Header Ads



ஹரீஸ் பதவி துறந்தமை, முஸ்லிம்களின் நன்மதிப்பை காப்பாற்றியது - இன்று சூழல் மாற்றமடைந்து வருகிறது - ஜெயபாலன்

நன்றி அன்புள்ள ஹாரீஸ் அவர்களே.

பெருமதிப்புக்குரிய இளம் தலைவர் ஹாரிஸ் அவர்களுக்கு, நீங்கள் எனக்கு எழுதிய பதில் அறிக்கைக்கு நன்றிகள்.

நீங்கள் துணிச்சலுள்ள தீவிரமான செயற்பாட்டாளர், நேர்மையானவர் என்பதை அறிவேன். 

கல்முனை போன்ற பிரச்சினைகளில் உங்களை உள்ளடக்கி உங்களோடு பேசி ஒரு முடிவெடுத்தால் அது தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் நிரந்தரமான உறவுக்கும் நன்மைகளுக்கும் வழிவகுக்கும் என்பதை எப்போதும் உணர்ந்தே இருந்தேன், கடினமானது எனினும் கிழக்கின் நலன்கருதி நீங்களும் கோடீஸ்வரனும் வியாழேந்திரனும் புதிய சூழலில் சந்தித்துப் பேசவேண்டுமென்றும் தொடர்ந்து தொடர்பாலலை பராமரிக்க வேண்டுமென்றும் எப்பவும் விரும்புகிறேன்

அன்று நீங்கள் பதவி துறந்தமை முஸ்லிம் மக்களின் நலன்களையும் நன்மதிப்பையும் காப்பாற்றியுள்ளது. ஆனால் இன்று சூழல் மாற்றமடைந்து வருகிறது. இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் முன்னுதாரணமற்ற சவால்களை புரிந்து கொள்வது இலகுவாய் இல்லை. தற்போது சவூதி அரேபியாவிலும் தென்னிந்தியாவிலும் இடம்பெற்றுள்ள கைதுகள் இலங்கையுடன் தொடர்பு படுத்தப் படுகிறது வேதனை தருகிறது. இது சர்வதேச தலையீடுகளின் வடிவத்தையும் மட்டத்தையும் மாற்றக்கூடும். மேலும் ஜனாதிபதி தேர்தல் வருகிறது. இந்த புதிய சிகல்களை கட்ச்சியோடும் முஸ்லிம் தலைவர்களும் புதிதாக விவாதிக்க வேண்டும். 

கடந்த காலத்தில் பதவி துறப்பு காலத்தின் தேவையாக இருந்தது. தென்னாசிய பரிமாணமுள்ள இன்றய சவால்கள் புதிய நிலையை உருவாக்கியுள்ளது. சர்வதேச தலையீடுகள் அதிகரிக்க உள்ளது. நீங்களும் உங்கள் சகாகளும் அமைச்சுகளில் பங்குபற்றுவது புதிய சூழலை சமாளிக்க அவசியமாயிருக்கலாம்.வேகமாக மாறிவரும் சூழலில் இன்று சரியாக தோன்றும் முடிவு நாளை பிழையாகிவிடலாம். நாடாளுமன்றத்தில் உங்கள் பங்குபற்றுதலும் உங்களுக்கும் தமிழர் கூட்டமைப்புக்கும் மலையக= ஜனநாயக ஐக்கிய முன்னணிக்கும் இடையிலான ஐக்கியமும் இன்றைய சூழலில் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி அனைத்து தமிழ் பேசும் மக்கள் நலன்களுக்கும் அவசியமாக உள்ளது. 

கட்ச்சி மட்டத்தில் உங்கள் கருத்துக்களை முன்வைத்து விவாதித்து கட்ச்சி எடுக்கும் முடிவை ஏற்றுகொள்ளுங்கள். தமிழர் மலையக தமிழர் சிங்கள ஜனநாயக சக்திகளுக்கிடையிலான ஐக்கியம் ஓங்க பணிபுரியுங்கள். 

என்றும் உங்கள் நட்பை நாடும் 

கவிஞன்- வ.ஐ.ச. ஜெயபாலன் கவிஞன்  

V.I.S. Jayapalan (Poet)
India

No comments

Powered by Blogger.