Header Ads



கருப்பு ஜூலையின் வடுக்களும், தமிழர்களை காப்பாற்றிய முஸ்லிம்களும்

- சட்டத்தரணி ஃபஸ்லின் வாஹித் -


1996 ஆம் ஆண்டு ஜூலை 24. சரியாக இற்றைக்கு 23 வருடங்களுக்கு முன்னர் எனது தந்தை எல்லோராலும் வாஹிட் பிரின்சிபல் என்று அழைக்கப்படும், கண்டி மாவட்டத்தில் பல பாடசாலைகளிலும் அதிபராகவும், ஆசிரியராகவும் பணியாற்றி கடைசியாக அழுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற அப்துல் வாஹிட் அவர்கள் கொழும்பு சென்று இருந்தார். எனது தம்பி தற்போது உதவி சுங்க  பரிசோதகராக கடமையாற்றும் அசாம் ரோயல் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோன்றி இருந்தார். அவரை  உயர் தரத்திற்காக வேறு பாடசாலைக்கு சேர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தில் எனது தந்தை பாடசாலை விடுகை பத்திரங்களை எடுத்து வரும் நோக்கிலும் அன்று கொழும்பு சென்று இருந்தார்.

 புலிகளின் பயங்கரவாதம் உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது. 1983 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்குண்டு 13 இராணுவச் சிப்பாய்கள் மரணம் எய்தினர். அதன் பிரதிபலிப்பாக நாடெங்கிலும் தமிழ் மக்களுக்கு எதிராக J R ஜெயவர்தன அவர்களின் அரசின் காலத்தில் வன்முறைகள் வெடித்தன.தீ வைப்புக்களும் தாக்குதல்களும் சிங்கள இனவாதிகளால் அரங்கேற்றப்பட்டன. ஏறத்தாழ 300-க்கும் 4000 ற்கும் இடைப்பட்ட தமிழ் சமூகத்தினர் அந்த இனக்கலவரத்தில் கொல்லப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு வார காலமாக போலீசுக்கும் முப்படையினருக்கும்  விடுமுறை கொடுத்தது போல் வன்முறையாளர்கள் சுதந்திரமாக தாக்குதல்களை மேற்கொண்டனர்.அன்றைய JR ஜெயவர்த்தன தலைமையிலான அரசும் கண்டும் காணாதது போல் இருந்தது .இந்த வன்முறை காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் சகோதரர்களின் வியாபார ஸ்தலங்களும் வீடுகளும் முற்றாக நாசமாக்கப்பட்டன.அன்றைய இனக்கலவரத்தின் போது பல்லாயிரம் தமிழ் சகோதரர்களுக்கு முஸ்லிம் மக்கள் தஞ்சம் கொடுத்து காப்பாற்றினர் என்பது வேறு விடயம்..இந்த வன்முறையை நினைவு படுத்தும் விதமாக வன்முறை நிகழ்ந்த மாதத்தை கருப்பு ஜூலை என அழைத்தனர். வருடந்தோறும் கறுப்பு ஜுலையை ஞாபகப்படுத்தி புலிப் பயங்கரவாதிகள் ஜூலை மாதத்தில் நாட்டில் ஏதாவது ஒரு பிரதேசத்தில் சாதாரண பொதுமக்களுக்கு சேதங்களை விளைவிக்கக் கூடியதாக ஒரு தாக்குதலை நடத்தி வந்தனர்.

எனது தம்பியை பார்க்க 24ஆம் தேதி எனது தந்தை பாடசாலைக்கு வருவதாக கூறிச் சென்றாலும் அன்று பாடசாலைக்கு சென்று இருக்கவில்லை. அன்றுதான் புலி பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான மற்றொரு தாக்குதல் நடைபெற்ற நாள் .

கொழும்பிலிருந்து தெற்கு நோக்கி சென்ற புகையிரதத்தில் பாரிய குண்டு வெடிப்புக்கள். பம்பலப்பிட்டியில் ரயிலில் குண்டு இருந்ததை பிரயாணி ஒருவர் கண்டெடுத்த பின்னர் அதனை பாதுகாப்பாக அகற்றிய பின்னர் ரயில் மீண்டும் தெஹிவளை  நோக்கி நகர்ந்து சென்ற வேலையில் தெஹிவளை  ரயில் நிலையத்தை அண்மித்ததும் பாரிய குண்டு வெடிப்புகள்  நடைபெற்றன.ரயிலில் பிரயாணம் செய்த பிரயாணிகள் அல்லோலகல்லோலப்பட்டுக் அங்குமிங்கும் ஓட்டம் எடுத்தனர்.இந்த சம்பவத்தில் 64  பேர் மரணமடைந்தது மட்டுமல்லாமல் 400க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். புலிகளால் புதிய உத்தி ஒன்றாக ரயிலில் ஒரே வேளையில் பல குண்டுகள் பிரயாண பைகளில் வைத்து வெடிக்கப்பட்டிருந்தது. எனது தந்தை வழமையாக கொழும்புக்கு சென்றால் அல்லது வேறு எங்கும் சென்றால் தான் போய் சேர்ந்ததாக வீட்டுக்கு தகவல் அனுப்புவார்.அன்று எந்தவிதமான தகவலும் அவர் தரவில்லை என்று உம்மா என்னிடமும்  எனது சகோதரர்களுடனும் கூறினார். என்றாலும் குண்டு வெடிப்பு காரணமாக தகவல் தர முடியாமல் போயிருக்கும் என்று ஆறுதல்படுத்தி அடுத்த நாள் பார்ப்போம் என்று இருந்தோம்.மாலை ரூபவாஹினி செய்திகளில் குண்டுவெடிப்பு சம்பந்தமாக பல்வேறு செய்திகளும் அகோரக் காட்சிகளும் காட்டப்பட்டு கொண்டிருக்கின்றன. நாங்களும் தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்து செய்திகளை பார்த்த வண்ணம் இருந்தோம். ஆனால் உம்மாவின் மனதில் மட்டும் ஏதோ ஒரு இனம்புரியாத கவலை அதை வெளியிட முடியாமல் வாப்பா இன்னும் எந்த விதமான தகவலும் தரவில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார். நானும் எனது சகோதரர்களும் எந்த பிரச்சினையும்  இருக்காது. அடுத்த நாள் வரை காத்திருப்போம் என்று மீண்டும் ஆறுதல் கூறினோம். அடுத்த நாள் விடிகின்றது. தந்தையிடமிருந்து ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்று காத்திருந்தோம்.பல இடங்களிலும் விசாரித்து பார்த்தாலும் தந்தைபற்றிய எந்த விதமான தகவல்களையும் பெற முடியவில்லை.மாலையாகும் போது  எங்கள் ஒவ்வொரு வரிடமும் இனம்புரியாத கவலை ஒன்று கூடி கொள்ளத் தொடங்கியது. அடுத்த நாள் நாங்கள் கொழும்புக்குச் சென்று தேடிப் பார்ப்போம் என்று முடிவு எடுத்து எனது சகோதரர் ஒருவர் நீர்கொழும்பில் இருந்தார். அவரையும் வரச் சொல்லி எல்லோரும் கொழும்புக்கு சென்றோம்.

எனது தந்தை கொழும்பு சென்றால் வழமையாக அவரின் உற்ற நண்பர் ஒருவரின் அறையில் தங்குவார்.எனவே முதலில்  அங்கு சென்று தேடிப் பார்ப்போம் என்று நண்பனை தேடிச் சென்றால் அங்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.  முன்னைய நாள் இரயிலில் எனது தந்தையும், நண்பரும் ஒன்றாக  பிரயாணம்  செய்ததாகவும் தந்தையின் நண்பர் சிறிய காயம் ஒன்று உடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்தது. தந்தையைப் பற்றி நண்பரிடம் விசாரித்தபோது அவர் கூறியிருந்தார் இரண்டு பேருமே ரயிலில் பிரயாணம் செய்ததாகவும் எனது தந்தை குண்டுவெடிப்பின்  பின்னர்  நண்பருடன் ரயிலில் இருந்து கீழே இறங்கியதும் தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறி சென்று விட்டதாகவும் அவர் கூறினார். கிடைத்தது மனதுக்கு ஆறுதல். ஆனால் எனது தந்தை எங்கு இருக்கின்றார் என்பது அவருக்கும் தெரியாது.நாங்களும் விசாரித்து பார்த்ததில்  அதுவரையில் எங்களுக்கும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. எனவே வைத்தியசாலையில் ஏதோ ஒரு இடத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருப்பார் என்று முடிவெடுத்து காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளில் ஒவ்வொன்றாக தேடிப் பார்த்தோம்.எங்கும் அவரை காணக் கிடைக்கவில்லை. இறுதியாக என்ன செய்வது என்று புரியாமல் வைத்தியசாலைகளில்  வைக்கப்பட்டுள்ள குண்டு வெடிப்பின் காரணமாக இறந்த உடல்களை ஒரு முறை எதற்கும் பார்ப்போம் என்று முடிவெடுத்து முதலில் களுபோவில வைத்தியசாலை சாலைக்குச் சென்று தேடினால் அங்கிருந்த உடல்களில்  அடையாளம் காண முடியவில்லை.இறந்த பலரின் உடல்களையும் உறவினர்கள் அடையாளங்கண்டு எடுத்துச் சென்றிருந்தனர்.நாங்கள் அடுத்து கொழும்பு பெரியாஸ்பத்திரியில் போய் உடல்களை பரிசீலிப்பதாக முடிவெடுத்தோம் அங்கு சென்று தேடும் போது தான் எனது மூத்த சகோதர் ஓலமிட்டு  அழுதார்.அந்த அழுகையின் போது எங்களுக்கு புரிந்தது தந்தைக்கு என்ன நடந்தது என்பது.எனது தந்தையின் உடலில் எந்தவிதமான வெளி காயங்களையும் எங்களால் காண முடியவில்லை உடலின் உள்ளே அதிர்ச்சியினால் ஏற்பட்ட உட்காயங்கள் காரணமாகவும அவர் வபாத்தானதாக  இதில் இந்த சட்ட வைத்திய பரிசோதனையில்  சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டு இருந்தார். இதற்கு மேலும் அந்த சம்பவம் பற்றி என்னால் எழுத முடியவில்லை. கண்ணீர் துளிகள் தான் விழுகின்றது.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

அன்று 13 உயிர்களுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட ஜூலை கலவரம் நாடெங்கிலும் பல நூறு உயிர்களையும் பலி எடுத்து கோடிக்கணக்கான சொத்துக்களுக்கும் சேதத்தை விளைவித்தது. அதன் பின்னர் இந்நாட்டில் தமிழ் போராட்டக் குழுக்கள் அரசுக்கு எதிராக மேலும் உக்கிரமாக போராடத் தொடங்கி வலுவான ஒரு குழுவாக புலிப்பயங்கரவாதிகள் வேரூன்றினர்

சர்வதேச ரீதியில் மிகவும் பயங்கரமான கொடூரமான ஒரு பயங்கரவாதக் குழுவாகச் புலிகள் வர்ணிக்கப்பட்டனர். காலத்துக்குக் காலம் வந்த அரசியல் தலைவர்கள்புலிகளுக்கு எதிராற தமது போராட்டத்தை சுயநலத்தின் காரணமாகவும்  அரசியல் காரணமாகவும்  சரியான தலைமைத்துவ வழிநடாத்தல்  இன்மை காரணமாகவும் சரியாக முன்னெடுத்துச் செல்லவில்லை.இதனால் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான  உயிர்களை இழக்க வேண்டி வந்தது.

அன்று எவராலும் வெல்ல முடியாது என்று கூறிய புலிப் பயங்கரவாதத்தை தனது சாணக்கியத்தனத்தாலும்  சிறந்த தலைமைத்துவத்தாலும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு வெற்றி கொண்டது. சர்வதேசத்தின் எந்த விதமான அழுத்தங்களுக்கும் தலைகுனியாது புலிகளை வெற்றி கொள்வதே ஒரே நோக்கம் என்ற பாணியில் மஹிந்த போராடியதனால் புலிகளை அழிக்க முடிந்தது. மஹிந்த யுத்தம் செய்த விதம் கேள்விக்குறியாக இருந்தாலும் புலிகளை அடக்கியதை பாராட்டாமல் இருக்க முடியாது.

ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக  முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கம மாவனல்ல கலகெதர போன்ற இடங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட  தாக்குதலின் காரணமாக அடுத்து வந்த ஜனாதிபதித் தேர்தலிலே சிறுபான்மை மக்கள் எல்லோரும் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு நல்கியதன் காரணமாக மகிந்த யாரும் எதிர்பாராத விதமாக தோல்வி கண்டார்.

அந்தத் தேர்தலில் அன்று மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு நானும் வாக்களித்தேன் .அன்று அது சரியாக பட்டாலும் இன்று அது பிழை என்பதை நான் மட்டுமல்ல முழு நாடுமே நன்கு புரிந்துள்ளது. மஹிந்தவின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை விட பல மடங்கு தாக்குதல் இந்த நல்லாட்சியின் கீழ் நடைபெற்றுள்ளன. நல்லாட்சியை கொண்டுவர முஸ்லிம் மக்களில் 95 வீதமான ஆதரவு கிடைத்தது. ஆனால் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு கண்டும் காணாதது போல் இந்த அரசு நடக்கின்றது 

மகிந்த அன்று புலிகளை அழித்து இருக்காவிட்டால் இன்னும் நிம்மதியற்ற வாழ்வு ஒன்றை நாங்கள் வாழ்ந்து கொண்டு இருந்திருப்போம். அல்லாஹ் மிகப் பெரியவன் எனது தந்தையைப் போன்று பல நூறு தந்தைகளை இந்நாடு புலிகளின் அந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலால் இழந்துள்ளது எத்தனையோ சின்னஞ்சிறுசுகள் அனாதைகளாக்கப்பட்டு இருக்கின்றனர்.

எனவே எனது தந்தையை கொன்ற அந்த புலிகளை தோற்கடித்த மகிந்தவிற்கு நான் தொடர்ந்தும் ஆதரிப்பதில் கடமைப்பட்டுள்ளேன். நான் மட்டுமல்ல இந்நாடே கடமைப்பட்டு உள்ளது.அதேபோல் இந்நாட்டு மக்களும் மீண்டும் அந்த பயங்கரமான காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.நான் இட்ட ஒரு பதிவிற்காக எனது உறவினர் சகோதரன் 2015ஆம் ஆண்டில் நீங்கள் மைத்திரிக்கு தானே வாக்களித்தீர்கள் என்று கிண்டலடித்துள்ளார். அன்று மஹிந்த புலிப் பயங்கரவாதிகளை அழித்தொழித்த அந்த ஒரே நன்றிக்கடனாக வாவது  நான் தொடர்ந்தும் மகிந்தவின் ஆதரவாளனாகத்தான் இருக்க வேண்டும். நான் மட்டுமல்ல இந்நாட்டில் என்னைப்போல் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் பேர் உள்ளனர் இன்று நிம்மதியாக சந்தோசமாக எந்த விதமான பயமும் இல்லாமல் சுதந்திரமாக எமக்கு மீண்டும் வாழ கிடைக்க வழி சமைத்தவர் மஹிந்த என்றால் அது மிகையாகாது.

1989 ம் ஆண்டளவில் சஜித் பிரேமதாசா வின் தந்தை யார் ரனசிங்ஹ பிரேமதாசா இந்தியப் அமைதி காக்கும் படையினருக்கு எதிராக போராட புலிகளுக்கு லொறிக்கணக்கில ஆயுதங்களை வழங்கினார்.அதே ஆயுதங்களைக் கொண்டு புலிகளால் கிழக்கில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பொலிசார்கள் ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்டனர்.அதைப் போன்ற தேசத்துரோகத்தை மகிந்த ஒரு போதும் செய்யவில்லை.


7 comments:

  1. மஹிந்தவுக்கு உதாரணம்: ஒருத்தியை கற்பழிப்பு இருந்து காப்பாற்றிக் கொண்டு வந்த பிறகு, அவளை மீண்டும் காப்பாற்றியவன் கற்பழிப்பது போல் உள்ளது.

    நாட்டின் ஜனாதிபதியாக யார் வந்தாலும் அவர் கடமையை செய்ய வேண்டும். ஜனாதிபதியின் முக்கிய பண்பு அவர் சமூகங்களுக்கிடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் பொருளாதார மேம்பாட்டு ஏற்படுத்த வேண்டும். ஊழல்வாதி ஒரு போர் வீரனாக இருக்கலாம். ஆனால் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ அல்லது ஒரு அரசியல்வாதியாக இருக்க முடியாது.
    இன்று இலங்கை நாட்டை பொறுத்த வரையில் ஊழல்வாதிகளும் சுயநலவாதிகளும் அரசியல் செய்வதனால் நாடு குட்டிச்சுவராகி போயுள்ளது.

    மற்ற நாடுகளில் அரசியல்வாதிகளை மக்கள் தெரிவு செய்வது நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்வதற்காக.

    ஆனால் இலங்கையில் அதற்கு மாற்றமாக பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வது ஊழல், களவு செய்வதற்காக என்பது மறுக்க முடியாத உண்மை.

    எனவே அன்பார்ந்த கட்டுரையாளரே ஒருவருக்கும் குடைபிடிக்க போகவேண்டாம்.

    ReplyDelete
  2. இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது....

    ReplyDelete
  3. We deeply condole with the dastardly act of tigers. We feel ur grief, but bringing back mahinda is not the solution. He is the co father with Gota of all the problems the muslims are under going. You being a lawyer should understand better. Today Poluce chief says ISIS connection is not established for the Easter Sunday calamity. Dayasiri has raised a reasonable doubt before the select committee. explore it. You will understand all

    ReplyDelete
  4. ITS THE TRUTH, BUT ALMOST 96%
    OF OUR MUSLIM VOTES GOES TO ELEPHANT.
    Y Y Y Y ?

    ReplyDelete
  5. தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த ஓர் அழகான பெண்ணை காப்பாற்றி கரை செத்தவர் அந்தப் பெண்ணை கட்பளித்து நாசம் செய்ய முடியுமா?

    ReplyDelete
  6. அப்போது Muslim மக்கள் தமிழரை காப்பாத்தாமல் விட்டிருந்தால் இன்னும் பல்லாயிரம் தமிழ் மக்கள் இறக்க நேரிட்டிருக்கும்.ஆனால் இவை எல்லாம் தமிழர்கள் இப்போது மறந்து விட்டார்கள்.அதே வேளை புலிகள் பொது மக்களை இலக்கு வைத்து எத்தனயோ ஆயிரம் தாக்குதல்களை நடத்தியது எல்லாம் சில இனவாதிகலுக்கு மறந்துவிட்டது.அதே நேரம் மஹிந்த உண்மையாக தில்லான நபர் புலிப் பயங்கரவாதத்தையும் அந்த கொடிய பிரபாகனையும் நசுக்கியவர்.ஆனால் மஹிந்தவின் பின்னால் இருந்த சிலரால்தான் அழுத்கம பிரச்சினை உருவாக்கப்பட்டது.ஆனால் இந்த ரனில்,மைத்திரி ஆட்சியில் பல கலவரங்கள்.muslim கள் மஹிந்தவை தோற்கடித்து நிம்மதியை நாமாகவே நாசமாக்கினோம்.மஹிந்தவை தோல்வி அடையச் செய்து எமது நிம்மதியை தொலைத்து நிம்மதி இல்லாமல் இருந்த அடுத்த இனத்தை நிம்மதியாக வாழ வைத்தோம்.

    ReplyDelete
  7. The article is with unsuitable end?????

    ReplyDelete

Powered by Blogger.