Header Ads



கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலில், நினைவுப் படிகம் திர நீக்கம் செய்யும் நிகழ்வு


(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை மண்ணின் வரலாறுகளை, அதன் தொன்மைகளை ஆவணப்படுத்தும் முயற்சியின் அங்கமாக கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் , கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் தர்கா நிருவாகத்தின் ஏற்ப்பாட்டில்  கல்முனை மரபுரிமை ஆய்வு வட்டம் இணைந்து   வரலாற்றுச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல்  தொடர்பான  அறிமுகம் கொண்ட நினைவுப் படிகம் திரை நீக்கம் செய்யும் நிகழ்வு  இன்று  20.07.2019    இரவு 8.00 மணிக்கு பள்ளிவாசல் முன்றலில்  நடைபெற்றது

 மெளலவி அல்ஹாஜ் பி. எம்.ஏ.ஜலீல் தலைமையில் இவ் வைபவம் இடம்பெற்றது

இந் நிகழ்வில் கல்முனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம்மற்றும் பொது நிறுவனங்களின் தலைவர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் ,உலமாக்கள் ,மரபுரிமை ஆய்வு வட்ட உறுப்பினர்கள் புத்திஜீவிகள்,நலன்விரும்பிக்கள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தின் கல்முனை மாநகரில் பழமை வாய்ந்த  வரலாறு கொண்ட  புராதனம் மிக்கதாய் இவ்  கடற்கரைப் பள்ளிவாசல் காணப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.