நிற்கின்றோம்.  ஒரு அழகான சுதந்திரமான சுந்தர நாடாக இலங்கையை மாற்றமுடியாமல் நாம் மீண்டும் மீண்டும் பின்நோக்கியே செல்கின்றோம். தொடர்ந்தும் நாம் இவ்வாறு சென்றால் இந்த நாட்டின் உள்ள எதிர்கால சமுகத்திற்கு எதிர்காலம் ஒருபோதும் வரப்போவதில்லை. 

சிங்களப் பாடகி லதா வல்பொலவின் பாடலில் “நாம் பிரிந்து பிரிந்து சென்றால் பிரிந்தே செல்வோம், ஒன்றுபட்டால் நமது நாடு ஒளிர்விட்டு பிரகாசிக்கும”; எனப் பாடியுள்ளார். ஆகவே நாம் முன்னேற சிந்தியுங்கள் நமது எதிர்கால சந்ததியினருக்கு இந்த நாட்டினை பாரம் கொடுக்கும்போது மீள இனக்குரோதம், யுத்த நாடாக பாரம் கொடுப்பதா? இந்த நாட்டினை மலேசியா , சிஙக்பூர், யப்பான், ஜேர்மன் போன்ற நாடுகள் வரிசையில் நமது நாட்டினையும் கொண்டுவருவோம்.  

உயிர்த்த ஞயிறு தினத்தில் நடந்த சம்பவம் சம்பந்தமாக இஸ்லாமிய பெற்றோல்வள 56 நாடுகள் அமைப்பு ஒன்று உள்ளன. அதில் இலங்கையில் உள்ள 16 நாடுகளின் தூதுவர்கள் இச் சம்பவத்தில் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதற்கு மல்கம் கார்டினர் ரண்ஜித் ;ஆண்டகையை சந்திப்பதற்கு என்னைப் பணித்தார்கள். அதனை ஏற்படுத்தி அவர்களை  அழைத்துச் சென்றேன். அப்போது மல்கம் கார்டினர் ரண்ஜித் அந்தத் தூதுவர்களிடம் இந்தத் தாக்குதலில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் சம்பந்தப்பட்டுள்ளார்க்ள. ஆனால் நான் இதற்குப் பின்னால் உள்ள தூர தரிசனத்தினையே நான் பார்ப்பதாகச் சொனார். இந்த தாக்குதலை ஏற்படுத்தி இன்குரோதங்களை ஏற்படுத்தி ஓரு நாட்டினை இன்னொறு நாட்டுக்கு கீழ் அடிமைப்படுத்தி அவர்களது ஆயுதங்களை விற்பனை செய்வதற்கும்  அவர்களது நிகழ்ச்சி நிரலையே நாம் அவதானிப்பதாகச் கூறினார். இவ்விடயத்தில் சில ஊடகங்களும்  இந்த நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோகின்றதாகவும் தெரிவித்தார். 

முஸ்லி;ம் தலைவர்களும் ஒர் சிறந்த தலைவராக இன்றும் மதிக்கும்  தலைவர்தான் கலாநிதி ரீ.பி ஜாயா. மல்லசேகர ஆசிரியர் எழுதிய நூலில் அவர் கலாநிதி ரீ.பி ஜாயா பற்றி தெளிவாக எழுதியுள்ளார். ஆனாந்;தாக் கல்லூரியில் கற்பித்த ஆசிரியருள் ஒர் சிறந்த ஆசிரியர் தான் காலாநிதி ரீ.பி ஜாயா. அவர் வரலாறு, மற்றும் லத்தீன் பாசையும் கற்பித்துள்ளார். அவர் கல்வி போதிக்கும் போது ஆனாந்தாக் கல்லூரி  மாணவர்கள்  அவர்  வகுப்பிற்காக காத்து இருப்பார்கள் ஒருபோதும் அவரது வகுப்புக்கு தவறவிடாமல் சமுகமளித்திருப்பார்கள். வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் மிசனரிப் பாடாசலைகள் ஏற்படுத்தியபோது சகல மாணவர்களுக்கும் அனுமதி கிடைக்கவில்லை அத்துடன் மேற்கத்தைய கலாச்சாரங்கள் மேலோங்கின் ஆகவே தான் சிங்கள கல்விமான்கள் ஆனந்தா, தர்மாராஜ,மகிந்தய, ராகுல போன்ற பௌத்த பாடசாலைகள் ஆரம்பித்தனர், அதேபோன்று தான் கலாநிதி டி.பி. ஜாயாவும் ஆனாந்த அதிபரிடம் முஸ்லிம் பாடசாலைகளை  கட்டி எழுப்புவதற்கு அனுமதி கேட்டிருந்தார். அவர்  கொழும்பு சாகிராவை கட்டி எழுப்புவதற்காக ஆனந்தாக் கல்லூரியில் இருந்து அப்போதை அதிபர் குலரத்தின திறமையான சிங்கள 2 ஆசிரியர்களை அவருடன் அனுப்பி வைத்தார். மாத்தளை சாகிரா, புத்தளம் சாகிரா, கம்பளை சாகிராக்கள் உருவாகின. ஆதே போன்றுதான் ஹிந்து வித்;தியாலயம் யாழ் ஹிந்து பேர்னற கல்லூரிகள் அன்று ஆரம்பிக்க்ப்பட்டன.   

புpரித்தாணியர் ஆட்சிக் காலத்தில் டொமினியன்  ராஜசபையில் கொண்டு வந்த சமயத்தில் வெள்ளையர்களிம் சுதந்திரம் வேண்டி நின்றபோது. வெள்ளையர்கள் சொன்னது. உங்களுக்கு சுதந்திரம் தரமுடியாது. சுதந்திரம் தந்தால் நீங்கள் பிரிந்து நின்று   சன்டை பிடித்து மரன யுத்தம்தான் நடாத்தி நாட்டை அழித்துவிடுவீர்கள் ஆகவே சுதந்திரம் தர உங்களுக்கு வாய்ப்பு இல்லை. எனக் கூறினார்கள்.   முதலில் நீங்கள் சமதானமாகுங்கள், மேலால் ஒன்றும் கீழால் ஒன்றுமாக பிரச்சினைகளை தோற்றி வைத்தார்கள். 50க்;கு 50என்றும் திணித்தார்கள். ஆனால் கலாநிதி ரீ.பி ஜாயா அவர்கள் நாடு பூராகச் சென்று அங்குள்ள முஸ்லிம் சங்கங்கள் நிறுவனங்களையும் சந்தித்துவிட்டு ராஜசபையில் இருந்த ஏனைய 2 முஸ்லிம் தலைவர்களுடன் பேசிவிட்டு அவர் சுதந்திரம் வேண்டி 1946 செப்டம்பரில் ஆற்றிய உரையை நான் ஹன்சாட்டிலிருந்து வாசித்து மனப்பாடமாகிவிட்டது. 

இந்த நாட்டில் வாழும் மூத்த தலைவர்களுடன் எங்களது சிறுபான்மைப் பிரச்சினைகளை  பேசி எங்களது பிரச்சினைகளை தீர்த்து  கொள்கின்றோம். எங்களுக்குள் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை அவற்றை நாங்கள் அனைவரும் ஒன்றினைந்து சுதந்திரத்தனைப் பெற்றுவிட்டு நாங்கள் எங்களது மூத்த தலைவர்களுடன்  பேசித் தீர்த்துக் கொள்கின்றோம். முதலில் எங்களுக்கு சுதந்திரத்தினை தாருங்கள் என அவர் பேசினார். இவ்வாறான தூரதிஸ்டமான தலைவர்கள் அன்று  இருந்தார்கள்.

யுத்தத்திற்கு முன் எமது நாடு பல்கழைக்கழகம், சிவில் சேவைகள், பொலிஸ்சேவை உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தோம். 1960களில் ;எமது நாடு எந்தவொரு நாட்டுடன் கடன் பெறாத நாடாகவும் தமது உற்பத்தியை உருவாக்கி தன்னிரைவு பெற்ற நாடாக விளங்கியது. அதன் பின்னர் நாம் நாமாகவே தமக்குள் இன குரோதங்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்திக் கொண்டோம்.தற்பொழுது யுத்தம் ஓய்ந்து விட்டது. 

நாம் காலத்திற்கு காலம் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டு சென்றால் நாம் சுந்தர அழகானதொரு நாடாக இலங்கையை முன்னேற்ற முடியாது. எதிர்காலத்தில் நமது எதிர்கால சமுகத்திற்காக நாம் நல்லதொரு நாட்டை கையழிப்பதற்கு ஒன்றுபடுவோமாக என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உரையாற்றினார். 

2 comments:

  1. An exalant speech by a truthful son of mother lanka.

    ReplyDelete
  2. Amazing and really proud to have such an excellent leader Imthiyaz , sir and I couldn't control by your worthy words..

    ReplyDelete

Powered by Blogger.