Header Ads



இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தம் தொடர்பில் பேசுப­வர்கள், முதலில் தமது கைகளை சுத்­தப்­ப­டுத்­த வேண்டும்

ஞான­சா­ர­தேரர் சிங்­கள பெளத்த இன­வாதி. அப்­ப­டி­யா­னவர் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம், மத­வாதம் தொடர்பில் பேசு­வ­தற்கு முன்னர் அவரின் கைகளை சுத்­தப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டு­மென ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

சோச­லிச மக்கள் முன்­னணி கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம், மத­வாதத்தை கட்­டுப்­ப­டுத்த வேண்­டு­மென்­பது அனை­வ­ரதும் கோரிக்­கை­யாகும். என்­றாலும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தம், இன­வா­தம் தொடர்பில் பகி­ரங்­க­மாகப் பேச முன்­வ­ரு­ப­வர்கள் ஆரம்­ப­மாக அவர்­களின் கைகளை சுத்­தப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். ஞான­சார தேரர் ஒரு சிங்­கள பெளத்த இன­வாதி என்­பது யாரும் அறிந்­த­வி­டயம்.

அத்­துடன் இன­வா­திகள் என்­போர் தனது இனத்­தை­விட மற்ற இனம் கீழா­னது என எண்­ணு­ப­வர்­க­ளாவர். அல்­லது ஓர் இனத்தின் உரிமை மற்ற இனத்தின் உரி­மை­யை­விட உயர்ந்த நிலையில் இருக்­க­வேண்டும் என நினைப்­ப­வர்­க­ளாவர். அதனால் இஸ்­லா­மிய இன­வா­தத்­துக்கு மாத்­தி­ர­மல்ல சிங்­கள, தமிழ் இன­வா­தத்­துக்கு எதி­ராக நாங்கள் செயற்­ப­ட­வேண்டும். அவ்­வாறு செயற்­ப­டு­ப­வர்கள் சகல இனங்­களின் உரி­மைகள் தொடர்பில் நடு­நி­லை­யாக செயற்­ப­டக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்­க­வேண்டும்.

ஆனால், தற்­போது ஞான­சார தேரர் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம், இன­வாதம் தொடர்பில் கதைத்து வரு­கின்றார். அடிப்­ப­டை­வாதம், இன­வாதம் எந்த மதத்­தி­லி­ருந்­தாலும் அதனை கட்­டுப்­ப­டுத்­த­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பாடு. அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கைகள் எல்லை மீறும்­போ­துதான் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்குத் தள்­ளப்­ப­டு­கின்­றது.

ஆனால், ஞான­சார தேரரின் கடந்­த­கால நட­வ­டிக்­கைகள் சிங்­கள அடிப்­ப­டை­வாதம் அல்­லது இன­வா­தத்தை தூண்டும் வகையிலே இருந்துவந்துள்ளன. அப்படியானவருக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக செயற்படத் தகுதி இருக்கின்றதா என்பதே எமது கேள்வியாகும். அதனால் ஞானசார தேரர் ஆரம்பமாக தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

எம்.ஆர்.எம்.வஸீம்

3 comments:

  1. எது எப்படியிருந்தபோதிலும் இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம் ஆகியவற்றிற்கும்; பொதுவான மனித வாழ்வு நெறிகளுக்குமிடையில் எந்தத் தொடர்பும் இல்லை. அவரவரது மதசம்பந்தமான விடயங்களை அவரவர்கள் தேவையானபோது அரசின் ஒத்துழைப்புடன் கவனித்துக் கொள்ளும்போது என்ன பிரச்சினை வந்துவிடப் போகின்றது. ஞானசாரர் அத்துரலிய போன்றோர் தமது சமய கலாசார விடயங்களுக்கு முக்கியம், முன்னுரிமை அளித்து மக்களை சீரிய குணங்களும் வாழ்க்கை நெறிகளும் உடையவர்களாக மாற்ற உதவி செய்தல் மிக முக்கியமானது. மத குருமார்களின் ஆகக்கூடிய பணி அதுவாகத்தான் இருக்க முடியும். மக்களுக்கு மத்தியில் விதண்டாவாதம் பேசிக்கொண்டு திரிவதையும் ரௌடித்தனம் காட்டுவதையும் சமூகங்களின் சௌஜன்னிய வாழ்க்கையினை சீர்குலைக்கக்கூடிய கட்டமைப்பினுள் இவர்கள் தொடர்ந்து இருப்பதையும் கைவிட வேண்டும். இச் செயற்பாடுகள் நம் நாடு பொருளாதாரத்தை மட்டுமல்ல சர்வதேச அரங்கில் எமக்கு இருக்கக்கூடிய நற்பெயருக்கு அபகீர்த்தியையும் ஏற்படுத்தக்கூடியது மாத்திரமன்றி சர்வதேச நாடுகள் மூலம் கிடைக்கக்கூடிய பொருளாதார நலன்களையும் இழக்கக்கூடிய தன்மையையும் ஏற்படுத்தும். இவர்களைப் போன்றவர்களுக்கு workshop, Refresher course, Field work போன்ற திட்டமிட்ட பயிற்சி நெறிகளை வழங்கி சமூகமயப்படுத்தல் மிக முக்கியமானதாகும்.

    ReplyDelete
  2. மிகவும் தந்திரமான பேச்சு. வாசுதேவ பெளத்த இனவாதத்தை எதிர்க்கிறார். இப்படி ஒரு நியாயமான மனிதனே “இஸ்லாமிய அடிப்படைவாதம் மதவாதத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்பது அனைவரதும் கோரிக்கையாகும்” என்கிறார் என நாட்டுமக்களையும் உலகத்தை கவனிக்க வைக்கும் பேச்சு. செய்யவேணும் ஆனா வினை சுத்தமா செய்ய வேணும் என்பதுதான் அவரது பேச்சின் அடிப்படை. இது போர் முடிந்த கையோடு மகிந்த தரப்பு உருவாக்கிய நிகழ்ச்சி நிரலாகும்.

    ReplyDelete

Powered by Blogger.