Header Ads



கல்முனையை க‌ள்ள‌த்த‌ன‌மாக‌ அப‌க‌ரிக்க‌ முய‌லும், க‌ப‌ட‌த்த‌ன‌ தீர்வை கிழ‌க்கு முஸ்லிம் கூட்ட‌மைப்பு நிராகரிப்பு

க‌ல்முனையை மூன்றாக‌ பிரிப்ப‌த‌ற்காக‌ கிழ‌க்கு த‌மிழ‌ர் கூட்ட‌மைப்பினால் முன்வைக்க‌ப்ப‌ட்ட‌ யோச‌னைக‌ளை முற்றாக‌ நிராக‌ரிப்ப‌துட‌ன் இத்தீர்வுக‌ள் பிர‌ச்சினையை புரிந்து கொள்ளாம‌ல் முன்னெடுக்க‌ப்ப‌டும் சின்ன‌த்த‌ன‌மான‌வையாகும் என‌ கிழ‌க்கு முஸ்லிம் கூட்ட‌மைப்பு தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி இன்று கிழ‌க்கு முஸ்லிம் கூட்ட‌மைப்பு தெரிவித்துள்ள‌தாவ‌து,

கிழ‌க்கு த‌மிழ‌ர் அமைப்பு என்ற‌ புதிய‌தொரு பெய‌ரில் அத‌ன் த‌லைவ‌ர் த‌. கோபால‌கிருஷ்ணன் என்ப‌வ‌ரால் க‌ல்முனை உப‌ பிர‌தேச‌ செய‌லாள‌ரிட‌ம் முன்வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ க‌ல்முனை பிர‌ச்சினைக்கான‌ தீர்வு என்ப‌து வெறும் ந‌கைப்புக்கிட‌மாக‌வுள்ள‌து.

க‌ல்முனை உப‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் என்ப‌து நில‌த்தொட‌ர்ப‌ற்ற‌து என்ப‌தையும் அது ஒரு த‌ற்காலிக‌ தீர்வு என்ப‌தையும் ஏற்றுக்கொள்கிறார்க‌ள்.

க‌ல்முனை வடபகுதியில் அமைந்த கிராம சேவகர்களில் தமிழ்ப் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய கிராம சேவகர்கள் கல்முனை வடக்கு உப செயலகத்திற்குப் பொறுப்பான உதவி அரசாங்க அதிபரின் கீழும் முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய கிராம சேவகர்கள் பிரதான அலுவலகத்திற்குப் பொறுப்பான  (கல்முனை) உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரம் படைத்த  அரசாங்க அதிபரின் கீழும் கடமையாற்றப் பணிக்கப்பட்டனர். இந்த ஏற்பாடு அன்றிருந்த களநிலையில் ஒரு தற்காலிக ஏற்பாடே தவிர இது வழமையான அல்லது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிருவாக ரீதியான நடைமுறை அல்ல.

 கிழ‌க்கு த‌மிழ் கூட்ட‌மைப்பு த‌ன‌து அறிக்கையில் இவ்வாறு   தெரிவித்துள்ள‌ன‌ர்.

அதேவேளை கல்முனை வடக்கு எனக் குறிக்கப்படும் உப பிரதேச செயலகப் பிரிவு எல்லைக்குள் தற்போது 15 முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகள் மேலே குறிப்பிடப்பட்ட 29 தமிழ்ப் பெரும்பான்மைக் கிராமசேவைகள் பிரிவுகளுக்கும் மேலதிகமாக உள்ளன. இவற்றிற்குப் பொறுப்பான கிராம சேவகர்கள் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதான பிரதேச செயலகப் பிரிவுக்குப் (கரவாகுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவு அல்லது கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவு) பொறுப்பான அதிகாரம் படைத்த பிரதேச செயலாளரின் கீழ் கடமையாற்றுகின்றனர்.

இந்த 15 முஸ்லிம் பெரும்பான்மை கிராம சேகர் பிரிவுகளும் தற்போது பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவு, மருதமுனை, நற்பிட்டிமுனை முஸ்லிம்பிரிவு மற்றும் இஸ்லாமாபாத் ஆகியவற்றில் பூகோளரீதியாக நிலத்தொடர்பற்ற வகையிலே அடங்கியுள்ளவை.

இவ்வாறு க‌ல்முனையை த‌மிழ் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் கிழ‌க்கின் அதிகார‌த்திலிருந்த‌ போது நில‌த்தொட‌ர்ப‌ற்ற‌ முறையில் அமைக்க‌ப்ப‌ட்ட‌தே த‌ற்போதைய‌ க‌ல்முனை உப‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் என்ப‌து இந்த‌ அறிக்கை மூல‌ம் தெரிகிற‌து. ஆனாலும் இத‌ற்கு தீர்வு என‌ வ‌ரும் போது  தீர்வை கிழ‌க்கு த‌மிழ் கூட்ட‌மைப்பு முன் வைத்திருப்ப‌து சிரிப்பை த‌ருகிற‌து.

இத‌ன் ப‌டி சுருக்க‌மாக‌ சொல்ல‌ப்போனால் க‌ல்முனைக்குடிக்கு ம‌ட்டும் த‌னியான‌ செய‌ல‌க‌த்தை கொடுத்து விட்டு 99 வீத‌ம் முஸ்லிம்க‌ளின் நில‌ங்க‌ளும் வ‌ர்த்த‌க‌ நிலைய‌ங்க‌ளும் உள்ள‌ க‌ல்முனை ந‌க‌ரை க‌ள்ள‌த்த‌ன‌மாக‌ அப‌க‌ரிக்க‌ முய‌லும் க‌ப‌ட‌த்த‌ன‌மான‌ தீர்வையே கிழ‌க்கு த‌மிழ் கூட்ட‌மைப்பு முன் வைத்துள்ள‌து. இத்தீர்வை கிழ‌க்கு முஸ்லிம் கூட்ட‌மைப்பு முற்றாக‌ நிராக‌ரிப்ப‌துட‌ன் க‌ல்முனையை மூன்றாக‌ பிரிப்ப‌தாயின் பின் வ‌ரும் தீர்வை முன் வைக்கிற‌து.

1. க‌ல்முனை ஸாஹிரா முத‌ல் தாள‌வெட்டுவான் வ‌ரை க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌ஜ‌மாக‌ இருக்கும். இது நில‌த்தொட‌ர்புள்ள‌தாக‌வும் த‌மிழ்,  முஸ்லிம் என்ற‌ இன‌ரீதிய‌ற்ற‌ முறையிலும் இருக்கும். இத‌ற்குள் ந‌ற்பிட்டிமுனையும் வ‌ய‌ல் வெளியூடான‌ நில‌த்தொட‌ர்புட‌ன் வ‌ரும்.

2. தாள‌வெட்டுவான் ஆர‌ம்பிக்கும் பாண்டிருப்பு முத‌ல் சேனைக்குடியிருப்பு, ம‌ண‌ச்சேனை ஆகிய‌ நில‌த்தொட‌ர்புள்ள‌ இட‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌ பாண்டிருப்பு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் அல்ல‌து க‌ல்முனை வ‌ட‌க்கு செய‌ல‌க‌ம்.

3. ம‌ருத‌முனை நீலாவ‌ணையை இணைத்து ம‌ருத‌முனை செய‌ல‌க‌ம்.

இத்தீர்வையே உல‌மா க‌ட்சியும் 2010ஆம் ஆண்டு க‌ல்முனையில் ந‌டைபெற்ற‌ ஊட‌க‌ மாநாட்டில் தெரிவித்து ஊட‌க‌ங்க‌ளிலும் வெளிவ‌ந்த‌து. க‌ல்முனையில் நில‌த்தொட‌ர்புள்ள‌ செய‌ல‌க‌ங்க‌ளும் இன‌ ரிதீய‌ற்ற‌ முறையில் ஏற்ப‌டுத்த‌க்கூடிய‌ செய‌ல‌க‌ங்க‌ளும் உருவாக‌ மேற்ப‌டி தீர்வையே கிழ‌க்கு முஸ்லிம் கூட்ட‌மைப்பு முன் வைக்கிற‌து.

6 comments:

  1. மூனாக பிரிப்பது அவர்களின் பகல் கனவு.பாவம் கனவிலாவது அனுபவிக்கட்டும் விட்டு விடுங்கள்

    ReplyDelete
  2. கிழக்கு முஸ்லிம் கூட்டமைப்பும் கிழக்கு தமிழ் கூட்டமைப்பும் விவாதங்களூடாக ஒரு தீர்வை நோக்கி முன்னேறவேண்டும். தமிழ் பயங்கர வாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள் என சன்னதங்கொள்ளுவதில் எந்த நன்மையுமில்லை. முஸ்லிம்கள் விவாதங்களில் இருந்து தமிழரையும் தமிழர் முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கே “பயங்கர வாதிகள்” என்கிற பதம் உதவும். போருக்குக்கு முந்திய நிலை வேறு. தமிழரோ முஸ்லிம்களோ விவாதத்தில் இருந்து வெளியேற்றபடுகிறவர்களுக்கு சிங்கள பெளவுத்தர்கள்தான் அடுத்த தெரிவு. எனவே போர்ச் சன்னதத்தை விட்டுவிட்டு மனங்களை வெற்றிபெறும் விவாதங்களில் கல்முனை தமிழர் கூட்டமைப்பும் முஸ்லிம்கள் கூட்டமைப்பும் ஈடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இன்னும் நீண்ட நாட்கள் இந்த பிரச்சினை இழுபடாது என்பது

    ReplyDelete
  3. கிழக்கு முஸ்லிம் கூட்டமைப்பும் கிழக்கு தமிழ் கூட்டமைப்பும் விவாதங்களூடாக ஒரு தீர்வை நோக்கி முன்னேறவேண்டும். தமிழ் பயங்கர வாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள் என சன்னதங்கொள்ளுவதில் எந்த நன்மையுமில்லை. முஸ்லிம்கள் விவாதங்களில் இருந்து தமிழரையும் தமிழர் முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கே “பயங்கர வாதிகள்” என்கிற பதம் உதவும். போருக்குக்கு முந்திய நிலை வேறு. தமிழரோ முஸ்லிம்களோ விவாதத்தில் இருந்து வெளியேற்றபடுகிறவர்களுக்கு சிங்கள பெளவுத்தர்கள்தான் அடுத்த தெரிவு. எனவே போர்ச் சன்னதத்தை விட்டுவிட்டு மனங்களை வெற்றிபெறும் விவாதங்களில் கல்முனை தமிழர் கூட்டமைப்பும் முஸ்லிம்கள் கூட்டமைப்பும் ஈடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இன்னும் நீண்ட நாட்கள் இந்த பிரச்சினை இழுபடாது என்பது தெளிவாக இருப்பதால் பயனுள்ள வகையில் இந்த உரையாடல் நிகழவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. Dear all of u
    We are Tamil speaking peoples not any defernt so kalmunai should devide by two divition and both should be with mixed community as equalnt and don't worry about the
    Boundry

    ReplyDelete
  5. Rizad தெற்க்கே தரவை பிள்ளையார் கோவில் தொடக்கம் வடக்கே தாழவட்டுவான் சந்திவரை தமிழரின் கட்டு பாட்டில்தான் இருக்கு இந்த பகுதிதான் நகர்ப்பகுதி உங்களால் எந்த அணியையும் பிடுங்க முடியாது வைக்கோல் பட்டறையை நாய் காவல் பார்ப்பதுபோல் உங்களால் சில விடயங்களை செய்யலாமே ஒழியே உங்களால் எந்த அணியையும் பிடுங்க முடியாது.

    ReplyDelete
  6. போடா பகுத்தறிவு புண்ணாக்கு.

    ReplyDelete

Powered by Blogger.