Header Ads



எதிர்க்காலத்தில் என்ன நடக்கின்றது, என்று பொறுத்திருந்து பாருங்கள் - பொன்சேகா

நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அது அவ்வாறு அல்ல உடனடியாக இதனை ஒருபோதும் நிறுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு 8-9 வருடங்களாவது தேவை.

நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உடனடியாக இதனை ஒருபோதும் நிறுத்த முடியாது.

என்னைப்பொறுத்தவரை பயங்கரவாதத் தாக்குதலொன்றை தடுக்கக்கூட இன்னும் இரண்டு வருடங்கள் தேவைப்படுகிறன.

அப்படியானால், பயங்கரவாதத்தையே முற்றாக இல்லாதொழிக்க எப்படியும் இன்னும் 8 அல்லது 9 வருடங்களாவது வேண்டும். எனினும், நான் கூறுவதை இன்று எவரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

தயாசிறி ஜயசேகர போன்றோர் பயங்கரவாதம் தொடர்பில் எனக்கு பாடம் கற்பிக்கவே தற்போது முற்படுகிறார்கள்.

எனவே, எதிர்க்காலத்தில் என்ன நடக்கின்றது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Are you in sense. Before in front of Media He told he need only 1 or 2 years to control/Stop terrorism of Srilanka. Now telling 8 or 9 nine year. Two different statement.
    Anyway he is becoming/Became a good politician now....

    ReplyDelete

Powered by Blogger.