Header Ads



நவீன் திசா­நா­யக்க வில­கினால் எ­ன்ன, வில­கா­விட்டால் என்ன? 50 ரூபா கொடுக்காவிட்டால் பத­வி துறப்பேன் - திகா


நாட்டு மக்கள் எதிர்­பா­ர்த்­துள்ள  ஜனாதி­பதித் தேர்­தலில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவும் இணைந்து செயற்­பட்டால் ஐக்­கிய தேசிய கட்சி  நிச்­சயம் வெற்றி பெறும்.

இன்னும் ஒரு மாத காலத்­துக்குள் 50 ரூபாவைப் பெற்றுக் கொடுப்பேன். அவ்­வாறு முடி­யா­விட்டால் எனது அமைச்சுப் பதவியை தூக்கியெறிந்துவிட்டு மக்­க­ளோடு மக்­க­ளாக இருப்பேன் என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்­ச­ரு­மான பி. திகாம்­பரம் தெரி­வித்தார்.

அட்டன் செனன் வெலி­ஓயா தோட்­டத்தின் ஊடாக வட்­ட­வளை நக­ருக்குச் செல்லும் 9.28 கிலோ மீற்றர் பாதை 32 கோடி ரூபா செலவில் “கார்பெட் போடப்­பட்டு நேற்று  மக்கள் பாவ­னைக்கு திறந்து வைக்­கப்­பட்­டது. மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் தலை­மையில் நடை­பெற்ற திறப்பு விழாவில் ஐ.தே.க. தவி­சா­ளரும், நெடுஞ்­சா­லைகள் மற்றும் வீதி அபி­வி­ருத்தி, பெற்­றோ­லிய வள அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம் பிர­தம அதி­தி­யாகக் கலந்துகொண்டார். இதில் தலைமை வகித்து உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

தோட்டப் பகு­தி­களில் பாதைகள் கார்பெட் போட்டு செப்­ப­னி­டப்­ப­டு­வது ஐ.தே.க ஆட்­சியில்தான் என்­பதை சொல்லத் தேவை­யில்லை. கடந்த அர­சாங்­கத்தின் காலத்தின் பாதைகள் “கார்பெட்” செய்­யப்­பட்ட போதிலும் அவை தோட்டப் பகு­தி­களில் இடம்­பெ­ற­வில்லை. 

அந்த வேலைத்திட்­டத்தை ஐ.தே.க. தான் தோட்­டங்­களில் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அதேபோல், தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தலா 07 பேர்ச் காணியில் தனி வீடுகள் அதற்­கான காணி உறுதிப் பத்­தி­ரங்கள், பிர­தேச சபைகள் அதி­க­ரிப்பு, பிர­தேச செய­ல­கங்கள் மற்றும் மலை­ய­கத்­துக்­கான தனி­யான அபி­வி­ருத்தி அதி­கார சபை என பல வேலைத் திட்­டங்கள் இன்­றைய நல்­லாட்சி அர­சாங்­கத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வுக்­காக பல்­வேறு போராட்­டங்கள் நடத்­தப்­பட்டு கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. எனினும், தொழி­லா­ளர்கள் எதிர்­பார்த்த சம்­பள உயர்வு கிடைக்­காமல் ஏமாற்­றப்­பட்­டுள்­ளார்கள். இதை அர­சாங்­கத்­தி­டமும் பிர­த­ம­ரி­டமும் சுட்டிக்காட்­டியபோது, மேல­தி­க­மாக நாளாந்தம் 50 ரூபாவை வழங்­கு­வ­தற்கு இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டது. அமைச்சர் நவீன் திசா­நா­யக்­கவும் இணக்கம் தெரி­வித்­தி­ருந்தார். 

எனினும், கடந்த மே மாதம் வழங்­கு­வ­தற்கு ஏற்றுக் கொள்­ளப்­பட்ட 50 ரூபா மேல­திகக் கொடுப்­ப­னவும் இன்றுவரை வழங்­கப்­ப­ட­வில்லை. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.பி. ரட்­நா­யக்க 50 ரூபா வழங்க முடி­யாது என தெரி­வித்­துள்ளார். அதே­போன்று அமைச்சர் நவீன் திசா­நா­யக்க 50 ரூபா தரு­வ­தாக இருந்தால் அமைச்சுப் பத­வியை விட்டு விலகப் போவ­தாகக் கூறு­கின்றார். 

அவர் வில­கினால் எனக்­கென்ன? வில­கா­விட்டால் எனக்­கென்ன? எமது மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­தது போல, இன்னும் ஒரு மாத காலத்­துக்குள் 50 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன். 

அவ்­வாறு முடி­யா­விட்டால் எனது அமைச்சுப் பத­வியை தூக்கியெறிந்துவிட்டு மக்­க­ளோடு மக்­க­ளாக இருப்பேன். எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும்போது, ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். அவ்வாறு இணைந்து செயற்படும்போது கடந்த முறையைவிட அதிகமான வாக்குகளை பெற்றுக்கொடுப்போம் என்றார்.

1 comment:

  1. சில மாதங்களாக அமைச்சர் நவீனின் பேச்சுக்கல் சிறுபான்மையினர்க்கு எதிராக உள்ளது.மிகம் வறுமையில் உள்ள அந்த மக்களுக்கு 50 ரூபா மேலதிகமாக கொடுப்பதால் என்ன பிரச்சினை

    ReplyDelete

Powered by Blogger.