Header Ads



தோல்வி அடைந்தது கவலையாக இருக்கிறது. கோலி, தோனி 7 வது இடத்தில் களமிறங்கியது ஏன்..?

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் 240 ரன்கள் எனும் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்ய முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது இந்திய அணி.

இந்தியா அணியின் மூன்று தொடக்க வீரர்களும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவருமே 32 ரன்களில் மிச்செல் சான்ட்னரின் பந்தில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு வீழ்ந்தனர்.

போட்டி முடிந்து கோலி செய்தியாளர்களிடம் பேசினார்.

''நாங்கள் நியூசிலாந்தை சேசிங் செய்யக்கூடிய இலக்குக்குள் சுருட்டிவிட்டோம் என்றே எண்ணினோம். ஆனால் அவர்கள் முதல் அரை மணி நேரம் பந்து வீசிய விதம்தான் இந்தப் போட்டியில் எங்களுக்கும் அவர்களுக்குமான வித்தியாசமாக அமைந்தது. எங்களுக்கு நேற்றைய தினம் நல்ல தினமாக அமைந்தது. அதில் பெருமை கொண்டோம். காலையில் நன்றாகவே பந்து வீசினோம்.

நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கே எல்லா புகழும். அவர்கள் புதுப் பந்தை சரியான இடத்தில் வீசினார்கள். அவர்களிடம் காணப்பட்ட அந்த செயல்திறன்தான் அந்த அணி வெற்றி பெற வழி வகுத்தது.

ரிஷப் பந்த் இளையவர். அவர் இனி கற்றுக்கொள்வார். நானும் இளம் வயதில் இது போன்ற சூழலில் தவறு செய்திருக்கிறேன்.

வெளியில் இருந்து நாம் இதைச் செய்திருக்கலாம் அதைச் செய்திருக்கலாம் என சொல்வது எளிதாகவே இருக்கக்கூடும். ஏனெனில் ஒரு தோல்வி சில விஷயங்களைப் பற்றி பேச வைக்கும். அதை நாங்கள் அறிந்தே வைத்திருக்கிறோம்.

இந்தப் போட்டியில் 45 நிமிடம் நாங்கள் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினோம். இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் நன்றாக விளையாடினோம். ஆனால் ஒரு சிறிய தவறு எங்களை தொடரில் இருந்தே வெளியேற்றி விட்டது'' என்றார்.

உலகக்கோப்பையில் பிளே ஆஃப் வைக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, '' நான் இந்த கோணத்தை வரவேற்கிறேன். நாங்கள் நீண்டதொரு தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தோம். ஆனால் ஒரு சிறு பகுதியில் மோசமான ஆட்டத்தால் வெளியேற்றப்பட்டோம். யாருக்குத் தெரியும் எதிர்காலத்தில் பிளேஆஃப் குறித்து என்ன வேண்டுமானாலும் முடிவு செய்யப்படலாம். அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் போன்றவை சவாலானவை. உங்களது நாளாக அமையாமல் போனால் தோல்விதான்'' என்றார்.

தோனியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேசும்போது ''ஜடேஜா ஒருமுனையில் நன்றாக விளையாடிக்கொண்டிருந்தார். ஒரு விக்கெட் விழுந்தாலும் புவனேஷ்வர் குமார் முதலான பந்துவீச்சாளர்கள்தான் களமிறங்க முடியும் என்ற நிலை. அந்த சூழலில் ஜடேஜாவுக்கு ஏற்றபடி தோனி சிறப்பான பங்களிப்பை வழங்கினார் என்பதே என் கருத்து'' என்றார் கோலி.

'' தோனி கடைசி சில ஓவர்களில் இறங்கி ரன்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதே அவருக்கான வேலை. சூழலுக்கு தகுந்தவாறு அவரை வெவ்வேறு இடத்தில் களமிறக்க முடிவு செய்திருந்தோம் இந்த போட்டியில் தோனிக்கு கொடுக்கப்பட்ட பாத்திரம் அவர் ஏழாம் நிலையில் களமிறங்கி ரன்களை சேர்க்க வேண்டும் என்பதே'' என இந்திய அணித் தலைவர் விராட் கோலி கூறினார்.

'' நாங்கள் தோல்வி அடைந்தது கவலையாக இருக்கிறது. எனினும் நாங்கள் எங்களுக்கு இந்தத் தொடர் மோசமாக அமையவில்லை. பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ரோகித் ஷர்மா அதிசிறப்பாக விளையாடினார். கடைசி இரண்டு போட்டிகளில் ஜடேஜாவின் ஆட்டம் அபரிதமாக இருந்தது. இளையவர்கள் நிறைய கற்றுக்கொண்டனர். பாசிட்டிவ் அம்சங்களை வைத்து நகர வேண்டும்.

மற்றொரு அரை இறுதி போட்டி மற்றும் இறுதி போட்டியில் யார் வெல்வார் என்ற கேள்விக்கு, அந்த நாளில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களே வெல்வார்கள். என்னால் குறிப்பிட்டு இந்த அணிதான் வெல்லும் என சொல்ல முடியாது என்றார் கோலி.

4 comments:

  1. இறுமாப்பு அதிகமானால் இதுதான் இறுதி முடிவு.

    ReplyDelete
  2. Well Done India,
    Semi final வரை முன்னேறிய ஒரே ஒரு ஆசிய நாடு இந்தியா மட்டுமே.

    உலக போட்டி தொடர்களில், இந்தியா பாக்கிஸ்னுடன் விளையாடிய அனைத்து 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    பாக்கிஸ்தான் பயங்கரவாத கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு, இந்திய கலாச்சாரத்திற்கு அல்லது மேற்கத்திய கிருஸ்தவ கலாச்சார்த்திற்கு மாற வேண்டும், இல்லாவிட்டால் பொருளாதாரம் விளையாட்டு எல்லாம் தோல்விதான்


    ReplyDelete
  3. நீங்கள் தோற்றது உங்களுக்கு கவலை ஆனால் உலகிற்கே சந்தோஷம்

    ReplyDelete
  4. குரைக்கின்ற அந்தோணிக்கு கரணம் எதற்கு தன் நிழல் பார்த்து தானே குரைக்கும்.
    * அந்தோணியாரே! கிறிஸ்துவத்தின் படி, கோடரி கொத்து வாங்கிய பிரபாகரன், சொர்கவாதியா? நரகவாதியா?
    * தமிழீழம் முடியவில்லை, ஒரு தமிழனையாவது cardinal பதவிக்கு வரமுடிகிறதா? LOL

    ReplyDelete

Powered by Blogger.