Header Ads



இறைவன் கொடுக்க நினைப்பதை, யாராலும் தடுக்க முடியாது (உண்மைச் சம்பவம்)

ரெயின்கோ நிறுவனத்தின் ஸ்தாபகர் பௌஸ் ஹாஜியாரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாள் யூடுயூப் இல் காணக்கிடைத்தது. முழுமையாக உணர்வு பூர்வமாக பார்த்து முடித்தேன். கண்களில் கண்ணீர்த்துளிகளை கைகளால் துடைத்தவனாக அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை கதிரையில் அமர்ந்து சிந்தித்தேன்.

மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர், தன்னுடைய தாய் வசதி படைத்தவர்களின் வீடுகளுக்கு சென்று வேலை செய்பவள், வேலை செய்யும் நாட்களில் தன்னுடைய தாயை காண்பபதற்கு வெட்கத்தினால் அந்த வீட்டின் பின் கதவால் செல்வாராம் காரணம் சக மாணவர்கள் கேலி செய்வார்கள் என்று, ஆரம்பத்தில் சொந்த வீடு கூட இல்லாமல்நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர். பசியின் கொடுமையால் தன்னுடைய தங்கை உண்ண உணவில்லாமல் மரணித்து விட்டார் என்று சொல்லி அழுகிறார். அந்த நொடி எந்ந கல் நெஞ்சமும் கரைந்து விடும்.

சிறுவயதில் மரம் ஏறுவதே அவருடைய தொழில், 

சில நாட்களின் பின் ஒரு வழிப் பயணச்சீட்டோடு கொழும்பிற்கு தொழிற் தேடி சென்றவர், சாதாரண தரப் பரீட்சை கூட சித்திபெறவில்லை, கொழும்பில் ஆரம்பகாலத்தில் ஹோட்டல்களில் வெயிற்றராக வேலை செய்தது, சில்லரைக்கடைகளில் வேலை செய்தது, தெருவோரங்களில் சிறிய இலாபங்களுக்காக பொருட்களை விற்றது என அவருடைய ஆரம்ப கால வாழ்க்கை அனுபவங்களை கொட்டித் தீர்க்கின்றார்.

பின்பு அவருடைய முயற்சியினால் சில ஊழியர்களோடு அவருடைய Rainco நிறுவனத்தை ஸ்தாபிக்கிறார். அல்லாஹ்வின் உதவியுடன் பாரிய அளவில் வளர்ச்சியடைந்து இன்று இந்த முழு இலங்கையுமே திரும்பி பார்க்கும் அளவு செல்வத்திலும் நற்பண்பிலும் உயர்ந்து நிற்கிறார். அவருடைய பேச்சில் ஓரிடத்தில் "இறைவன் ஒரு காலத்தில் எனக்கு வறுமையை தந்து சோதித்தான் இன்று செல்வத்தை தந்து சோதிக்கிறான்" என்று சொல்கிறார் அந்த நொடி இறைவன் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் எப்படி மாற்றுகிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

சாதாரண தரம் கூட சித்தியடையவில்லை என்று கேலி செய்தவர்களின் முன்னால் பல பட்டங்களை பெற்ற கல்விமான்களை தனக்கு கீழே ஊழியர்களாக வைக்குமளவுக்கு சக்தியை கொடுத்திருக்கிறான் இறைவன்.

பயின் கொடுமையால் அன்று தங்கையை இழந்தவருக்கு போதும் என்கின்ற அளவுக்கு மற்றவருக்கு உணவை கொடுக்கும் சக்தியை கொடுத்திருக்கிறான் இறைவன்.

அன்று எந்த மனிதர்களின் வாயினால் தூற்றப்பட்டாரோ இன்று அதே மனிதர்களின் வாயினால் போற்றப்படுகிறார். எந்த கைகளால் துரத்தப்பட்டாரோ அதே கைகளால் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது.

இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது.!

ஒரு சிறந்த முயற்சியாளனாக இவ்வுலகில் எமது மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பணம் பணம் என்று பேசுபவர்களே இதுவும் கடந்து போகும்.

பௌஸ் ஹாஜியார் உண்மையில் பல ஏழைகளின் ரோல் மொடல்...

Sanoon Mohamed

3 comments:

  1. இதுதான் அல்லாஹ்,அவன் நாடியவர்கலுக்கு கொடுப்பான்,யாராலும் அதை ஒரு போதும் தடுக்க முடியாது.அதேபோல்தான் உலகம் அல்லாஹ்வினால் அழிக்கப்படும் வரை Islam மார்கத்தை எந்த ஒரு சக்தியாலும் அழித்து விடவும் முடியாது.அழிக்க நினைப்பவர்கலின் கண்முன் அல்லாஹ் பல மடங்காக்கி காட்டுவான்.

    ReplyDelete
  2. This man is a true example to all Sri Lankans. but, now one man show has gone down by cooperative culture and company enterprise. All what we need is corporate or company style economic and business enterprise.. Islamic finance is blamed by many economists for failure to develop cooperation, companies and collective business enterprise.in Sri Lanka too Muslim have family business not company business. Are we greedy people who do not like share profits. or Are self-fish people who do not like share business tricks. Now, as a result of family based business we are losing all

    ReplyDelete

Powered by Blogger.