Header Ads



ஐ.தே.க.யிலும் 5 ஜனாதிபதி வேட்பாளர்கள் தயார் - சம்பிக்கவும் ஒருவர்

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பிலும் இரண்டு உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் தொடர்பில் இன்று செய்தியாளர்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இக்கேள்விக்குப் பதில் வழங்கிய அவர்,

ஜனாதிபதி வேட்பாளர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் காணப்படுகின்றனர். அவர்களின் பெயர்கள் அனைத்தும் முன்மொழியப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, பாட்டளி சம்பிக்க ரணவக்க, தயா கமகே மற்றும் கரு ஜயசூரிய ஆகிய ஐந்து பேரின் பெயர்கள் இதற்காக முன்வைக்கப்பட்டுள்ளது. சரியான முடிவினை விரைவில் எடுப்போம் என்று பதில் வழங்கியுள்ளார்.

No comments

Powered by Blogger.