Header Ads



சிங்களவரை முஸ்லிம் பெண் திருமணம் செய்தால், சுட்டுக்கொலை செய்கிறார்கள் - ரதன தேரர்

சிங்கள நபர் ஒருவரை முஸ்லிம் பெண் திருமணம் செய்தால் சுட்டுக் கொலை செய்கின்றனர், இது தான் உண்மையான நிலை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அமைத்தனர். தலீபான் உட்பட ஜிஹாத் என்ற அவர்களது புனித போரில் ஈடுபட்டுள்ள பல்வேறு தீவிரவாத அமைப்புக்கள் இந்த உலகில் உருவாவது இஸ்லாத்தினதும், அல்லாஹ்வினதும் பெயரிலேயே ஆகும் என்பதற்கு முடியுமானால் பதிலளிக்கவும் என கோரியுள்ளார்.

அத்துடன், ஆப்கானிஸ்தானை போன்று இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம் பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை தடை செய்யப்பட்டுள்ளது. யார் அதனை தடை செய்தது?

ஆப்கானிஸ்தானில் பாடசாலைகளுக்கு பெண்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்று சிங்கள நபர் ஒருவரை முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்தால் சுட்டுக் கொலை செய்கின்றனர்.

அத்துடன், இதுதான் உண்மையான நிலை. சுட்டுக் கொலை செய்யாவிட்டாலும் அந்த பெண்ணை கடுமையாக தண்டித்து வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பாடசாலைகளிலும் இன்று பெண்களுக்கு கற்றலுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இசைப் பயிற்சி, நடனக்கலை மற்றும் விளையாட்டுக்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் அடிப்படை மதவாத செயற்பாடுகளாகவே அமைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

10 comments:

  1. Ivanin mooolaya konjam check pannanumungo...!

    ReplyDelete
  2. இவன் என்ன ஈனப்பிரவியோ... முதலில் சுட்டுகொள்றன்ற பிறகு அவ்னே சுட்டுக்கொள்ள இல்லன்றான்..

    ReplyDelete
  3. அட அடிப்படை மனித உரிமை - ஒரு மனிதனுக்கு இயற்கையாக சர்வசாதாரணமாக உள்ள பாலியல்த் தேவையை மதக்கடமை என்ற அடிப்படையில் அனுபவிப்பதற்குத் தடைசெய்துள்ள ஏனைய மதங்களில் ஒன்றில் இருந்துகொன்டு அதனைக் கடைபிடிப்பதாகக் காட்டிக்கொன்டிருக்கிற ஒருவர் இஸ்லாமியக் கட்டுப்பாடுகளை விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது.

    சன்னியாசி வேடத்தில் வாழ்ந்துகொன்டு திருமண பந்தத்தை தமக்குத்தாமே மதம் என்ற போர்வையில் தடைசெய்துகொன்டுள்ள இவர்கள் வந்துவிட்டார்கள் பெண்களுக்கான இஸ்லாமியக் கட்டுப்பாடுகளை விமர்செய்ய. வெடகமில்லையா இவர்களுக்கு ?

    இந்த சன்னியாசிக் கோலம்தான் மனித குலத்துக்கு சரியானது என்றால் அதனை முழு மனித சமூகத்துக்கும் செயல்படுத்திக காட்டட்டுமே பார்க்கலாம்.

    தமக்குத்தாமே இனவிருத்தியை தடைசெய்துகொன்டுள்ள இவர்கள் அந்தப்பழியை நம்மீது போடுகின்றவர்கள் அல்லவா இவர்கள் - இவர்கள் இப்படித்தான் கீழ்த்தரமாகப் பேசுவார்கள். நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள் இவர்களின் கூப்பாடுகபை் பார்த்து.

    ReplyDelete
  4. Paavam ivar.. vara mental aahip porar..

    ReplyDelete
  5. எல்லா பதிவுகளும் பதில்களும் தேசிய அன்நிய உளவுத்துறைகளாலும் இனவாதிகளாலும் மொழிபெயர்க்கப்படிற வாய்புள்ளது. எங்கள் பிள்ளைகளும் இவற்றை வாசிப்பார்கள். மத குருக்களைத் திட்டுதல் அடுத்த மதங்களை சகோதர இனப் பெண்களின் ஆடைகளை இகழ்தல் போன்ற பதிவுகள் தனிமைப்படுதல் மற்றும் தனிமைபடுத்தபடுதலுக்கே வழிவகுக்கும். எங்கள் எங்கள் இனங்களுக்கு நல்ல பெயரையும் எங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு சகவாழ்வுக் கருத்துக்களையுமே நாம் விட்டுச் செல்ல வேண்டும்.

    ReplyDelete
  6. This person’s remarks on Muslim community always become false and beyond truth. Government must take action or warn him to keep his mouth shut. The law of the land did not give any concession for someone’s status or anything else. People and the students viewing these views have chances to spoil their socio-integrity. Even international community living inside and outside having bad impressions on the government and the religion of the such narrator. It’s happening now.

    ReplyDelete
  7. If it is true, can express the number person punished through, the date and places???

    ReplyDelete
  8. If it is true, can he express the number person punished through, the date and places???

    ReplyDelete
  9. இவர் சொல்லுவது உண்மை தானே

    ReplyDelete

Powered by Blogger.